November

பாரஞ்சுமத்தல்

November 30

“Bear ye one another’s burdens, and so fulfill the law of Christ…For every man shall bear his own burden.” (Gal. 6:2, 5)

A casual reading of these two verses might easily convince a person that they present a glaring contradiction. The first says we should bear one another’s burdens, the second that we must bear our own burden.

The word translated “burdens” in verse 2 means anything that weighs a person down spiritually, physically and emotionally. In its immediate context it refers to the heavy weight of guilt and despondency that has come into the life of a man who has been overtaken in a fault (v. 1). We help such a brother when we throw a loving arm around him and win him back to a life of fellowship with God and with God s people. But burdens also include the sorrows, troubles, trials and frustrations of life which come to us all. We bear one another’s burdens when we comfort, encourage, share our material things, and give constructive advice. It means to involve ourselves in the problems of others, even at a great personal cost. When we do this, we fulfill the law of Christ; which is to love one another. We demonstrate our love in a practical way by spending and being spent for others.

A different word is used for “burden” in verse 5. Here it means anything that has to be carried, without any hint as to whether the load is heavy or light. What Paul is saying here is that everyone will have to bear his own load of responsibility at the judgment seat of Christ. It will not be a question then as to how we compare with others. We will be judged on the basis of our own record, and the rewards will be passed out accordingly.

The connection between the two verses seems to be this. A person who restores one who is overtaken in a fault might fall into the trap of feeling himself superior. In bearing the burdens of the fallen brother, he might somehow think of himself as being on a higher level of spirituality. He sees himself as comparing favorably with the sinning saint. Paul reminds him that when he stands before the Lord, he will have to give account for himself, for his own work and for his own character, and not for the other person. He will have to bear his own load of accountability.

So the two verses do not fight against one another. Rather they live in the closest harmony.

நவம்பர் 30

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்….அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே. கலாத்தியர் 6:2,5.

பாரஞ்சுமத்தல்

இவ்வரு வசனங்களையும் ஒருவர் எழுந்தவாரியாகப் படிப்பார் எனில், இவற்றிற்கிடையே பளிச்சிடும் வண்ணம் முரண்பாடு இருப்பதாக எளிதில் நம்பிவிடுவார். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கவேண்டுமென்று முதல் வசனம் கூறகிறது. அடுத்த வசனமோ அவனவன் பாரத்தைச் சுமக்கவேண்டும் என்று கூறுகிறது.

முதல் வசனத்தில் „பாரம்“ என்னும் சொல், மூல மொழியிலே ஆவிக்குரிய நிலையிலும், சரீரப் பிரகாரமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும், ஒருவர் அடைகிற அழுத்தத்தைக் குறிக்கிறது. இந்த வசனத்தின் பின்னனியில் இதன் பொருளைக் காண்கிறபோது, தன்னுடைய குற்றத்தினால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெரும் பாரத்தையும், மனச் சோர்வையும், இச்சொல் குறிக்கிறது என அறிவோம். (வச.1) நமது அன்பின் கரம்கொண்டு அந்த மனிதனை அரவணைத்து, திரும்பவும் தேவனோடும் தேவனுடைய பிள்ளைகளோடும் அவனை ஐக்கியம் கொள்ள செய்கிறோம். இது நாம் அந்த மனிதனுக்கு ஆற்றும் உதவியாக இருக்கிறது. மேலும் பாரங்கள் என்று சொல்லும் போது நம்மெல்லோருக்கும் உண்டாகிற வருத்தங்கள், பாரங்கள், சோதனைகள், மற்றும் ஏமாற்றங்கள், எல்லாவற்றையும் குறிக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் அவர்களுக்கு ஆறுதல் கூறி, உற்சாகப்படுத்தி, நமது பொருட்களைப் பகிர்ந்து கொடுத்து, ஆக்க பூர்வமான ஆலோசனை தருவதே ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமப்பதாகும். பிரச்சனைகளிலிருந்து மற்றவர்கள் விடுபட, நாம் தனிப்பட்டமுறையில் பெரிய விலைகொடுப்பதும் இதன் பொருளாகும். நாம் இவ்வாறு செய்யுங்கால், கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுகிறவர்களாக இருக்கிறோம். அதுவே ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூருவதாகும். நடைமுறையில் நமது அன்பை வெளிப்படுத்துவது எப்படியெனில் நாம் செலவு பண்ணுவதும் செலவு பண்ணப்பட்ட நம்மை ஒப்புவிப்பதுமேயாகும்.

இரண்டாவது வசனத்தில் „பாரம்“ என்னும் சொல்லிற்கு மூலமொழியில் வேறொரு சொல் கையாளப்பட்டிருக்கிறது. இங்கே ஒரு பொருளைச் சுமந்து செல்வதை இச்சொல் குறிக்கிறது. என்றாலும் சுமந்து செல்கிற பொருள் பாரமானதா அல்லது இலகுவானதா என்பதற்கான குறிப்பேதும் இங்கு இல்லை. கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பு ஒவ்வொருவரும் தனது வாழ்வின் பொறுப்பிற்கான பாரத்தைச் சுமந்து செல்லவேண்டும் என்றே பவுல் இங்கு குறிப்பிடுகிறார். இங்கு மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுபார்க்க வேண்டிய கேள்விக்கு இடமில்லை. நம்மைப் பற்றிய குறிப்பேடு என்ன கூறுகிறதோ அதற்கேற்ற விதமாக நாம் நியாயம் தீர்க்கப்பட்டு, அதற்கேற்ற வெகுமதிகள் நமக்கு அளிக்கப்படும்.

இவ்விரண்டு வசனங்களுக்கும் இடையில் காணும் இணைப்பனைக் காணலாம். யாதொரு குற்றத்தில் அகப்பட்ட ஒருவனைச் சீர்பொருந்தப் பண்ணுகிற மனிதன், அவனைக் காட்டிலும் தான் பெரியவன் என்னும் எண்ணம்கொண்டு தானே கண்ணியில் அகப்பட்டுக்கொள்ளக் கூடும். வீழ்ந்துபோன சகோதரனின் பாரங்களைச் சுமக்கிற மனிதன், அவனைக் காட்டிலும் எவ்விதத்திலாவது ஆவிக்குரிய வகையில் உயர்ந்தவன் என்ற எண்ணம்கொள்கிறான். பாவம் செய்கிற பரிசுத்தவான்களைக் காட்டிலும் தான் சாதகமான சூழ்நிலையில் இருப்பதாக அவன் தன்னையே நோக்கிப் பெருமிதம் அடைகிறான். கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன் நிற்கையில் அந்த மனிதன் தன் நடத்தையைக் குறித்தும், கிரியைக் குறித்தும், தானே கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாக இருக்கிறான் என்று பவுல் அவனுக்கு நினைவூட்டுகிறார். மற்ற மனிதனைக் குறித்த கணக்கை இவன் ஒப்புவிக்க வேண்டியதில்லை. தன் பாரத்தை அதாவது தனது கணக்கைக் குறித்த பாரத்தைத் தானே சுமக்க வேண்டியவனாக இருக்கிறான்.

ஆகவே இவ்விரண்டு வசனங்களும் ஒன்றொடொன்று மோதிக்கொள்வதில்லை. மாறாக, இரண்டும் இசைந்து நெருங்கி வாழ்கின்றன.

30. November

»Einer trage des anderen Lasten, und so werdet ihr das Gesetz des Christus erfüllen.« Galater 6,2

»… denn jeder wird seine eigene Bürde tragen.« Galater 6,5

Wenn man diese beiden Verse oberflächlich liest, wird man leicht davon überzeugt sein, dass sie einen offensichtlichen Widerspruch darstellen: Im ersten heißt es, wir sollen einer dem anderen beim Lastentragen helfen, im zweiten aber, dass wir jeder unsere eigene Last tragen müssen.

Das Wort, das in Vers 2 mit »Lasten« übersetzt ist, meint alles, was einen Menschen geistlich, körperlich und gefühlsmäßig niederdrückt. Im unmittelbaren Zusammenhang bezieht es sich auf das schwere Gewicht von Schuld und Hoffnungslosigkeit, die das Leben eines Mannes beschweren, der bei einem Unrecht ertappt worden ist (siehe Vers 1). Wir helfen solch einem Bruder, wenn wir ihm liebevoll den Arm um die Schulter legen und ihn zu einem Leben in der Gemeinschaft mit Gott und mit Seinem Volk zurückgewinnen. Aber zu den Lasten gehören auch Sorgen, Nöte,
Versuchungen und Enttäuschungen des Lebens, die wir alle gelegentlich zu bestehen haben. Wir tragen einer des anderen Last, wenn wir uns gegenseitig trösten, ermutigen, materielle Dinge miteinander teilen und uns hilfreiche Ratschläge geben. Das bedeutet, dass wir uns in die Probleme von anderen hineinversetzen, selbst wenn das große persönliche Kosten von uns verlangt. Wenn wir das tun, erfüllen wir das Gesetz Christi, das eben die Liebe zu unserem Nächsten beinhaltet. Wir zeigen unsere Liebe in ganz praktischer Weise, indem wir etwas für andere ausgeben und uns auch für sie verausgaben.

Die »Bürde« in Vers 5 dagegen meint etwas anderes. Hier ist die Last einfach etwas, was getragen werden muss, ohne einen Hinweis darauf, ob sie leicht oder schwer ist. Paulus meint hiermit, dass jeder seine eigene Last der Verantwortung tragen muss, wenn er vor dem Richterstuhl Christi erscheint. Da wird es keine Frage mehr sein, wie wir im Vergleich mit anderen dastehen. Wir werden auf der Grundlage unserer eigenen Taten beurteilt werden, so wie sie aufgezeichnet sind; und entsprechend wird auch der Lohn verteilt.

Der Zusammenhang zwischen den zwei Versen scheint mir der folgende zu sein: Wenn ein Mensch einen anderen aufrichtet, der bei einem Unrecht ertappt worden ist, könnte er leicht in eine andere Falle geraten, indem er sich nämlich sehr überlegen vorkommt. Wenn er die Lasten seines gefallenen Bruders mitträgt, könnte er denken, dass er selbst doch schon auf einem
höheren geistlichen Niveau steht. Er sieht sich dann selbst als sehr gut an im Vergleich mit dem, der die Sünde begangen hat. Paulus erinnert ihn aber daran, dass er, wenn er einmal selbst vor dem Herrn stehen wird, Rechenschaft ablegen muss für seine eigenen Taten und für seinen eigenen Charakter und nicht für das Tun eines anderen. Dort muss er seine Last der Verantwortung ganz allein tragen.

So widersprechen sich also diese beiden Verse nicht, sondern gehören in einen ganz engen Zusammenhang.