December

கீர்த்தனைகளும் ஞானப்பாட்டுக்களும்

December 2

“…speaking to one another in psalms and hymns and spiritual songs, singing and making melody with your heart to the Lord.” (Eph. 5:19 NASB)

Singing here is linked to the filling of the Spirit, as if song is one of the sure results of the filling. Perhaps this is why almost all the great revivals of history have been accompanied by singing. The Welsh revival is a notable example.

No people have as much to sing about as Christians, and no people have such a rich heritage of psalms, hymns and spiritual songs. Our hymns express in majestic language what we so often feel but cannot express. Some hymns express thoughts that may be beyond our own experience—hymns of total commitment such as “All to Jesus I Surrender.” In such cases, we can sing them as the aspiration of our hearts.

In spiritual singing, it is not the rhythm or the melody or the harmony that counts. The important thing is that the message comes from the heart and rises to God in the power of the Holy Spirit. Mary Bowley expressed this truth well in the lines:

O Lord, we know it matters not
How sweet the song may be;
No heart but of the Spirit taught
Makes melody to Thee.

The Spirit of God can use singing just as He can use the preaching of the Word. The mother of Grattan Guinness heard a farmer singing as he plowed his field, and she decided not to commit suicide by drowning in the river. Dr. Guinness said later, “All that I am for God, I owe to a humble Christian plowman singing the praises of the Lord as he did his lowly task.”

Those who engage in the ministry of Christian music have to guard against two perils. One is the danger of self creeping in. As with other forms of public ministry, it is easy to embark on a giant ego trip. There is always the temptation to try to impress people with one’s talent rather than singing to the glory of God and for the blessing of His people.

The other is the danger of entertaining rather than edifying. It is all too possible to sing words with great musical skill and yet not convey the message to the hearts of the listeners. And it is possible to excite people emotionally with songs that are frothy, frivolous and quite unworthy of the Lord we love.

Different cultures have different tastes in music, but in all cultures the songs should be doctrinally sound, uniformly reverent, and spiritually edifying.

டிசம்பர் 2

சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுக்களினாலும், ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி… எபேசியர் 5:19.

கீர்த்தனைகளும் ஞானப்பாட்டுக்களும்

இங்கு பாடல் பாடுதல் ஆவியின் நிறைவோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளது. ஆவியின் நிறைவினால் பாடல்கள் எழும் என்பதன் அடிப்படையில் இங்ஙனம் கூறப்பட்டிருக்கிறது. ஆகவேதான், வரலாற்றில் காணும் கிறிஸ்தவ மறுமலர்ச்சிகள் யாவும் பாடல்களோடு இணைந்து வந்துள்ளன போலும், வேல்ஸ் மறுமலர்ச்சி இதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கிறிஸ்தவர்களைப் போன்று வேறு எவரும் இவ்வளவாகப் பாடினதில்லை. கிறிஸ்தவர்கள் பெற்றுள்ளது போன்று வேறு எவரும் சங்கீதங்கள், கீர்த்தனைகள், ஞானப்பாட்டுகள், ஆகிய பாரம்பரிய செல்வத்தைப் பெற்றதில்லை. நாம் அவ்வவ்போது உணர்ந்தும் நம்மால் வெளிப்படுத்த முடியாதவற்றை நமது கீர்த்தனைகள் மகத்துவமான மொழியில் வெளிப்படுத்துகின்றன. நம்முடைய சொந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளைச் சில கீர்த்தனைகள் வெளிப்படுத்துகின்றன. ‘ஒப்புவிக்கிறேன் இயேசுவுக்கே ஒப்புவிக்கிறேன்” என்னும் பாடல் அவற்றில் ஒன்று. இன்னும் சில பாடல்களில் நிறைவான சமர்ப்பணம் பேசப்படுகின்றது. அப்படிப் பாடுகிற வேளையில் நமது இருதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துகிறோம்.

ஆவிக்குரிய பாடல்களைப் பாடுங்கால் இசையொழுங்கோ, இசைஇனிமையோ கணக்கிடப்படுவதில்லை. இருதயத்தின் ஆழத்தினின்று செய்தியானது எழுந்து, தூய ஆவியானவரின் வல்லமையோடும் விண்ணுலகத் தந்தையைச் சென்றடைவதே இன்றியமையாததாகும். ‘கர்த்தாவே, பாடல் எவ்வளவு இனிமையுடையதாக இருக்கிறது என்பதன் பொருட்டன்று என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆவியினால் கற்பிக்கப்பட்டால் ஒழிய எந்த இருதயமும் உமக்கு இனிமையை கொண்டுவருவதில்லை” என மேரி பௌலே என்பார் கூறி இவ்வுண்மையை விளக்கியுள்ளார்.

தேவ ஆவியானவர் எங்ஙனம் திருமறையை ஒருவர் பிரசங்கிக்கும் போது பயன்படுத்துகிறாரோ, அதுபோன்றே பாடல்களையும் அவர் பயன்படுத்துகிறார். கிரேட்டன் கின்னஸ் என்பாரின் தாயார், வயல்வெளியில் உழுதுகொண்டிருந்த உழவர் ஒருவர் பாடின பாடலைக்கேட்டு, ஆற்றில் மூழ்கித் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்னும் தனது எண்ணத்தைக் கைவிட்டார். முனைவர் கின்னஸ் பிற்காலத்தில் இவ்வாறு கூறினார். ‘முற்றிலும் நான் தேவனுக்குச் சொந்தம். அந்தக் கிறிஸ்தவ உழவர் தனது தாழ்மையான உழைப்போடு, கர்த்தரைத் துதித்துப்பாடினார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.”

இருவகை ஆபத்துக்களினின்றும் இசை நிகழ்ச்சி ஊழியம் செய்வோர் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். முதலாவது சுயம் அவர்களைப் பற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. வெளியரங்கமாக ஆற்றப்படுகின்ற மற்ற ஊழியங்களைப் போலவே, இதிலும் மிகப்பெரிய சுயம் என்னும் மாயையில் ஒருவர் தனது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வது எளிது. அவர் தனது சொந்தத் திறமையை வெளிப்படுத்தி மக்களைக் கவரவேண்டும் என்னும் சோதனைக்குள் அகப்பட்டுக்கொள்வார். ஆனால், தேவ மக்களின் நற்பேற்றைக் கருத்திற்கொண்டு தேவ மகிமைக்காகப் பாடுவதே சாலவும் சிறந்தது.

இரண்டாவது, மற்றவர்களுக்குப் படிப்பினையூட்டுவதற்கு மாறாக மகிழச் செய்வதற்காக மட்டும் பாடுவதாகும். மகத்துவமான இசை ஞானத்தோடு ஒருவரால் பாடக்கூடும். ஆயின், கேட்போரது உள்ளங்களை தேவ செய்தி சென்றடையத்தக்கதாகப் பாடுவதே சிறந்ததாகும். நாம் அன்புகூருகிற கர்த்தருக்குத் தகுதியற்றதும், கருத்துச் செறிவு அற்றதும், கேட்போர் உணர்ச்சிகளை எழுப்பி விடக்கூடியதுமான பாடல்களைப் பாட ஒருவரால் கூடும். ஆயின் அதில் என்ன பயன்?

வெவ்வேறு பண்பாட்டில் வெவ்வேறு இசை நாட்டம் உண்டாயிருக்கும். ஆனாலும் எல்லாப் பண்பாட்டிலும் பாடல்கள் வேத உபதேசங்களைக் கொண்டதாகவும், தேவ மகிமையைப் பறைசாற்றுவதாகவும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் இருக்கவேண்டும்.

2. Dezember

»… indem ihr zueinander in Psalmen und Lobliedern und geistlichen Liedern redet und dem Herrn in eurem Herzen singt und spielt.« Epheser 5,19

Singen ist hier eng verbunden mit dem Erfülltsein vom Heiligen Geist, so als ob das Lied eine der zwangsläufigen Folgen des Erfülltseins ist. Vielleicht liegt es daran, dass fast alle großen Erweckungsbewegungen der Geschichte auch immer vom Singen begleitet gewesen sind.

Keine andere Gruppe von Menschen hat so viel zu besingen wie die Christen, und kein Volk der Erde hat ein so reiches Erbe an Psalmen, Chorälen und geistlichen Liedern zur Verfügung. Unsere Choräle drücken in majestätischer Sprache aus, was wir so oft empfinden, aber nicht in Worte fassen können. Manche Lieder enthalten auch Gedanken, die unsere eigenen
Erfahrungen weit übersteigen, Choräle der völligen Hingabe wie beispielsweise »Alles übergeb’ ich Jesus.« Doch solche Lieder können wir als das Ziel und die Hoffnung unseres Herzens genauso mitsingen.

Bei geistlichen Liedern kommt es nicht auf den Rhythmus oder die Melodie oder die Harmonien an. Das Wichtige daran ist, dass ihre Botschaft aus dem Herzen heraus kommt und in der Kraft des Heiligen Geistes zu Gott emporsteigt. Mary Bowley hat diese Erkenntnis gut zum Ausdruck gebracht:

O Herr, es kommt nicht darauf an,
Wie schön wir Lieder singen;
Nur das vom Geist bewegte Herz
Kann wirklich etwas vor Dich bringen.

Der Geist Gottes kann Gesang genauso einsetzen wie die Predigt des Wortes. Die Mutter von Grattan Guinness hörte eines Tages einen Bauern beim Pflügen singen, und dadurch besann sie sich noch einmal und ging nicht in den Fluss, wo sie sich eigentlich das Leben nehmen wollte. Dr. Guinness sagte später: »Alles, was ich für Gott bin, das schulde ich im Grunde einem
einfachen christlichen Landmann, der zum Lob Gottes sang, während er seine schwere Arbeit verrichtete.«

Diejenigen, die im Dienst der christlichen Musik stehen, müssen sich aber auch immer gegen zwei Gefahren wehren. Die eine ist die, dass das eigene Ich sich unversehens wichtig machen kann. Wie auch bei anderen Formen des öffentlichen Dienstes ist es hier sehr leicht, sich selbst groß in den Vordergrund zu stellen. Es gibt immer die Versuchung, die Leute mit dem eigenen
Talent beeindrucken zu wollen, anstatt zur Ehre des Herrn zu singen und ein Segen für Gottes Volk zu sein.

Die andere Gefahr besteht darin, eher zu unterhalten als zu erbauen. Es ist durchaus möglich, Worte mit großer musikalischer Fertigkeit zu singen und dabei doch nicht die Botschaft in die Herzen der Zuhörer zu bringen. Und man kann auch Menschen begeistern mit Liedern, die von ihrem Sinn her wertlos und albern und dadurch des Herrn, den wir lieben, unwürdig sind.

Verschiedene Kulturen haben auch einen unterschiedlichen Geschmack in der Musik, aber überall sollten die Lieder von der Lehre her solide, Gott gegenüber ehrerbietig und geistlich aufbauend sein.