October

நற்சாட்சியைக் காத்தல்

October 10

“Let all bitterness, and wrath, and anger, and clamor, and evil speaking he put away from you, with all malice.” (Eph. 4:31)

Life brims with provocative situations that tempt a person to lose his temper. Perhaps you can identify with some of the following scenarios. A waiter spills hot coffee on you or makes you wait interminably for your food. You arrive home with your latest purchase only to find that the merchandise is defective. When you try to get a refund, the salesman is insolent. Or perhaps you have been given wrong information that causes you to miss your plane. The first week you have your new car, some careless driver puts a dent into the side of it. Then a store promises to deliver an appliance on a certain date. You stay home but no appliance arrives! Repeated delivery promises are broken. The clerk at the supermarket overcharges you, then is rude when you speak to him about it. Your neighbor hassles you over some minor squabble between her child and yours—and her child was obviously to blame. Another neighbor drives you up the wall with loud stereo music and wild parties. A fellow employee heckles you constantly, probably because of your Christian testimony. The computer makes an error on your monthly account, then in spite of your repeated protests by phone, the error reappears month after month. In your favorite sport, the referee makes a grossly bad call. Or the problem may be a clash of wills over TV programs in the living room of your home.

There is no way of avoiding some of these irritating situations. But for the believer, the important thing is how he reacts to them. The natural way is to explode in anger, to tell off the offender in a few well-chosen words. But when a Christian loses his temper, he loses his testimony also. There he stands, livid with rage, his eyes like piercing steel, his lips quivering. There is no way he can speak a word for the Lord Jesus. He is behaving like a man of the world. He is no longer a Bible but a libel.

The tragedy is that the person who has wronged him probably needs the Gospel. Perhaps his annoying behavior is because of some crisis in his personal life. If he were just shown love and consideration, he might be won over to the Savior.

Eruptions of temper have done much to nullify the witness of believers and to bring dishonor on the name of the Lord. A mad Christian is a poor advertisement for the faith.

ஒக்டோபர் 10

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணமும், உங்களை விட்டு நீங்கக்கடவது. எபேசியர் 4:31

நற்சாட்சியைக் காத்தல்

நிதானத்தை இழந்து, சினம்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களால் மனிதவாழ்வு நிறைந்திருக்கிறது. ஒருவேளை கீழே தரப்பட்டுள்ள காட்சிகளை நீங்கள் சந்தித்திருப்பீர்கள்.

ஒரு சிற்றுண்டிச்சாலையில் ஒரு சிப்பந்தி உங்கள் ஆடையில் பருகும் பானத்தைச் சிந்திவிடுகிறார். அல்லது உங்களுக்கு உணவைக் கொண்டு வருவதற்கு மிகவும் கால தாமதம் செய்கிறார். புதிதாக ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறீர்கள். ஆனால் அந்தப் பொருள் சரியாக இயங்கவில்லை. உங்களுடைய பணத்தைத் திரும்பப் பெறுவதற்குத் திரும்பிக் கடைக்குச் சென்றபோது கடைக்காரர் மரியாதையின்று நடந்துகொள்கிறார். விமானம் செல்லும் நேரம் தவறாக உங்களுக்கு அறிவிக்கப்பட்டதால், உங்கள் பயணத்தை உங்களால் மேற்கொள்ள முடியவில்லை. உங்களுடைய புத்தம்புதிய வாகனத்தில் யாரோ ஒருவரது வாகனம் உரசி அதனுடைய அழகு போய் விட்டது. ஒரு கடையிலிருந்து சில சாதனங்களை ஒரு குறிப்பிட்ட நாளில் அனுப்புவதாகக் கூறியதால் நீங்கள் விடுப்பு எடுத்து வீட்டில் காத்திருக்கிறீர்;கள். ஆனால் அந்தச் சாதனங்கள் அன்றைக்கு வந்து சேரவில்லை. அவர்கள் மீண்டும் தருகிற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. ஒருபொருளுக்கு அதிக விலைபோட்டு விடுகிறார் கடைக்காரர். அதைக் குறித்து நீங்கள் வினவும்போது அவர் முரட்டுத்தனமாகப் பேசுகிறார். உங்கள் குழந்தைகளுக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கும் ஏற்படுகிற சிறிய சச்சரவைப் பெரிதாக்கிப் பக்கத்து வீட்டுக்காரர் பெரும் கூச்சலிடுகிறார். உண்மையிலேயே அவருடைய குழந்தைதான் தவறு செய்தது. பக்கத்து வீட்டில் பெரும் சத்தத்தோடு பாடல்களையும் இசையையும் போட்டுக் கேட்கின்றனர். அந்த வீட்டில் அடிக்கடி விருந்து நடைபெறுகிறது. வருகிறவர்கள் இடும் சத்தமும் ஆர்ப்பாட்டமும் தாங்க முடியவில்லை. உங்களது கிறிஸ்தவச் சாட்சியைக் காணும் உடன் அலுவலர் துடுக்கான கேள்விகளைக் கேட்டு, தொல்லை தருகிறார். உங்களுடைய வங்கிக் கணக்கில் ஒரு தவறு ஏற்படுகிறது. நீங்கள் பலமுறை அதைச் சரிசெய்யச் சொல்லியும் ஒவ்வொரு மாதமும் அதே தவறு மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் நடுவர் தவறாகத் தீர்ப்பு வழங்கி விடுகிறார். தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது என்பதில் வீட்டில் உடன்பாடு இல்லை.

எரிச்சலைத் தூண்டிவிடுகிற மேற்கூறியவற்றில் சில சூழ்நிலைகளை நம்மால் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எவ்வாறு ஒரு விசுவாசி நடந்து கொள்ளவேண்டும் என்பதே முக்கியமானதாகும். கோபத்தில் சீறியெழுந்து, சில தெரிந்தெடுத்த சொற்களைக் கொண்டு கோபமூட்டியவரிடம் கடுமையாக நடந்து கொள்வது சாதாரணமாக நடக்கக்கூடியதே. ஆனால், ஒரு கிறிஸ்தவன் தனது நிதானத்தை இழப்பதால் தனது சாட்சியை இழந்து போகிறான். அவனுடைய கண்கள் கோபக்கனல் வீசி ஊடுருவிப் பாய்கின்றன, உதடுகள் நடுங்குகின்றன, கோபத்தால் சீறி எழுகின்றான். அவ்வாறு நடந்துகொள்ளும் கிறிஸ்தவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக ஒரு சொல்லையும் சொல்லக்கூடாதவனாக இருக்கிறான். உலகீய மனிதனைப்போல அவன் நடந்துகொள்கிறான். அவன் வேதமாகத் திகழாமல் அதற்குப் பாதகமாகவே விளங்குகிறான்.

தன்னிடம் தவறிழைத்த அந்த மனிதனுக்கு, நற்செய்தி தேவைப்பட்டிருக்கும் என்பதைக் கிறிஸ்தவன் அறியாதிருப்பதே சோகக் கதையாகும். அந்த மனிதனுடைய சொந்த வாழ்க்கையில் உண்டாயிருக்கும் இக்கட்டான சூழ்நிலையே அவனுடைய தகாத நடத்தைக்குக் காரணமாயிருகக்கூடும். ஒருவேளை, அவனிடம் அன்பும் ஆதரவுமான சொற்கள் பேசப்பட்டிருந்தால் கிறிஸ்துவுக்கென்று அவனை வெற்றி கொண்டிருக்கலாம்.

விசுவாசிகளின் நற்சாட்சி, சினமடைவதால் குன்றிப்போவதோடு, கர்த்தருடைய திருப்பெயருக்கு அது களங்கத்தையும் ஏற்படுத்துகிறது. மனநிலை தடுமாறுகிற கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்கு நல்லதொரு விளம்பரமாக விளங்குவதில்லை.

10. Oktober

»Alle Bitterkeit und Wut und Zorn und Geschrei und Lästerung sei von euch weggetan, samt aller Bosheit.« Epheser 4,31

Das Leben ist randvoll mit provozierenden Situationen, die einen Menschen wahrhaftig dazu bringen können, die Geduld zu verlieren. Vielleicht erkennen wir uns in einigen der folgenden Beschreibungen wieder: Ein Kellner verschüttet heißen Kaffee auf unserem Arm, oder er lässt uns unendlich lange auf das Essen warten. Wir kommen mit unserer neuesten Errungenschaft zu Hause an und müssen gleich feststellen, dass dieses wunderschöne Ding einen schweren Fehler hat. Wenn wir dann versuchen, unser Geld dafür zurückzubekommen, wird der Geschäftsmann
unverschämt. Oder man hat eine falsche Auskunft bekommen und verpasst deswegen das Flugzeug. Wir sind erst eine Woche lang stolzer Besitzer eines neuen Autos, und schon macht ein unvorsichtiger Fahrer eine Beule in die Wagentür. Ein Laden verspricht, ein Gerät an einem bestimmten Tag an uns zu liefern. Wir bleiben den ganzen Tag zu Hause, aber kein Gerät kommt! Wiederholte Versprechungen des Ladens werden erneut nicht eingehalten. Die Kassiererin im Supermarkt berechnet zu viel Geld und wird auch noch grob, wenn man sie daraufhin anspricht. Die Nachbarin belästigt einen ein paar Mal wegen unerfreulicher Streitereien zwischen ihrem Kind und unserem eigenen, und wir wissen genau, dass das Nachbarskind schuld daran ist. Ein anderer Nachbar treibt uns auf die Palme mit seiner lauten Stereomusik und seinen wilden Partys. Ein Arbeitskollege ärgert einen dauernd, wahrscheinlich weil er weiß, dass man Christ ist. Der Computer macht bei der monatlichen Lohnabrechnung einen Fehler; wir protestieren mehrmals per Telefon dagegen, aber der Irrtum wiederholt sich Monat für Monat. Bei unserem Lieblingssport pfeift der Schiedsrichter ab und bestraft einen Spieler offensichtlich zu Unrecht. Oder aber es gibt Probleme bei uns zu Hause im Wohnzimmer, weil mehrere Familienmitglieder, von denen jeder eine andere Fernsehsendung sehen will, heftig aneinander geraten.

Es gibt keine Möglichkeit, zumindest einige von diesen ärgerlichen Situationen zu vermeiden. Aber für den Gläubigen kommt es entscheidend darauf an, wie er auf sie reagiert. Die natürliche, menschliche Art ist in einer solchen Lage, einen Wutanfall zu bekommen und dem, der einen beleidigt hat, ein paar Schimpfworte an den Kopf zu werfen. Aber wenn ein Christ die Geduld verliert, dann verliert er damit auch sein Zeugnis als Christ. Da steht er, leichenblass vor Zorn, seine Augen sind wie glühender Stahl, und seine Lippen zittern. In diesem Zustand kann er kein einziges Wort für seinen Herrn Jesus sprechen. Er verhält sich genauso wie ein Mensch dieser Welt. Dann ist er kein Zeuge mehr für die Heilige Schrift, sondern höchstens noch für eine Schmähschrift.

Das Tragische dabei ist, dass der Mensch, der ihn verletzt hat, wahrscheinlich das Evangelium nötig braucht. Vielleicht benimmt er sich deshalb so daneben, weil er gerade eine Krise in seinem persönlichen Leben durchmachen muss. Wenn er jetzt Liebe und Rücksicht erfahren würde, könnte er möglicherweise für den Heiland gewonnen werden.

Temperamentsausbrüche haben schon viel dazu beigetragen, dass das Zeugnis von Gläubigen null und nichtig wurde, und sie haben dem Namen des Herrn oft Schande gemacht. Ein wütender Christ ist jedenfalls eine schlechte Werbung für den Glauben.