October

கிறிஸ்து என் நண்பன்

October 25

“There is a friend that sticketh closer than a brother.” (Prov. 18:24b)

The friendship of Jesus is a theme that evokes a warm response in the hearts of His people everywhere. When He was on earth, He was derided as “a friend of publicans and sinners” (Mt. 11:19), but Christians have taken the taunt and converted it to a title of honor.

Before going to the cross, our Lord called His disciples “friends.” “Ye are my friends, if ye do whatsoever I command you. Henceforth I call you not servants; for the servant knoweth not what his lord doeth: but I have called you friends; for all things that I have heard of my Father, I have made known unto you” (John 15:14, 15).

Some of our best-loved hymns take up this theme; for example, “What a friend we have in Jesus”; “There’s not a friend like the lowly Jesus”; and “I’ve found a friend, oh, such a friend.”

Why does the friendship of Jesus strike such a responsive chord? I think the primary reason is that many people are lonely. They may be surrounded by other people, yet not surrounded by friends. Or they may be largely cut off from intercourse with others. This is often the case with older people who have outlived their contemporaries.

Loneliness is cruel. It is bad for a person’s physical, mental and emotional health. It gnaws away at his morale, sets his nerves on edge, and makes him weary of life. Often it drives people to desperation so that they are willing to compromise with sin or take other insane plunges. To such people the friendship of Jesus comes with the healing properties of the balm of Gilead.

Another reason why His friendship is so appreciated is that it never fails. Human mends often let us down or drift out of our lives, but this Friend proves true and steadfast.

Earthly friends may fail and leave us,
One day soothe, the next day grieve us;
But this Friend will ne’er deceive us. Oh, how He loves!

Jesus is the Friend who sticks closer than a brother. He is the Friend who loves at all times (Prov. 17:17).

The fact that the Lord Jesus is not bodily present with us does not set a limit on the reality of His friendship. Through the Word He speaks to us, and in prayer we speak to Him. It is in this way that He makes Himself real to us as the Friend we need. It is in this way that He answers the prayer,

Lord Jesus, make Thyself to me a living, bright reality;
More present to faith’s vision keen than any earthly object seen;
More dear, more intimately nigh than e’en the closest earthly tie.

ஒக்டோபர் 25

சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுண்டு. நீதிமொழிகள் 18:24

“கிறிஸ்து என் நண்பன்”

உலகம் எங்குமுள்ள கர்த்தருடைய மக்களின் உள்ளங்களில், இயேசு கிறிஸ்துவின் நட்பைப் பற்றிய பேச்சு கிளர்ச்சியைத் தூண்டிவிடுவதாயுள்ளது. “ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்” என்று அவர் எள்ளி நகையாடப்பட்டார். (மத்.11:19). ஆனால் கிறிஸ்தவர்களோ இந்த வசைச்சொல்லை கனத்திற்குரிய பட்டமாகக் கருதி மகிழ்கின்றனர்.

சிலுவைக்குச் செல்லும் முன்னர், நமது கர்த்தர் தமது சீடர்களை நண்பர்கள் என்று அழைத்தார். ‘நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறிய மாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவான் 15:14-15).

நாம் பாடுகிற பாடல்களில் “நட்பு2 கருப்பொருளாக அமைந்திருக்கிறது. ‘பாவசஞ்சலத்தை நீக்க பிராண சிநேகிதர் உண்டே” என்னும், ‘இத்தனை தாழ்மையுள்ள நண்பர் இயேசுவைத் தவிர வேறுயாருமில்லை” என்றும், ‘நான் நல்ல நண்பனைக் கண்டடைந்தேன்” என்றும் பாடுகிறோம்.

இயேசு கிறிஸ்துவின் நட்பு உடனடியாக நமதுள்ளத்தின் நரம்பினை இழுத்து முழக்கம் ஏற்படுத்துவதன் காரணம் என்ன? பலர் தனிமையில் வாடுவதே இதற்கு அடிப்படைக் காரணம் என்று எண்ணுகிறேன். அவர்களைச் சூழப் பலர் இருப்பினும் அவர்கள் நண்பர்கள் அல்லர். அல்லது மற்றவர்களோடு எவ்விதத் தொடர்பும் அற்றவர்களாக அவர்கள் இருக்கின்றனர். தங்களுடைய வயதிற்கு ஒத்தவர்கள் இறந்த பிறகும் வாழும் முதியவர்களுக்கு, இது பொருத்தமுடையதாக இருக்கிறது.

தனிமை மிகவும் கொடியது. ஒருவருடைய சரீர நலத்திற்கும், உளநலத்திற்கும், உணர்ச்சி நலத்திற்கும், தனிமை கேடு விளைவிக்கிறது. அவருடைய மனஉறுதி அசைக்கப்படுகிறது. நரம்புகள் சோர்ந்து போகின்றன. வாழ்க்கையில் அவர் களைப்பு அடைந்து விடுகிறார். மேலும், மனிதர்களை நம்பிக்கையற்ற நிலைக்கு இந்தத் தனிமை தள்ளிவிடுகிறது. ஆகவே அவர்கள் பாவத்துடன் ஒத்துப் போக சம்மதித்து, மதியீனமான செயல்களைச் செய்துவிடுகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு, கீலேயாத்திலிருந்து வருகிற பிசின் தைலம் போல, குணமாக்கும் நற்குணங்கள் அனைத்தையும் ஏந்தியவண்ணம் இயேசு கிறிஸ்துவின் நட்பு விரைந்து வருகிறது.

அவருடைய நட்பு இங்ஙனம் புகழப்படுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. அது ஒருபோதும் மாறாதது. மனிதர்களுடைய நட்பு அவ்வப்போது நம்மைக் கவிழ்த்து விடுகிறது. அல்லது நம்மை விட்டு விலகிச் சென்றுவிடுகிறது. ஆனால் இயேசுவின் நட்பு உண்மையானது, உறுதியுடையது.

சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார்
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல ஐயா எங்கும் கண்டதில்லை.

சகோதரனைக் காட்டிலும் இயேசு கிறிஸ்து மிக நெருங்கிய நண்பராக இருக்கிறார். அவரே எக்காலத்திலும் சிநேகிக்கிறவராக இருக்கிறார் (நீதி.17:17).

இயேசு கிறிஸ்து சரீரப்பிரகாரமாக நம்முடன் இல்லாத காரணத்தினால், அவருடைய நட்பின் அனுபவத்திற்கு எல்லை எதுவும் குறிக்கவில்லை என்பதே உண்மை. அவருடைய வார்த்தையின் மூலமாக நம்மோடு அவர் பேசுகிறார். மன்றாட்டின் வேளையில் அவரோடு நாம் பேசுகிறோம். இதன் வாயிலாக நாம் அவரை அனுபவிக்கக் கூடிய வகையில் தம்மை வெளிப்படுத்துகிறார். நமக்குத் தேவையான நண்பர் என்னும் நிலையில் அவர் நம்மோடிருக்கிறார்.

“கர்த்தராகிய கிறிஸ்துவே, ஜீவனுள்ள பிரகாசிக்கும் உண்மையான அனுபவமாக நீர் உம்மை எனக்குத் தாரும். இந்த உலகில் காணக்கூடிய பொருட்களைக் காட்டிலும், தெளிவாக விசுவாசக் கண்களால் உம்மை நான் காணச்செய்யும். உலகத்தின் மிக நெருங்கிய உறவு தருகிற நெருக்கத்தைக் காட்டிலும் நீர் கூடுதல் பிரியமாக, என் அருகில் நெருங்கி வாரும்” என்னும் ஜெபத்திற்கு அவர் விடை அருளுகிறவராக இருக்கிறார்.

25. Oktober

»Mancher Freund ist anhänglicher als ein Bruder.« Sprüche 18,24b

Die Freundschaft Jesu ist ein Thema, das immer und überall in den Herzen des Volkes Gottes ein warmes Echo hervorruft. Als Er auf der Erde lebte, wurde Er verlacht als »ein Freund der Zöllner und Sünder« (siehe Matthäus 11,19), aber die Christen nahmen diesen Spottnamen auf und verwandelten ihn in einen Ehrentitel.

Bevor unser Herr ans Kreuz ging, nannte er Seine Jünger »Freunde«. Er sagte: »Ihr seid meine Freunde, wenn ihr tut, was ich euch gebiete. Ich nenne euch nicht mehr Sklaven, denn der Sklave weiß nicht, was sein Herr tut; euch aber habe ich Freunde genannt, weil ich alles, was ich von meinem Vater gehört, euch kundgetan habe« (Johannes 15,14.15).

Einige von unseren beliebtesten Liedern nehmen dieses Thema wieder auf, beispielsweise: »Welch ein Freund ist unser Jesus.«

Warum ruft die Freundschaft, die Jesus uns entgegenbringt, solch eine besondere Reaktion in uns hervor? Ich denke, der erste Grund dafür ist, dass viele Menschen sehr einsam sind. Sie sind möglicherweise von vielen Leuten umgeben, aber nicht von Freunden. Oder sie sind weitgehend von dem Umgang mit anderen abgeschnitten. Das ist oft der Fall bei älteren Leuten, die die meisten ihrer Freunde und Bekannten überlebt haben.

Einsamkeit ist grausam. Sie ist schlecht für den körperlichen, seelischen und geistigen Gesundheitszustand eines Menschen. Sie nagt an seiner Durchhaltekraft, macht ihn nervös und verleidet ihm die Lust am Leben. Oft treibt sie die Menschen zur Gleichgültigkeit und Verzweiflung, so dass sie schließlich bereit sind, sich auf die Sünde einzulassen oder sich in andere unvernünftige
Abenteuer zu stürzen. Für solche Leute ist die Freundschaft Jesu wie der heilende Balsam des Landes Gilead.

Ein anderer Grund dafür, dass Seine Freundschaft so hoch geschätzt wird, ist die Tatsache, dass sie uns nie im Stich lässt. Menschliche Freunde enttäuschen uns oft oder verschwinden allmählich aus unserem Leben, aber dieser Freund erweist sich als treu und standhaft.

Wenn irdische Freunde uns verlassen, Uns an einem Tag lieben, am nächsten hassen, Wird dieser Freund uns doch stets fassen. O, wie Er liebt!

Jesus ist der Freund, der uns näher steht als ein Bruder. Er ist der Freund, der uns zu jeder Zeit liebt (siehe Sprüche 17,17).

Die Tatsache, dass der Herr Jesus nicht körperlich bei uns anwesend ist, setzt der Wirklichkeit Seiner Freundschaft keinerlei Grenzen. Durch Sein Wort spricht Er zu uns, und im Gebet reden wir mit Ihm. Auf diese Art ist Er ganz real bei uns als der Freund, den wir nötig haben. Und auf diese Weise erhört Er dann auch das Gebet: »Herr Jesu, mach Du selbst Dich mir zu einer lebendigen, hellen Realität. Werde Du mir mehr und mehr gegenwärtig, um Dich im Glauben schärfer wahrzunehmen als irgendeinen irdischen Gegenstand. Sei Du mir lieber, enger, näher als irgendein – sei
es das engste, nah’ste – irdisch-sichtbaren Band.«