October

அக்கினிக்கடல் தண்டனை அவசியமா?

October 24

“And whosoever was not found written in the book of life was cast into the lake of fire.” (Rev. 20:15)

The subject of hell generates enormous resistance in the human heart. This resistance is most often expressed in the question, “How could a God of love sustain an everlasting hell?”

If Paul were answering the question he would probably say at the outset, “Who art thou that repliest against God?” or “Let God be true and every man a liar.” Translation: the creature really has no right to question the Creator. If God sustains an everlasting hell, He has valid reasons for doing so. We have no right to question His love or His justice. Yet we are given sufficient information in the Bible to vindicate God in this matter.

First of all, we know that God did not make hell for man, but for the devil and his angels (Mt. 25:41).

We also know that it is not God’s desire that any should perish, but that all should come to repentance (2 Pet. 3:9). If any man goes to hell, it is a great sorrow to the heart of the Lord.

It is man’s sin that causes the problem. The holiness, righteousness and justice of God demand that sin be punished. The divine decree is, “The soul that sinneth, it shall die” (Ezek. 18:4). This is not arbitrary on God’s part. It is the only attitude that a Holy Being can take toward sin.

God could have let the matter rest there. Man sinned, therefore he must die.

But God’s love intervened. In order that man might not perish eternally, He went to the ultimate extreme to provide a way of salvation. He sent His unique Son to die as a Substitute for sinful men, paying the penalty for them. It was wonderful grace on the Savior’s part to bear man’s sins in His body on the cross.

Now God offers eternal life as a free gift to all who repent of their sins and believe on the Lord Jesus Christ. He will not save men against their will. They must choose the way of life.

Frankly there is nothing else that God could have done. He has already done more than could be expected. If men refuse His free offer of mercy, there is no alternative. Hell is the deliberate choice of those who refuse heaven.

To charge God with blame for sustaining an everlasting hell is completely unjust. It overlooks the fact that He emptied heaven of its Best so that earth’s worst might never know the agonies of the lake of fire.

ஒக்டோபர் 24

ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான். வெளிப்படுத்தின விசேஷம் 20:15

அக்கினிக்கடல் தண்டனை அவசியமா?

நரகத்தைப் பற்றிய பேச்சு மனிதனுடைய இருதயத்தில் பலத்த எதிர்ப்பைப் பிறப்பிக்கிறது. அந்த எதிர்ப்பானது அவ்வப்போது ‘அன்பின் தேவன் எவ்வாறு நித்திய நரகத்தை அனுமதிப்பார்?” என்னும் கேள்வியாக தொனிக்கிறது.

இந்தக் கேள்விக்கு அப்போஸ்தலனாகிய பவுல் விடையளித்திருப்பார் எனில், “தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்” என்றோ, ‘தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக” என்றோ சொல்லியிருக்கக் கூடும். இதன் பொருள் யாது? உண்மையில் படைப்பாளரைக் கேள்வி கேட்கப் படைப்புக்களுக்கு உரிமை ஏதும் இல்லை. நித்திய நரகத்தை தேவன் அனுமதித்திருக்கிறாரெனில், அதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன என்பதே பொருளாகும். அவருடைய அன்பைக் குறித்தும், அவருடைய நீதியைக் குறித்தும், கேள்வி எழுப்ப நமக்கு உரிமையில்லை. தேவன் எல்லாவற்றையும் சரியாகவே செய்கிறார் என்பதை மெய்ப்பிக்க வேதத்தில் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

முதலாவதாக, நரகத்தை மனிதர்களுக்காக தேவன் உண்டாக்கவில்லை என்பதை நாம் அறியவேண்டும். பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவுமே அதனை உண்டாக்கினார். (மத்.25:41).

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்பதை நாம் அறிவோம். (2.பேது.3:9). எவனாவது ஒருவன் நரகத்திற்குப் போவானாயின், கர்த்தருடைய உள்ளத்திற்கு அது மிகுந்த வருத்தத்தைத் தருவதாயிருக்கிறது.

மனிதனுடைய பாவமே பிரச்சனைக்குக் காரணமாயிருக்கிறது. தேவனுடைய பரிசுத்தமும், நீதியும், நியாயமும், பாவம் தண்டிக்கப்படவேண்டுமென்று வலியுறுத்துகின்றன. “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” என்பது தெய்வீக நியதியாக இருக்கிறது. (எசேக்.18:4) இதில் தேவனுடைய அடக்குமுறை ஏதும் இல்லை. பாவத்தைக்குறித்துப் பரிசுத்தமுள்ளவர் இவ்வகையான மனப்பான்மையையே கொண்டிருக்க முடியும்.

இதனை தேவன் அதோடுகூட நிறுத்தியிருக்கலாம். மனிதன் பாவம் செய்தான், ஆகையால் அவன் சாக வேண்டும். இதுவே தேவநியதி. ஆனால் அங்கே தேவனுடைய அன்பு குறுக்கிட்டது. நித்தியமாக மனிதன் அழிந்து போகக்கூடாது என்று கருதிய தேவன், மறு எல்லைக்குச் சென்று இரட்சிப்பின் வழியை முடிவாக வகுத்துக் கொடுத்திருக்கிறார். பாவியான மனிதனுக்குப் பதில் ஆளாக மரணத்தை ஏற்றுக் கொள்ளத் தமது ஒப்பற்ற ஒரே குமாரனை அனுப்பினார். அவர்களுக்குரிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார். தமது சரீரத்தில் மனிதனுடைய பாவத்தைச் சுமந்தவராக, சிலுவைக்குச் சென்றது இரட்சகரின் வியத்தகு கிருபையன்றோ!.

தங்களுடைய பாவத்திற்காக மனம் வருந்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறவர்கள் அனைவருக்கும் நித்திய வாழ்வை தேவன் இலவசமாக அருளுகிறார். தங்களுக்கு விருப்பம் இல்லாத மனிதர்களை, அவர்களுடைய சித்தத்திற்கு எதிராக தேவன் இரட்சிப்பதில்லை. ஐPவனுக்குரிய வழியை அவரவர்களே தெரிந்து கொள்ளவேண்டும்.

வெளிப்படையாக கூறுவோமாயின், தேவனால் வேறு எதையும் செய்திருக்க முடியாது அனைவருடைய எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே அவர் செய்து முடித்திருக்கிறார். அவருடைய அருள் நிறைந்துள்ள இலவச அன்பளிப்பை மனிதர்கள் வேண்டாமென்று புறக்கணிப்பார்களாயின், இதற்கு மாற்று வழி வேறு எதுவும் இல்லை. பரலோகத்தை வேண்டாமென்று நிராகரிப்போமானால் மனமுவந்து தெரிந்தெடுத்த இடமாகவே நரகம் காத்திருக்கறது.

நித்திய நரகத்தை தேவன் உண்டாக்கியிருப்பதற்கு, தேவனைக் குற்றம் சுமத்துவது முற்றிலும் அநீதியாகும். இந்த உலகத்தில் பொல்லாங்கு நிறைந்தவர்களாக வாழ்ந்;தோர் நரகத்தின் வேதனையை அறியக்கூடாது என்று கருதி, பரலோகத்தில் தலை சிறந்தவர் தம்மையே வெறுமையாக்கிச் சிலுவைக்கு ஒப்புக் கொடுத்துள்ளதை மறக்கக் கூடுமோ?

24. Oktober

»Und wenn jemand nicht geschrieben gefunden wurde in dem Buch des Lebens, so wurde er in den Feuersee geworfen.« Offenbarung 20,15

Das Thema Hölle erweckt im Herzen des Menschen immer einen riesigen Widerstand. Der findet meist in der Frage Ausdruck: »Wie könnte denn ein Gott der Liebe jemals eine ewige Hölle zulassen?«

Wenn Paulus diese Frage zu beantworten hätte, dann würde er zunächst wahrscheinlich sagen: »Wer bist du überhaupt, dass du Gott etwas entgegnen willst?« oder: »Gott hat Recht, auch wenn jeder Mensch als Lügner dastehen sollte.« Das bedeutet: Das Geschöpf hat wirklich kein Recht, dem Schöpfer Fragen zu stellen. Wenn Gott eine ewige Hölle zulässt, dann hat Er seine guten Gründe dafür. Wir haben kein Recht, Seine Liebe oder auch Seine Gerechtigkeit in Frage zu stellen. Doch wir haben genügend Informationen in der Bibel, um Gott auch in dieser Sache
zu verteidigen.

Zuerst einmal wissen wir, dass Gott die Hölle nicht für den Menschen, sondern für den Teufel und seine Engel gemacht hat (siehe Matthäus 25,41).

Dann wissen wir auch, dass Gott durchaus nicht will, dass irgendjemand verloren geht, sondern dass alle zur Buße kommen (siehe 2. Petrus 3,9). Wenn ein Mensch tatsächlich in die Hölle kommt, dann ist das ein großer Kummer für das Herz Gottes.

Die Sünde des Menschen verursacht alle diese Probleme. Die Heiligkeit und Gerechtigkeit Gottes verlangt, dass Sünde bestraft werden muss. Der göttliche Beschluss lautet: »Die Seele, die sündigt, sie soll sterben« (Hesekiel 18,4). Das ist nicht willkürlich von Gott her gesehen. Es ist vielmehr die einzige Haltung, die ein heiliger Gott der Sünde gegenüber einnehmen kann.

Gott könnte die Sache damit auf sich beruhen lassen: Der Mensch hat gesündigt, daher muss er sterben.

Aber da schritt Gottes Liebe ein. Damit der Mensch nicht in Ewigkeit verloren gehen sollte, ging Er bis zum Äußersten, um der Errettung doch noch einen Weg zu bahnen. Er schickte Seinen einzigen Sohn auf die Erde, damit Er als Stellvertreter für die sündigen Menschen sterben und für sie die Strafe bezahlen sollte. Es war eine wunderbare Gnade des Heilands, dass Er die Sünde des Menschen an Seinem Leib am Kreuz getragen hat.

Jetzt schenkt Gott ewiges Leben als freies Geschenk allen, die ihre Sünden bereuen und an den Herrn Jesus Christus glauben. Er wird aber keinen Menschen gegen seinen Willen erretten. Jeder muss sich für den Weg des Lebens selbst entscheiden.

Wahrhaftig, mehr hätte Gott gar nicht tun können. Er hat schon mehr getan, als man von Ihm erwarten konnte. Wenn die Menschen nun Sein freies Angebot der Barmherzigkeit ausschlagen, gibt es keine Alternative mehr. Die Hölle ist die bewusste Entscheidung derjenigen, die den Himmel nicht haben wollen.

Wenn wir also Gott anklagen, weil Er eine ewige Hölle zulässt, so ist das höchst ungerecht. Dann übersehen wir nämlich glatt die Tatsache, dass Er schon das Beste, was Er hatte, Seinen einzigen Sohn, aus dem Himmel herniedersandte, damit das Böseste auf Erden, der Mensch, niemals die Qualen des Feuersees erleiden müsste.