October

தேவ நடத்துதலை நாடுதல்

October 12

“Behold, all ye that kindle a fire, that compass yourselves about with sparks: walk in the light of your fire, and in the sparks that ye have kindled. This shall ye have of mine hand; ye shall lie down in sorrow.” (Isa. 50:11)

There is a right and a wrong way of doing everything, and this is certainly true in the matter of obtaining guidance. Today’s verse describes the wrong way. It pictures a man building a bonfire, then using the fire and the sparks to provide illumination for his path.

Notice that there is no mention of consulting the Lord. There is no suggestion that the man has made it a matter of prayer. He has unbounded confidence that he knows the best way. In his arrogant independence, he leans on his own understanding. In Henley’s words, he is the master of his own fate and the captain of his own soul.

But notice the aftermath! “This shall ye have of mine hand; ye shall lie down in sorrow.” The man who manufactures his own guidance is heading for trouble. Anyone who is that headstrong and willful will live to regret it. He will learn by experience that God’s way is the best way.

The preceding verse (v. 10) gives us the right way of obtaining guidance. It says, “Who is among you that feareth the Lord, that obeyeth the voice of his servant, that walketh in darkness, and hath no light? let him trust in the name of the Lord, and stay upon his God.” Notice three things about this man. First of all, he fears the Lord in the sense that he fears displeasing Him or walking in independence of Him. Second, he obeys the voice of God’s Servant, the Lord Jesus. Third, he is willing to admit that he walks in darkness and has no light. He acknowledges that he does not know which way to go.

What should such a person do? He should trust in the name of the Lord and rely on his God. In other words, he should acknowledge his own ignorance, ask the Lord to guide him, and depend completely on the divine guidance.

Our God is a God of infinite wisdom and love. He knows what is best for us and designs only what is for our good.

He knows, He loves, He cares.
Nothing this truth can dim.
He does the very best for those
Who leave the choice to Him.

ஒக்டோபர் 12

இதோ நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினித் தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினி ஜீவாலையிலும் நடவுங்கள், வேதனையில் கிடப்பீர்கள், என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும். ஏசாயா 50:11

தேவ நடத்துதலை நாடுதல்

ஒரு செயலை நாம் நேர்மையாகவும் செய்யலாம், நேர்மையற்ற முறையிலும் செய்யலாம், வழிநடத்துதலைப் பெற்றுக் கொள்வதைப் பொருத்தமட்டில் இது மறுக்கக்கூடாத உண்மையாக இருக்கிறது. இன்றைய வசனம் தவறான வழியை எடுத்துரைக்கிறது. தேவையற்ற குப்பையை எரிக்கப் பெரும் தீயை மூட்டின ஒரு மனிதன், பின்னர் அந்தத் தீயையும் பொறிகளையும் தன்னுடைய பாதைக்கு வெளிச்சமாகப் பயன்படுத்துகிறதை இவ்வசனம் சித்தரிக்கின்றது.

கர்த்தரிடம் ஆலோசனை கேட்டதற்கான எந்தக் குறிப்பையும் நாம் இங்கு காண்கிறதில்லை. இந்த மனிதன் இதனைத் தனது ஜெபத்தின் பொருளாகக் கொள்ளவில்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. மிகச் சிறந்த வழியைத் தான் அறிந்திருப்பதாக அவன் கட்டுக்கடங்கா நம்பிக்கை கொண்டிருந்தான். எவரையும் சார்ந்திராத இறுமாப்பால் அவன் நிறைந்திருந்தான். தன்னுடைய அறிவையே அவன் முற்றிலும் சார்ந்திருந்தான். தனது அழிவுக்குத் தானே காரணமாகவும், தன்னுடைய ஆன்மாவுக்குத் தானே தலைவனாகவும் இருக்கிறான் என்று ஹென்லே என்பார் இதனைக் குறித்து கூறியுள்ளார்.

ஆனால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பாருங்கள். ‘வேதனையில் கிடப்பீர்கள், என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்” தன்னுடைய வழியைத் தானே ஆயத்தப்படுத்துகிற மனிதன் பிரச்சனைகளைச் சந்திக்கிறான். கட்டுப்படுத்த இயலாத வகையில் பிடிவாதமாகச் செயல்படுகிறவன் தன் செயலுக்காக நிச்சயம் வருந்துவான். தேவனுடைய வழியே மிகவும் சிறந்தது என்பதைத் தன் அனுபவத்தினால் கற்றுக்கொள்ளுவான்.

இதற்கு முந்தின வசனம் சரியான முறையில் வழிநடத்துதலைப் பெற்றுக் கொள்ளும் விதத்தை விளக்குகிறது (வசனம்10) ‘உங்களில் எவன் கர்த்தருக்கப் பயந்து அவருடைய தாசனின் குரலைக்கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவன்” என்று அவ்வசனம் கூறுகிறது. இந்த மனிதனைப்பற்றி மூன்று விவரங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளன. முதலாவதாக, கர்த்தருக்கு அவன் பயப்படுகிறான், அதாவது அவரைச் சார்ந்திராமல் நடப்பதற்கும், அவருக்குப் பிரியமற்ற விதத்தில் நடப்பதற்கும் அவன் பயப்படுகிறான். இரண்டாவதாக தேவனுடைய தாசனாகிய இயேசு கிறிஸ்துவின் சத்தத்திற்குக் கீழ்படிகிறான். மூன்றாவதாக வெளிச்சமற்ற இருளான பாதையில் தான் செல்வதை ஒப்புக்கொள்கிறான். எந்த வழியில் செல்லவேண்டும் என்பதைத் தான் அறியவில்லை என்பதனையும் அவன் ஒப்புக்கொள்கிறான்.

அப்படிப்பட்ட மனிதன் என்ன செய்யவேண்டும்? கர்த்தருடைய திருப்பெயரின்மீது நம்பி, தனது தேவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். அதாவது தனது அறியாமையை ஒப்புக்கொண்டு, கர்த்தரிடம் வழிநடத்தக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தெய்வீக வழிநடத்தலை நாடி முற்றிலுமாகச் சார்ந்திருக்க வேண்டும்.

நமது தேவன் முடிவில்லா ஞானத்தையும் அன்பையும் உடையவராக இருக்கிறார். இதையே அவர் நமக்குத் தருகிறவராகவும் இருக்கிறார்.
அன்பின் ஊற்றும் அருமைநாதன் தேவையறிந்து அக்கறைகொள்கிறார். இதிலொன்றும் குறைவில்லை. இன்னது வேண்டுமென்று அவரிடம் சென்றடைந்தால் நல்லதுநல்கியே தம்மக்கள் நலம்காப்பார்.

12. Oktober

»Siehe, ihr alle, die ihr ein Feuer anzündet, mit Brandpfeilen euch rüstet: Lauft hinein in die Glut eures Feuers und in die Brandpfeile, die ihr angesteckt habt! Von meiner Hand geschieht euch das. In Qualen sollt ihr daliegen.« Jesaja 50,11

Man kann alle Dinge auf die richtige oder falsche Art tun, und das gilt besonders, wenn man nach der Führung Gottes sucht. Der heutige Vers beschreibt den falschen Weg. Er schildert einen Mann, der Feuerholz aufschichtet und dann dieses Feuer und Brandpfeile dazu benutzen will, um seinen Weg zu beleuchten.

Es wird hier nichts davon erwähnt, dass er den Herrn befragt. Es gibt keinen Hinweis darauf, dass der Mann seinen Weg zu einem Gebetsanliegen gemacht hätte. Er hat unbegrenztes Vertrauen darin, dass er selbst schon den besten Weg findet. Und in seiner anmaßenden Unabhängigkeit verlässt er sich ganz auf seinen Verstand. Mit Henleys Worten: Er ist der Meister seines Schicksals und der Kapitän seines eigenen Lebens.

Aber die Folgen sind furchtbar! »Von meiner Hand geschieht euch das. In Qualen sollt ihr daliegen!« Der Mensch, der sich seine eigene Führung zusammenbastelt, stürzt sich ins Unglück. Jeder, der so halsstarrig und eigenwillig ist, wird es noch bereuen. Er wird aus Erfahrung lernen müssen, dass Gottes Weg der beste ist.

In Vers 10 dagegen wird uns die Art und Weise beschrieben, wie wir rechte Führung erfahren können. Da heißt es: »Wer ist unter euch, der den Herrn fürchtet, der auf die Stimme seines Knechtes hört? Wer in Finsternis lebt und wem kein Lichtglanz scheint, vertraue auf den Namen des Herrn und stütze sich auf seinen Gott!« Ein solcher Mensch hat drei Kennzeichen.
Erstens fürchtet er den Herrn in dem Sinne, dass er sich davor fürchtet, Gott zu missfallen oder ohne Verbindung mit Ihm zu leben. Zweitens gehorcht er der Stimme des Gottesknechtes, das heißt des Herrn Jesus. Und drittens ist er bereit zuzugeben, dass er in der Dunkelheit umhertappt und kein Licht hat. Er erkennt freimütig an, dass er nicht weiß, welchen Weg er gehen
soll.

Was soll ein solcher Mensch tun? Er soll dem Namen des Herrn vertrauen und sich auf seinen Gott verlassen. Mit anderen Worten: Er soll sein eigenes Unwissen eingestehen, den Herrn bitten, ihn zu führen, und sich voll und ganz auf die göttliche Leitung verlassen.

Unser Gott ist ein Gott der unendlichen Weisheit und Liebe. Er weiß, was für uns das Beste ist, und Er lässt nur geschehen, was gut für uns ist.

Es kennt der Herr die Seinen und hat sie stets gekannt. Die Großen und die Kleinen in jedem Volk und Land. Er lässt sie nicht verderben, Er führt sie aus und ein; Im Leben und im Sterben sind sie und bleiben sein.