October

ஏற்ற பதிலை வழங்குதல்

October 13

“What man is there of you, whom if his son ask bread, will he give him a stone?” (Matt. 7:9)

The question calls for a negative answer. Ordinarily a father wouldn’t give his son a stone in place of bread. Certainly the Heavenly Father would never do it.

But the sad fact is that we sometimes do that very thing. People come to us in deep spiritual need. Perhaps we are insensitive to what is really troubling them. Or we put them off with some surface panacea instead of sharing the Lord Jesus with them.

E. Stanley Jones illustrates this with a story he tells on himself (it takes a great man to tell a story that discloses a personal failure). “When the (Indian) Congress members in their newly acquired powers were sometimes using these powers for themselves instead of the country’s good, it was proving too much for Jawaharlal Nehru to bear. He said he was thinking of resigning the Prime Ministership and going off to regain his inner spirit. I saw him at that time, and at the close of the interview I offered him a bottle of tablets of the cereal grasses, containing all the known vitamins. He took the bottle with thanks but added, ‘My problem is not physical/ implying that it was spiritual. Instead of offering him grace, I offered him grass. He asked for bread, and I gave him a stone… I knew I had the answer, but I didn’t know how to say it. I was afraid of offending the great man. I should have remembered the motto on the Sat Tal Ashram wall: ‘There is no place in which Jesus Christ is out of place.’ But I didn’t. I remembered my hesitations and they prevailed.

“I offered him grass tablets when he really wanted grace—the grace and power that would heal him at the heart. Then he could have said, ‘I am healed at the heart. Now let the world come on—the world of impossible problems. I’m ready.’”

I am afraid that the experience of Dr. Jones is all too familiar to many of us. We encounter people who have deep spiritual needs. They drop some word that provides a wide open door for us to minister Christ to them. But we fail to take advantage of it. We either suggest some band-aid remedy for a spiritual wound or we change the subject to something of trivial value.

Prayer: Lord, help me to seize every opportunity to witness for You, to enter every opened door. Help me to overcome my hesitations, giving bread and grace where they are needed.

ஒக்டோபர் 13

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மத்தேயு 7:9

ஏற்ற பதிலை வழங்குதல்

இந்தக் கேள்விக்கு இல்லை என்ற பதிலையே கூற வேண்டும். சாதாரணமாக ஒரு தகப்பன் தன் மகனுக்கு அப்பத்திற்குப் பதிலாகாக் கல்லைக் கொடுக்க மாட்டான். விண்ணுலகத்தந்தையும் அவ்வாறு தரமாட்டார் என்பது உறுதி.

ஆனால் சில வேளைகளில் அவ்வாறு நாம் செய்கிறவர்களாக காணப்படுகிறோம் என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும். ஆவிக்குரிய தேவைகளோடு மக்கள் நம்மிடத்தில் வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் உண்மையாகவே வருந்துகிறவற்றைக் குறித்து நாம் அக்கறையற்றவர்களாக இருந்து விடுகிறோம். அவர்களுடைய வருத்தங்களை நீக்குவதற்குச் சில மேலாட்டமான ஆலோசனையைக் கூறி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பகிர்ந்து கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.

தனது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்க்சியைக் கூறி இக்கருத்தினை விளக்குகிறார் E.ஸ்டேன்லி ஜோன்ஸ் அவர்கள். (தனது வாழ்க்கையில் நடந்த தோல்வியை எடுத்துரைப்பது பெரிய மனிதனுக்கு எத்தனை கடினம்). ‘இந்தியாவில் ஆட்சி செய்வோரில் சிலர் தங்களுக்குப் புதிதாகக் கிடைத்த அதிகாரங்களை மக்கள் நலனுக்கெனப் பயன்படுத்தாமல், தங்கள் நலனுக்கென்று பயன்படுத்தினர்;. இதனை ஜவஹர்லால் நேருவினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனது பிரதம மந்திரி பதவியைத் துறந்துவிட்டு, தன்னுடைய உள்ளான எழுச்சியை நாடப்போவதாக அவர் கூறினார். அப்பொழுது அவரை நான் கண்டேன். அவர் என் அருகில் அமர்ந்து எனக்குப் பேட்டி அளித்தார். அவர் அவ்வாறு கூறியவுடன் எல்லா வைட்டமின்களும் அடங்கிய ஒரு பாட்டிலை அவருக்குக் கொடுத்தேன். நன்றி கூறியவராக அந்த பாட்டிலை வாங்கிக்கொண்டார். |என்னுடைய பிரச்சனை சரீரத்திற்குரியது அல்ல| என்றும் கூறினார். அது ஆவிக்குரியது என்பதை மறைமுகமாகக் கூறினார். அவருக்குக் கிருபையை அளிப்பதற்குப் பதிலாக புல்லைக் கொடுத்தேன். அவர் அப்பத்தைக் கேட்டார். ஆனால் நானோ கல்லைக் கொடுத்தேன்….. அவருடைய கேள்விக்கு என்னிடத்தில் பதில் இருந்தது என்பதை அறிவேன். ஆனால், அதை எவ்வாறு சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. பெரிய மனிதரைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. சாட்டால் ஆஸ்ராம் மதிலில் எழுதப்பட்ட பொன்மொழியை நான் நினைவு கூர்ந்திருக்க வேண்டும்: |இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறக்கூடாத எந்த இடமும் இல்லை|. ஆனால் அதை நான் நினைவுகூரவில்லை. என்னுடைய தயக்கங்களே என்னை ஆட்கொண்டன. அவை வெற்றியும் பெற்றன.

‘அவருடைய இருதயத்தைக் குணப்படுத்தியிருக்கும் கிருபையையும் அதிகாரத்தையும் கொடுப்பதற்கு மாறாக, புல்லினால் செய்யப்பட்ட மாத்திரைகளைக் கொடுத்தேன். அவர் கிருபையைக் கேட்டார். அதைக் கொடுத்திருந்தால், |என் இருதயம் குணமடைந்தது| என்று சொல்லியிருப்பார். இப்பொழுது உலகமே என்னிடம் வரட்டும். சீர்செய்ய முடியாத பிரச்சனைகளுடன் வரட்டும். நான் ஆயத்தமாக இருக்கிறேன்”.

திருவாளர் ஜோன்ஸ் எதிர்கொண்ட அனுபவம் நமக்கு நன்கு அறிமுகமானது என்பதை நாம் அறிவோம். ஆழ்ந்த ஆவிக்குரிய தேவைகளோடு வருகிறவர்களை நாம் சந்திக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர்களுக்கு அறிமுகப்படுத்த நம்மை ஏவிவிடக்கூடிய சில சொற்களைக் கூறுவார்கள். அதனை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தவறுகிறோம். ஆவிக்குரிய புண்ணிற்கு ஒரு சிறிய மருந்துக் கட்டைப் போட்டுவிடுகிறோம்;. அல்லது எவ்வித முக்கியமற்ற பொருளைப்பற்றிப் பேசத் தொடங்குகிறோம்.

ஜெபம், ‘கர்த்தாவே உம்மைக்குறித்துச் சான்று பகர எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த உதவிபுரிவாராக. ஒவ்வொரு திறந்த வாசலுக்குள்ளும் நான் உட்புகத் தேவையான பலன் தாரும். என்னுடைய தயக்கங்களை நீங்கச்செய்வீராக. தேவையுள்ளவர்களுக்குக் கிருபையையும் அப்பத்தையும் தந்திட உதவிசெய்வீராக”.

13. Oktober

»Oder welcher Mensch ist unter euch, der, wenn sein Sohn ihn um ein Brot bittet, ihm einen Stein geben wird?« Matthäus 7,9

Natürlich muss die Antwort auf diese Frage lauten: Niemand. Normalerweise würde kein Vater seinem Sohn einen Stein statt eines Brotes geben. Und ganz gewiss würde der himmlische Vater das niemals tun.

Aber das Traurige daran ist, dass wir unseren Mitmenschen manchmal doch Steine anbieten. Da kommen Leute zu uns in tiefer geistlicher Not. Vielleicht merken wir gar nicht, was ihnen wirklich Kummer macht. Oder wir schicken sie mit einem oberflächlichen Allheilmittel wieder fort, anstatt ihnen vom Herrn Jesus zu erzählen.

E. Stanley Jones verdeutlicht das an einer Geschichte, die er selbst erlebt hat (man muss schon ein großer Mann sein, wenn man eine Geschichte vom eigenen persönlichen Versagen offen legen kann). »Als die Mitglieder des indischen Kongresses in ihrer neu erworbenen Macht so oft ihren Einfluss zu ihrem eigenen Nutzen einsetzten anstatt für das Wohl ihres Landes,
übertraf das das Maß, das Jawaharlal Nehru ertragen konnte. Er sprach davon, dass er sich mit dem Gedanken trug, von seinem Amt als Premierminister zurückzutreten und weit fortzugehen, um sein inneres Gleichgewicht wiederzugewinnen. Ich besuchte ihn zu dieser Zeit, und gegen Ende des Gesprächs schenkte ich ihm ein Röhrchen mit Tabletten, die aus Getreide
gemacht waren und alle bekannten Vitamine enthielten. Er nahm das Röhrchen mit Dank entgegen, sagte aber dazu: ›Meine Probleme sind nicht körperlicher Art.‹ Er wollte damit sagen, dass er eher geistliche Schwierigkeiten hatte. Ich hätte ihm von der Gnade Gottes erzählen sollen, aber ich bot ihm nur Tabletten an. Er fragte nach Brot, aber ich gab ihm nur einen Stein … Ich wusste doch, dass ich die Antwort kannte, aber ich wusste eben nicht, wie ich sie ihm mitteilen sollte. Ich hatte Angst, dass ich dem großen Mann zu nahe treten könnte. Dabei hätte ich mich an das Motto auf der Mauer des Sat Tal Ashram erinnern sollen: ›Es gibt keinen Platz auf der Welt, wo Jesus Christus fehl am Platz wäre.‹ Aber ich sagte nichts. Ich bedachte viele Dinge, die mich zögern ließen, und die Unsicherheit gewann die Oberhand.

Ich schenkte ihm Vitamintabletten, wo er doch eigentlich die Gnade Gottes haben wollte – die Gnade und Macht, die sein Herz hätte gesund machen können. Dann hätte er sagen können: ›Ich bin im Herzen geheilt. Nun soll die Welt an mich herantreten, die Welt mit ihren unlösbaren Problemen. Ich bin bereit.‹«

Ich fürchte, diese Erfahrung von Dr. Jones ist vielen von uns nur allzu gut vertraut. Wir begegnen Menschen, die in tiefen geistlichen Nöten stecken. Sie lassen einige Worte fallen, die uns die Tür weit öffnen, so dass wir ihnen durch Jesus Christus dienen könnten. Aber wir nehmen diese Gelegenheit nicht wahr. Entweder kleben wir rasch ein harmloses Allerweltspflaster auf ihre geistliche Wunde, oder wir wechseln das Thema und reden von irgendeiner Belanglosigkeit.

Herr, hilf mir, jede Gelegenheit für ein Zeugnis von Dir zu ergreifen, jede geöffnete Tür zu benutzen. Hilf mir, meine Unsicherheit zu überwinden, Brot und Gnade dann auszuteilen, wann immer sie gebraucht werden.