October

கிறிஸ்துவை உயர்த்துதல்

October 23

“He (the Holy Spirit) shall not speak of himself; hut whatsoever he shall hear, that shall he speak: and he will show you things to come. He shall glorify me: for he shall receive of mine, and shall show it unto you.” (John 16:13b, 14)

When the Lord Jesus said that the Holy Spirit would not speak of Himself, He did not mean that the Spirit would never make any reference to Himself. Rather, the thought is that the Spirit would not speak on His own authority or independently of God the Father. This is borne out by the words that follow: “…whatsoever he shall hear, that shall he speak.” The New American Standard Bible reads, “He will not speak on His own initiative.”

But having said that, we should add that the Holy Spirit does not ordinarily talk about Himself. One of His characteristic ministries is to glorify Christ. Jesus said, “He shall glorify me: for he shall receive of mine, and shall show it unto you.”

This means that when we hear ministry that exalts the Lord Jesus Christ, we can be sure that it is Spirit-inspired. On the other hand, when we hear messages that glorify the speaker rather than the Lord, we can be sure that the Spirit is grieved. He cannot witness to the greatness of Jesus and the greatness of the speaker at the same time.

“The most spiritual teaching will ever be characterized by a full and constant presentation of Christ. He will ever form the burden of such teaching. The Spirit cannot dwell on aught but Jesus. Of Him He delights to speak. He delights in setting forth His attractions and excellencies. Hence, when a man is ministering by the power of the Spirit of God, there will always be more of Christ than anything else in his ministry. There will be little room in such ministry for human logic and reasoning… The Spirit’s sole object…will ever be to set forth Christ” (C. H. Mackintosh).

In that connection, the evangelical world should reconsider the practice of introducing speakers by extravagant recitals of academic achievements and theological honors. It is unrealistic to praise a man to the skies and then expect him to preach in the power of the Holy Spirit.

One great test of written ministry is whether it glorifies the Lord Jesus. I remember reading a book on the Person and work of the Holy Spirit. At first I thought it strange that the author seemed to spend more time on the moral excellencies of Christ than on the Holy Spirit. Then I realized that this presented a true view of the Person and work of the Spirit.

Jim Elliot wrote in his journal, “If men were filled with the Spirit, they would not write books on that subject, but on the Person whom the Spirit has come to reveal. Occupation with Christ is God’s object, not fulness of the Spirit.”

ஒக்டோபர் 23

சத்திய ஆவியாகிய… அவர் தம்முடைய சுயமாய் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதால் என்னை மகிமைப்படுத்துவார். யோவான் 16:13-14

கிறிஸ்துவை உயர்த்துதல்

தூய ஆவியானவர் தம்முடைய சுயமாய் பேசமாட்டார் என்று இயேசு கிறிஸ்து கூறியிருப்பதற்கு, அவர் தம்மைக் குறித்து எதையும் ஒருக்காலும் குறிப்பிடமாட்டார் என்பது பொருநன்று. மாறாக, தூய ஆவியானவர் தமது சொந்த அதிகாரத்தில் எதையும் பேசமாட்டார் என்பதே அதன் பொருளாகும். ‘தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி” என்னும் தொடர்ந்து வருகிற சொற்றொடர் இதனை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு கூறியபின், தூய ஆவியானவர் அவ்வளவாகத் தம்மைக் குறித்துப் பேசமாட்டார் என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதே அவருடைய தனிச்சிறப்பு வாய்ந்த ஊழியமாகும். ‘அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்குப் புகழ்ச்சியாக ஒரு செய்தியை நாம் கேட்போமானால், தூய ஆவியின் ஏவுதலினால் அது பேசப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். கர்த்தருக்கு புகழ்ச்சியைக் கொண்டு வராமல், பேச்சாளருக்கு மகிமையைத் தரும் செய்தியை நாம் கேட்குங்கால் அங்கே ஆவியானவர் துக்கப்படுத்தப்படுகிறார் என்று நம்மால் உறுதியாகக் கூறமுடியும். இயேசு கிறிஸ்துவினுடைய மேன்மையைப் பற்றியும், அந்தப் பேச்சாளருடைய மேன்மையைப் பற்றியும் ஆவியானவர் ஒரே நேரத்தில் சான்று கூறமுடியாது.

“முழுமையாகவும், தொடர்ச்சியாகவும், கிறிஸ்து அறிமுகப்படுத்தப்படுகிற சிறப்பைக் கொண்டிருக்கும் உபதேசமே, மிகவும் சிறந்த ஆவிக்குரிய உபதேசமாகும். எப்பொழுதும் அவரே அந்த உபதேசங்களின் கருப்பொருளாக அமைகிறார். இயேசு கிறிஸ்துவே அல்லாமல் ஏதொன்றிலும் தூய ஆவியானவரால் கருத்தைச் செலுத்தி நீண்ட நேரம் பேச இயலாது. ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசுவது அவருக்கு மனமகிழ்ச்சியாகும். தேவ ஆவியானவருடைய வல்லமையினால் ஒருவர் பேசும்போது வேறு எதையும் குறித்துப்பேசாமல் கிறிஸ்துவைக் குறித்தே தொடர்ந்து பேசுவார். கிறிஸ்துவையே முன்நிறுத்தி, அவருடைய கவர்ந்திழுக்கும் பண்புகளைப் பற்றியும், அவருடைய தகமைகளைப் பற்றியுமே பேசுவார். மனிதனுடைய தத்துவ ஞானத்திற்கும், காரணகாரியங்களை ஆராய்ந்து பார்க்கும் ஆற்றலுக்கும் அங்கே வேலையில்லை….. கிறிஸ்துவை முன்நிறுத்திக் காண்பிப்பதே ஆவியானவரின் ஒரே நோக்கமாகும்.” (C. H.மெக்கின்டோஷ்).

ஆகவே, இறையியல் பேச்சாளர்களின் கல்வி ஞானத்தைப் பற்றியும், அவர்களது இறையியல் பட்டங்களைப் பற்றியும் தேவையற்ற முறையில் வரம்புக்கு அதிகமாகப் புகழ்ந்து பேசி அவர்களை அறிமுகப்படுத்தும் வழக்கத்தை நற்செய்தியில் ஈடுபாடு கொண்டுள்ள உலகம் விட்டொழிக்க வேண்டும். ஒரு மனிதனை வானளாவப் புகழ்ந்துவிட்டு, பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவர் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகும்.

எழுத்து ஊழியத்திலும் இத்தகைய பெரும் சோதனை ஒன்று இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு அது புகழ்ச்சியைக் கொண்டு வருகிறதா என்பதே அந்தச் சோதனை. பரிசுத்த ஆவியானவருடைய ஆள்தன்மைகளையும், செயல்பாடுகளையும், எடுத்தியம்பும் ஒருநூலைப் படித்த நினைவு எனக்கு வருகிறது. அங்கு பரிசுத்த ஆவியானவரைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் கிறிஸ்துவின் மேலான தகமைகளை அந்நூலாசிரியர் எழுதியிருந்தது முதலில் எனக்கு விநோதமாகத் தோன்றிற்று. பரிசுத்த ஆவியானவரின் ஆள்தன்மையும் செயல்பாடுகளையும் பற்றி, சரியான கண்ணோட்டத்துடன் அவர் எழுதியிருக்கிறார் என்பதைப் பின்னரே நான் புரிந்துகொண்டேன்.

“பரிசுத்த ஆவியில் நிறைந்தவர்கள், அவ்விஷயத்தைப் பற்றி எழுதமாட்டார்கள். ஆவியானவர் யாரைக் குறித்து வெளிப்படுத்த வந்;தாரோ அவரைப் பற்றியே எழுதுவார்கள். பரிசுத்த ஆவியின் நிறைவிலும், கிறிஸ்துவினால் நிறைந்திருப்பதே தேவனுடைய நோக்கமாகும்” என்று ஜிம் எலியட் எழுதியுள்ளார்.

23. Oktober

»Denn er (der Heilige Geist) wird nicht aus sich selbst reden, sondern was er hören wird, wird er reden, und das Kommende wird er euch verkündigen. Er wird mich verherrlichen, denn von dem Meinen wird er nehmen und euch verkündigen.« Johannes 16,13b.14

Wenn der Herr Jesus sagte, dass der Heilige Geist nicht aus sich selbst redete, meinte Er damit nicht, dass dieser niemals etwas über sich selbst erwähnen würde. Jesus wollte damit vielmehr sagen, dass der Geist nicht aus eigener Autorität heraus oder unabhängig von Gott dem Vater spricht. Das wird in den folgenden Worten noch weiter ausgeführt: »…was er hören wird, wird er reden.« Das heißt, er wird nicht aus eigener Initiative reden.

Wir sollten noch hinzufügen, dass der Heilige Geist normalerweise auch gar nicht über sich selbst redet. Eine seiner charakteristischen Aufgaben ist es nämlich, Christus zu verherrlichen. Jesus sagt: »Er wird mich verherrlichen, denn von dem Meinen wird er nehmen und euch verkündigen.« Das heißt: Wenn wir Worte hören, die die Herrlichkeit des Herrn Jesus Christus preisen, können wir sicher sein, dass sie vom Heiligen Geist inspiriert sind. Andererseits gilt genauso: Wenn wir Vorträge hören, die eher den Redner selbst groß herausstellen als den Herrn, dann können wir genauso sicher sein, dass der Heilige Geist damit betrübt wird. Denn er kann nicht gleichzeitig ein Zeugnis für die Größe Jesu und für die Großartigkeit des Redners sein.

C.H. Mackintosh hat gesagt: »Eine wirklich zutiefst geistliche Belehrung wird immer gekennzeichnet sein durch eine vollständige und dauernde Darstellung Jesu Christi. Er wird der rote Faden, der Inhalt einer solchen Belehrung sein. Der Herr Jesus ist das Thema des Heiligen Geistes, auf das Er stets zurückkommt. Von Ihm spricht der Geist mit Freuden. Er setzt gerne die Vorzüge und Vortrefflichkeiten Christi ins rechte Licht. Wenn also ein Mann dient in der Kraft des Geistes Gottes, dann wird in seiner Rede immer mehr von Jesus Christus zu finden sein als von allem
anderen. Es wird nur wenig Platz in einem solchen Vortrag sein für menschliche Logik und Gedankengänge … Das einzige Ziel des Heiligen Geistes … wird es immer sein, Jesus Christus in den Vordergrund zu stellen.«

In diesem Zusammenhang sollte die evangelikale Welt auch einmal die Praxis überdenken, dass Gastredner immer durch die übertrieben ehrerbietige Aufzählung ihrer akademischen Titel und theologischen Ehrungen angekündigt werden. Es ist einfach unrealistisch, einen Menschen über den grünen Klee zu loben und dann von ihm zu erwarten, dass er in der Kraft des Heiligen Geistes predigen soll.

Auch für christliche Bücher ist es ein wichtiger Prüfstein, ob sie den Herrn Jesus verherrlichen. Ich habe einmal ein Buch über die Person und das Werk des Heiligen Geistes gelesen. Zuerst kam es mir merkwürdig vor, dass der Autor anscheinend mehr Zeit damit verbrachte, die moralischen Vorzüge Christi zu beschreiben, als vom Heiligen Geist zu erzählen. Doch dann sah ich ein, dass gerade das eine richtige Sicht von der Person und dem Werk des Heiligen Geistes vermittelte.

Jim Elliot schrieb in sein Tagebuch: »Wenn die Menschen mit dem Heiligen Geist erfüllt wären, dann würden sie keine Bücher zu diesem Thema schreiben, sondern über die Person, um deren Offenbarung willen der Heilige Geist gekommen ist. Die Beschäftigung mit Christus ist der Gegenstand Gottes, nicht die Fülle des Geistes.«