December

விசாரித்து ஆராய்ந்து அறிதல்

December 1

“If thou shalt hear say…then shalt thou inquire, and make search, and ask diligently; and, behold, if it be truth, and the thing certain…” (Deut. 13:12, 14)

If a rumor circulated that the people of a city in Israel had forsaken God for idols, there had to be an intensive investigation before any punitive action could be taken.

We should be no less careful when we hear a rumor or gossip, but should apply the six tests: Is it hearsay? Have I inquired? Have I made search? Have I asked diligently? Is it true? Is it certain?

In fact, it would be a good idea if we used the same thoroughness and caution before passing on sensational news items that appear in religious circles from time to time. Let me give some illustrations!

Some time ago the story circulated that stones for building a temple in Jerusalem were stored in a pier in New York, ready for shipment to Israel when the proper time arrived. The stones were reported to be of Indiana limestone. Christians circulated the news enthusiastically, only to be discredited when it was learned that there was no truth to the report.

At another time, the story broke that scientists had fed extensive data concerning the calendar of human history into a computer and that the results confirmed the Scriptural narrative of Joshua’s long day. Anxious for any news that confirms the Bible, believers avidly spread the story in magazines and by the spoken word. Then the bubble burst. The story proved to be without foundation.

More recently a mathematical computation has been used to suggest that some unpopular public figure might be the Antichrist. Here is how it works! A numerical value is assigned to each letter of this personality’s name. Then by following a certain series of additions, subtractions, multiplications and divisions, you come up with the number 666. Of course, it proves nothing at all. Mathematical computations could be devised to yield 666 for almost anyone’s name.

I have a tract stating that Charles Darwin, in the closing days of his life, disavowed evolution and returned to his faith in the Bible. This may be true. I would like to believe that it is true. Maybe some day I’ll find that it is true. But in the meantime I have no documentation for the story, and I dare not circulate it until I do have.

We will save ourselves a lot of embarrassment and save the Christian faith from being discredited if we apply the six tests in today’s verses: Is it hearsay? Have I inquired? Have I made search? Have I asked diligently? Is it true? Is it certain?

டிசம்பர் 1

….. என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது, நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் உன்று காண்பாயானால்….. உபாகமம் 13:13,14.

விசாரித்து ஆராய்ந்து அறிதல்

இஸ்ரவேலிலே ஒரு நகரத்திலே தேவனைப் புறக்கணித்து, சிலை வணக்கத்தைப் பற்றிக் கொண்டார்கள் என்று வதந்தி பரவியதால், அந்நகரத்திற்கு எதிராகத் தண்டனையைச் செலுத்தும் முன்பு தீர விசாரணை நடத்தவேண்டும்.

நாமும் ஒரு வதந்தியையோ புறங்கூறுதலையோ கேட்கும்போது கவனமற்றவர்களாகச் செயல்படக்கூடாது. மாறாக ஆறுவகையான சோதனைகளின் மூலமாகச் சோதித்து அறிய வேண்டும். இது வெறும் வதந்தியா? நான் விசாரித்தேனா? நன்றாக நான் ஆராய்ந்து பார்த்தேனா? கவனமாய்க் கேட்டேனா? அது மெய்யானதா? அது நிச்சயமாக நிகழ்ந்ததா?

உண்மையில், சமய உலகில் அவ்வப்போது வெளிவருகிற, பெரும் பரபரப்பூட்டுகிற செய்திகளை மற்றவர்களிடம் கூறும் முன்னர் தீர விசாரிப்பதும் கவனத்தோடு நடந்து கொள்வதும் சிறந்த முறையாகும். நான் சில எடுத்துக்காட்டுக்களைத் தருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த கதை இது. நியூயார்க் நகரின் படகுத்துறை ஒன்றில் எருசலேம் ஆலயத்தைக் கட்டுவதற்காக கற்கள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருப்பதாகவும், இஸ்ரவேலில் ஏற்ற சூழ்நிலை உண்டாகும்போது, அக்கற்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் வதந்தி பரவிற்று. அவை இந்தியானா மாநிலத்திலிருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்தச் செய்தியை மிகுந்த ஆவலோடு கிறிஸ்தவர்கள் பரப்பினார்கள். அச்செய்தியில் உண்மையேதும் இல்லையென்று அறிந்தபோது அவர்கள் வெட்கம் அடைந்தனர்.

வேறொரு சமயத்தில், இன்னொரு கதை பிறந்தது. மனிதனுடைய கால வரலாற்றைக் குறித்த விவரங்களை மிக விரிவாகக் கணிப்பொறி ஒன்றில் கொடுத்து, அதன் விடையைப் பார்த்தபோது, வேதத்தில் காண்கிறபடி யோசுவாவின் காலத்தில் ஒரு நாள் பகற்பொழுது நீட்டப்பட்டது உறுதியானது என்பதே அந்தக் கதை. வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிகழ்ச்சியை உறுதிசெய்கிற எந்தச் செய்தியையும், ஆர்வமிக்க விசுவாசிகள் பத்திரிகைகளில் உடனடியாக எழுதிப் பரப்புகின்றனர். அதைக் குறித்து பிரசங்கங்களும் செய்கின்றனர். பின்னர் அந்தச் செய்தி நீர்குமுளி போன்று வெடித்துச் சிதறிப் போகிறது. எந்த அடிப்படையும் இல்லாத கதையாக அது முடிவடைகிறது.

சிறிது காலத்திற்கு முன்னதாக, மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனை அந்திக்கிறிஸ்து என்று உறுதி செய்வதற்குக் கணிதத்தைக் கொண்டு கணக்கு ஒன்றைச் செய்தனர். அது எவ்விதம் செய்யப்பட்டது என்பதைப் பாருங்கள்! அந்த மனிதனின் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணை மதிப்பீடாகக் கொடுத்தனர். அதன் பின்னர் சில கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், எல்லாவற்றையும் செய்தனர். கிடைத்த விடை 666 அது எதனையும் உறுதி செய்யவில்லை என்பதே உண்மை. எந்த ஒரு பெயரை எடுத்துக்கொண்டாலும் நம்மால் பல கணக்குக்களைப்போட்டு 666 என்ற எண்ணை விடையாகக் கொண்டுவரலாம்.

சார்லஸ் டார்வின், வாழ்வின் இறுதி நாட்களில் தனது பரிணாமக் கொள்கையைக் கைவிட்டு, வேதத்தை விசுவாசிக்கும் வாழ்விற்குத் திரும்பினார் என்றும் செய்தி அடங்கிய கைப்பிரதி ஒன்றை நான் கண்டேன். இது உண்மையாக இருக்கக்கூடும். அது உண்மையாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன். அது உண்மையாக இருக்குமானால், ஒருநாள் அதைக் கண்டறிவேன். அது உண்மையானது என்பதற்குரிய ஆதாரம் என்னிடத்தில் இல்லை. ஆகவே அதை மற்றவர்களிடம் சொல்லத் துணியமாட்டேன்.

இன்றைய வசனத்தில் காண்கிற ஆறுவகையான சோதனைகளைக் கொண்டு எந்த ஒரு செய்தியையும் நாம் சோதித்துப் பார்ப்போமானால் இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்கவோ, அவமானப்படவோ கூடியநிலை ஏற்படாது. இது வெறும் வதந்தியா? நான் விசாரித்தேனா? நன்றாக நான் ஆராய்ந்து பார்த்தேனா? கவனமாய்க் கேட்டேனா? அது மெய்யானதா? அது நிச்சயமாய் நிகழ்ந்ததா?.

1. Dezember

»Wenn du hörst …, dann sollst du untersuchen und nachforschen und genau fragen. Und siehe, ist es Wahrheit, steht die Sache fest …« 5. Mose 13,13.15

Wenn das Gerücht aufkam, dass das Volk in einer der Städte Israels Gott verlassen hatte und Götzen anbetete, dann sollte zunächst eine gründliche Untersuchung durchgeführt werden, bevor man irgendeine Strafmaßnahme einleitete.

Wir sollten genauso vorsichtig sein, wenn wir irgendein Gerücht oder einen Klatsch hören. Sechs Überprüfungsfragen sollten wir dann zuerst einmal stellen: Weiß ich es nur vom Hörensagen? Habe ich mich danach erkundigt? Habe ich Nachforschungen angestellt? Habe ich genau und gründlich gefragt? Ist es wahr? Steht es fest?

Es wäre wirklich gut, wenn wir dieselbe Genauigkeit und Vorsicht walten lassen würden, bevor wir eine sensationelle Nachricht weitergeben, wie sie auch in religiösen Kreisen von Zeit zu Zeit aufkommt. Ich will dazu nur ein paar Beispiele geben.

Vor einiger Zeit ging das Gerücht um, dass im Hafen von New York Steine gelagert würden, mit denen der Tempel von Jerusalem wiederaufgebaut werden sollte. Manche Christen gaben diese Neuigkeit ganz begeistert weiter, doch sie wurden bald schon Lügen gestraft, als man erfuhr, dass an diesen Berichten kein Fünkchen Wahrheit war.

Ein andermal kam die Geschichte auf, dass Naturwissenschaftler umfangreiche Daten in einen Computer eingespeist hätten, die sich auf Kalenderbestimmungen im Laufe der Geschichte bezogen, und dass die Ergebnisse die biblische Erzählung von dem verlängerten Tag zur Zeit des Josua bestätigen würden. Die Gläubigen, die immer bemüht sind, jede neue Nachricht
aufzugreifen, die biblische Aussagen untermauert, verbreiteten diese Geschichte gleich eifrig in Zeitschriften und Vorträgen. Doch dann platzte alles: Die Nachricht erwies sich als ein haltloses Gerücht.

Vor kurzem wurde eine mathematische Berechnung aufgestellt, um anzudeuten, dass irgendeine sehr unbeliebte Figur im öffentlichen Leben vielleicht der Antichrist sein könnte. Und das ging folgendermaßen: Jedem Buchstaben im Namen dieser Persönlichkeit wird eine Zahl zugeordnet. Dann folgt eine Reihe von Additionen, Subtraktionen, Multiplikationen und Divisionen, und zum Schluss kommt die Zahl 666 heraus. Natürlich beweist das überhaupt nichts. Mathematische Berechnungen könnte man ja so einrichten, dass sie beim Namen fast jedes beliebigen Menschen
zum Schluss 666 ergeben.

Ich habe ein christliches Traktat, in dem steht, dass Charles Darwin in seinen letzten Lebenstagen der Evolution abgeschworen hätte und zu seinem Glauben an die Bibel zurückgekehrt wäre. Das mag schon wahr sein, ich würde es auch gern glauben. Vielleicht finde ich eines Tages auch heraus, dass es wirklich wahr ist. Aber bis jetzt habe ich keine Beweise für diese Geschichte, und ich wage nicht, sie in Umlauf zu bringen, solange ich sie nicht belegen kann.

Wir würden uns eine Menge von Peinlichkeiten ersparen und den christlichen Glauben auch vor Situationen bewahren, die ihn in ein schlechtes Licht rücken, wenn wir immer die sechs Überprüfungsfragen anwenden würden, die wir in den heutigen Versen finden.