October

இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல்

October 11

“If thou hast run with the footmen, and they have wearied thee, then how canst thou contend with horses? and if in the land of peace, wherein thou trustedst, they wearied thee, then how wilt thou do in the swellings of Jordan?” (Jeremiah 12:5)

This is a good verse to challenge us when we are tempted to give up too quickly and too easily. If we can’t face minor difficulties, how can we expect to face major ones? If we buckle under the petty blows of life, how will we bear up under the sledgehammer blows?

We hear of Christians who sulk and pout because someone has offended them. Others turn in their resignation because someone has criticized them. Still others get their nose out of Joint because some pet idea has been voted down.

Folks with minor physical ailments often howl like a wounded bear. One wonders what they would do with a catastrophic illness. If a businessman can’t cope with day to day problems, it is unlikely he will be able to face the big ones.

We all need a certain amount of tough-mindedness. By that we do not mean that we should be harsh or insensitive. Rather we mean that we should be able to bend with the punches. We need the resiliency that bounces back and carries on.

Perhaps you are facing a crisis today. At the moment it seems monumental. You are tempted to quit. And yet a year from now it won’t seem important at all. This is the time when you should say with the psalmist, “For by Thee I can run upon a troop; and by my God I can leap over a wall” (Psa. 18:29 NASB).

The unidentified writer of Hebrews makes an interesting observation to those whom he was challenging to endure. He says, “Ye have not yet resisted unto blood” (Heb. 12:4). In other words, you have not paid the ultimate price—martyrdom. If Christians go to pieces over a broken dish or a lost cat or a disappointed love affair, what would they do if they were faced with martyrdom?

Most of us would have quit long ago if we gave in to our feelings. But you don’t quit in the Christian warfare. You pick yourself up from the ground, shake off the dust, and move forward into the conflict. Victory in the minor skirmishes will help us win the major battles.

ஒக்டோபர் 11

நீ காலாக்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படி சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்? எரேமியா 12:5

இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல்

நமது நோக்கத்தை உடனடியாகக் கைவிடும்படி நமக்கு சோதனை வரும் போது, இந்த வசனம் நல்லதொரு அறைகூவலாக இருக்கிறது. சிறுதொல்லைகளை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லையென்றால், பெரிதான பிரச்சனைகளை எவ்வாறு சந்திப்போம்? வாழ்க்கையில் உண்டாகிற சிறு அடிகளுக்கு நாம் மறைந்துகொள்ள நினைப்போமெனில் நீண்ட சுத்தியலால் அடிக்கப்படும் வேளைகளில் அவற்றை எவ்வாறு சகித்துக்கொள்வோம்?

தங்களது உணர்ச்சிகளை ஒருவர் புண்படுத்திவிட்டால் அதற்காகச் சிடு சிடுக்கிற, வெறுப்படைகிற கிறிஸ்தவர்களைக் குறித்துக் கேள்விப்படுகிறோம். யாரோ ஒருவர் குறை கூறுகிறார் என்பதால் தங்களது பணியைக் கைவிடுகிறவர்களும் உள்ளனர். தாங்கள் கூறிய ஆலோசனை நிராகரிக்கப்படுகிற வேளையில் முகநாடி வேறுபடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

சிறிய உடல்நலக் குறைவுடையோர், அடிபட்ட கரடியைப் போன்று கூச்சலிடுகின்றனர். பேரிடர் தரக்கூடிய நோய் அவர்களைப் பற்றிக் கொண்டால் அவர்கள் என்ன செய்வார்கள். ஒவ்வொரு நாளிலும் உண்டாகக்கூடிய சிக்கல்களை ஒரு தொழிலதிபதி எதிர்கொள்ள முடியவில்லையென்றால், பெரிய பிரச்சனை உண்டாகிற போது நிச்சயமாக அதனைச் சந்திக்க முடியாது.

நாம் அனைவரும் சற்று மனஉறுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும். மிகவும் கண்டிப்பானவர்களாகவோ அல்லது உணர்ச்சியற்றவர்களாகவோ நாம் இருக்க வேண்டுமென்பது அதன் பொருளன்று. நாம் அடிக்கப்படும்போது வளைந்து கொடுக்கவேண்டும் என்பதே அதன் பொருள். நாம் நெகிழ்ந்து தரக்கூடிய திறன் கொண்டவர்களாயிருந்து முன்னிருந்த நிலைக்கு திரும்பி மீண்டும் முன்னேறிச் செல்லவேண்டும்.

ஒருவேளை இன்றைக்கு நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பீர்கள். இப்பொழுது அது மலையெனத் தோன்றும். உடனடியாக உங்களது நோக்கத்தைக் கைவிட எண்ணங்கொள்வீர்கள். ஆனாலும் ஓராண்டு கழித்து அது எவ்வித முக்கியத்துவமும் அற்றதாகக் காணப்படும். அச்சூழ்நிலையில் நீங்கள், ‘உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன், என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” என்று சங்கீத ஆசிரியனோடு சேர்ந்து சொல்லவேண்டும். (சங்.18:29)

தனது பெயரை வெளிப்படுத்தாத எபிரேய நூல் ஆசிரியன், இடர்பாடுகளை எதிர்கொண்டு அவற்றைச் சகிக்கவேண்டும் என்று படிப்போருக்கு அறைகூவல் விடுக்கும் தருவாயில் ஒரு அழகிய கருத்தினை எடுத்தியம்புகிறான், ‘இரத்தம் சிந்தத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே” (எபி.12:4). அதாவது நமது உயிரைத் தியாகம் செய்யும் அளவிற்கு நாம் செயல்படவில்லையே. ஒரு பாத்திரம் உடைந்து விட்டதே, பூனை காணாமல் போய்விட்டதே, நினைத்த பெண்ணைத் திருமணம் செய்ய முடியவில்லையே, என்று கிறிஸ்தவர்கள் உள்ளம் சிதறுண்டுபோனால், கிறிஸ்துவுக்காக உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படின் என்ன செய்வர்?

நம்முடைய உணர்ச்சிகளுக்கு நாம் இடம் கொடுப்போமென்றால், நம்மில் பலர் தோல்வியைத் தழுவினவர்களாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்போம். ஆனால், கிறிஸ்துவுக்காக போராடுவதிலிருந்து நீங்கள் விலகிப்போய்விட வேண்டாம். தரையில் வீழ்ந்த நீங்கள் எழுந்திருங்கள், தூசியை உதறித்தள்ளுங்கள், போர் முகத்தை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். சிறு சண்டைகளில் நாம் பெறும் வெற்றி, மகாயுத்தங்களில் வெற்றிபெற ஊக்கமளிக்கும்.

11. Oktober

»Wenn du mit Fußgängern läufst und sie dich schon ermüden, wie willst du dann mit Pferden um die Wette laufen? Und wenn du dich nur im Land des Friedens sicher fühlst, wie willst du es dann machen in der Pracht des Jordan?« Jeremia 12,5

Das ist ein guter Vers, um uns zum Nachdenken zu bringen, wenn wir der Versuchung nachgeben und zu schnell und zu leicht aufgeben wollen. Wenn wir mit kleinen Schwierigkeiten nicht fertig werden, wie können wir dann erwarten, größere zu bestehen? Wenn wir unter den leichten Schlägen des Lebens schon zusammenbrechen, wie werden wir dann die schweren mit dem Schmiedehammer ertragen können?

Wir hören von Christen, die schmollen, weil jemand sie beleidigt hat. Andere wenden sich resigniert ab, weil jemand sie kritisiert hat. Und noch andere ziehen sich zutiefst verletzt zurück, weil eine ihrer Lieblingsideen bei einer Abstimmung nicht durchzusetzen war.

Leute, die vorübergehend ein geringfügiges körperliches Leiden trifft, jammern oft, als ginge die Welt unter. Man fragt sich dann, was sie wohl tun würden, wenn eine wirklich schlimme Krankheit sie träfe. Wenn ein Geschäftsmann nicht mit den alltäglichen Problemen fertig wird, ist es unwahrscheinlich, dass er große Schwierigkeiten überhaupt aushalten kann.

Wir alle brauchen ein gewisses Maß an Zähigkeit. Damit meine ich nicht, dass wir hart oder gefühllos werden sollten. Vielmehr sollen wir fähig sein, uns unter Nackenschlägen zu beugen. Wir brauchen Elastizität, damit wir wieder hochfedern und weitermachen können.

Vielleicht werden wir noch heute plötzlich vor einer Krise stehen. Im Augenblick sieht sie riesengroß und unüberwindlich aus. Wir haben große Lust, alles hinzuwerfen. Und dennoch, heute in einem Jahr wird uns die ganze Sache gar nicht mehr wichtig vorkommen. In einem solchen Moment sollten wir mit dem Psalmisten sagen: »Denn mit dir kann ich auf Raubzug gehen, mit meinem Gott kann ich eine Mauer überspringen« (Psalm 18,29).

Der Schreiber des Hebräerbriefes macht eine interessante Bemerkung für die, die er zum Durchhalten aufruft. Er sagt: »Ihr habt im Kampf gegen die Sünde noch nicht bis aufs Blut widerstanden« (Hebräer 12,4). Mit anderen Worten: Ihr habt den letzten Preis noch gar nicht bezahlt, nämlich das Martyrium. Wenn Christen schon zusammenbrechen, wenn ein Teller kaputtgeht, eine Katze nicht wieder heimkommt oder eine Liebesaffäre enttäuschend endet, was wollen sie dann erst machen, wenn sie damit konfrontiert würden, für den Herrn sterben zu müssen?

Die meisten von uns hätten schon längst die Flinte ins Korn geworfen, wenn wir immer unseren Gefühlen nachgeben wollten. Aber im Kampf des Glaubens lässt man nicht einfach alles liegen und stehen. Man steht auf vom Boden, schüttelt den Staub ab und bewegt sich wieder vorwärts, den Konflikten entgegen. Der Sieg in den kleinen Scharmützeln wird uns helfen, auch die größeren Kämpfe zu gewinnen.