November

இறைமகனின் செயலாற்றல்

November 29

“I can of mine own self do nothing.” (John 5:30)

Twice in John 5 the Lord Jesus says that He can do nothing of Himself. In verse 19, He says, “Verily, verily, I say unto you, the Son can do nothing of himself…” Then again in verse 30 He says, “I can of mine own self do nothing…”

When we first read these verses, we are apt to feel disappointed. They seem to say that Jesus was limited in His power, just like ourselves. But if He is God, as He claimed to be, He must be omnipotent. How then could He say that He could do nothing of Himself? Indeed, the enemies of the Gospel have used these verses to show that Jesus was just a man with all the limitations of humanity.

But look more closely! Our Lord was not speaking of His physical power. What He was insisting was that He was so devoted to the will of His Father that He could not do anything on His own initiative. He was so morally perfect that He could not act in self will. He wanted nothing apart from the will of God.

You and I cannot say that we can do nothing of ourselves. Too often we act independently of the Lord. We make decisions without consulting Him. We yield to temptation with full knowledge that we are sinning. We choose our own will above His. The Lord Jesus could do none of these things.

Therefore, instead of suggesting that Jesus Christ was weak and finite, the verses prove the very opposite—that He was divinely perfect. This is made clear by reading the verses in their entirety rather than stopping at midpoint. What Jesus said in verse 19 was, “The Son can do nothing of himself, but what he seeth the Father do: for what things soever he doeth, these also doeth the Son likewise.” In other words, the Son cannot act independently of the Father, but He can do whatever the Father does. It is a claim to equality with God.

Then again in verse 30, Jesus said, “I can of my own self do nothing: as I hear, I judge: and my judgment is just; because I seek not mine own will, but the will of the Father which hath sent me.” This means that He made decisions only on the basis of instructions that He received from His Father, and that His complete submission to God’s will insured that these decisions were correct.

J. S. Baxter points out that this passage contains seven distinct claims by Christ to be equal with God. Equal in working (v. 19); equal in knowing (v. 20); equal in resurrecting (w. 21,28, 29); equal in judging (vv. 22, 27); equal in honor (v. 23); equal in regenerating (vv. 24, 25); equal in self-existence (v. 26). Our Savior is not a weak, frail creature with limited power but omnipotent God manifest in the flesh.

நவம்பர் 29

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. யோவான் 5:30

இறைமகனின் செயலாற்றல்

யோவான் 5ஆம் அதிகாரத்தில் இரண்டு முறை தம்மால் சுயமாய் ஒன்றும் செய்ய முடியாது என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். 19ஆம் வசனத்தில் அவர், ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவனவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயின்றி வேறொன்றையும் தாமாய் செய்யமாட்டார்.” என்று கூறியிருக்கிறார். மேலும், 30ஆவது வசனத்தில், ‘நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை.” என்று உரைத்துள்ளார்.

இவ்வசனங்களை முதன் முதலாக நாம் படிக்கிற வேளையில், நாம் ஏமாற்றம் அடைய ஏதுவுண்டு. நம்மைப்போல இயேசு கிறிஸ்துவும் வலிமையில் ஒரு எல்லைக்குட்பட்டவர் என்று நினைக்க தோன்றுகிறது. அவர் தம்மைக் குறித்துச் சொன்னபடி தேவனானால் சர்வ வல்லமை உடையவராக இருக்க வேண்டுமே. அவ்வாறாயின், தம்மால் சுயமாய் ஒன்றையும் செய்யமுடியாது என்று எப்படி அவர் கூறமுடியும்? நற்செய்திக்கு எதிரிகளாக விளங்குவோர், இப்படிப்பட்ட வசனங்களைக் கொண்டு இயேசு கிறிஸ்துவும் நம்மைப்போல குறைவுள்ள மனிதரே என்று காண்பிக்க முயற்சி செய்கின்றனர்.

இந்த வசனங்களைச் சற்று நெருங்கிப் பாருங்கள்! நமது கர்த்தர் தம்முடைய சரீர வலிமையைக் குறித்து இங்கு பேசவில்லை. தம்முடைய பிதாவினுடைய சித்தத்திற்குத் தம்மையே முற்றிலுமாக ஒப்புவித்து விளங்கிய தன்மையையும், தாமாக முனைந்து ஏதொன்றையும் தன்னிச்சையாகச் செய்ய இயலாததையும்; இங்கே அவர் வலியுறுத்துகிறார்.  ஒழுக்கத்தில் நிறைவானவராக அவர் இருந்த காரணத்தினால் அவர் தமது சித்தத்தில் ஏதொன்றையும் செய்ய முடியாது. தேவனுடைய சித்தமேயன்றி அவர் வேறொன்றையும் விரும்பவில்லை.

நீங்களும் நானும், “நாங்கள் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை” என்று சொல்லமுடியாது. கர்த்தரைச் சாராமல் நாம் அவ்வப்போது பல செயல்களைச் செய்கிறவர்களாக இருக்கிறோம். அவரிடத்தில் கலந்து ஆலோசிக்காமல் பல முடிவுகளை நாமாகவே எடுக்கிறோம். நாம் பாவஞ்செய்கிறோம் என்பதை முற்றிலுமாக அறிந்து சோதனைக்கு இடங்கொடுக்கிறோம். அவருடைய சித்தத்திற்கு மேலாக நமது சித்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறோம். இவற்றில் ஏதொன்றையும் கர்த்தராகி இயேசு கிறிஸ்து செய்கிறதில்லை.

ஆகவே, இயேசு கிறிஸ்து வலிமைகுன்றியவர், எல்லைக்குட்பட்டவர், என்று சொல்வதற்கு மாறாக, அவர் தெய்வீக நிறைவுடையவர் என்றே இவ்வசனம் மெய்ப்பிக்கின்றது. இந்த வசனங்களை நாம் இடையில் நிறுத்தாமல், முழுவதுமாகப் படிப்போமென்றால் இதனைப் புரிந்து கொள்வோம். 19-ஆம் வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறியது யாதெனில், ‘பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயின்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அப்படியே செய்கிறார்” என்பதே பிதாவின்றிக் குமாரன் தனியே ஏதொன்றையும் செய்யமாட்டார். ஆனால் பிதா என்ன செய்கிறாரோ அதையே குமாரனும் செய்கிறார் என்று இதனை விவரித்துக் கூறலாம். தேவனோடு தாம் கொண்டிருந்த சமத்துவத்தை கிறிஸ்து இங்கே நிலை நாட்டுகிறார்.

மீண்டும் 30 ஆவது வசனத்தில், “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது” என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். அதாவது தமது பிதாவிடத்தில் பெறுகின்ற கட்டளைகளின்படியே, அவர் முடிவுகளை எடுக்கிறார் என்பதே இதன் பொருளாகும். தேவனுடைய சித்தத்திற்கு அவர் முற்றிலுமாக ஒப்புவித்தது, அந்த முடிவுகள் யாவும் சரியானவை என்பதைக் காட்டுகிறது.

இப்பகுதியில் தேவனுக்குத் தாம் சமமாக இருப்பதை ஏழு வகைகளில் இயேசு கிறிஸ்து உரிமை பாராட்டியிருப்பதாக J. S. பாக்ஸ்டர் என்பார் கூறியுள்ளார். செயல்பாட்டில் சமத்துவம் (வச.19), அறிந்திருப்பதில் சமத்துவம் (வச.20), உயர்த்தெழச் செய்வதில் சமத்துவம் (வச.21,28,29), தீர்ப்புச் செய்வதில் சமத்துவம் (வச.22,27), கனத்தில் சமத்துவம் (வச.23), மறுபிறப்படையச் செய்வதில் சமத்துவம் (வச.24,25), தாமாக ஜீவனுடையவராக இருப்பதில் சமத்துவம் (வச.26), நமது இரட்சகர் ஏதோ வலுகுன்றிய, நலிவுற்ற குறையுடையவர் அல்லர். அவரோ மாமிசத்தில் வெளிப்பட்ட சர்வ வல்லமையுடைய தேவனே ஆவார்.

29. November

»Ich kann nichts von mir selbst tun.« Johannes 5,30

Zweimal sagt der Herr Jesus im 5. Kapitel des Johannesevangeliums, dass Er von sich aus gar nichts tun kann. In Vers 19 heißt es: »Wahrlich, wahrlich, ich sage euch: Der Sohn kann nichts von sich selbst tun …«, und hier in Vers 30 taucht der Gedanke noch einmal auf.

Wenn wir diesen Vers zum ersten Mal lesen, sind wir möglicherweise enttäuscht. Er scheint auszudrücken, dass Jesus in Seiner Macht sehr begrenzt war, genau wie wir Menschen auch. Aber wenn Er Gott ist, wie Er ja gesagt hat, dann muss Er doch allmächtig sein. Wie konnte Er dann sagen, dass Er von sich selbst aus nichts tun könnte? Tatsächlich haben die Feinde des Evangeliums diesen Vers angeführt, um zu beweisen, dass Jesus nichts weiter als ein Mensch war mit allen menschlichen Unzulänglichkeiten.

Aber sehen wir uns den Vers noch einmal genauer an! Unser Herr redet hier nicht von Seiner körperlichen Kraft. Worauf Er so großen Wert legt, ist vielmehr dies: Er hielt sich so strikt an den Willen Seines Vaters, dass Er nichts aus eigener Initiative heraus tun konnte. Er war moralisch gesehen so vollkommen, dass Er nicht aus Eigenwillen handeln konnte. Er wollte nichts, außer den Willen Gottes zu erfüllen.

Du und ich, wir können nicht behaupten, dass wir nichts aus uns selbst tun können. Viel zu oft handeln wir unabhängig von dem Herrn. Wir treffen Entscheidungen, ohne Ihn vorher zu fragen. Wir geben Versuchungen nach im vollen Bewusstsein, dass wir damit sündigen. Wir setzen unseren eigenen Willen über den Willen Gottes. Der Herr Jesus aber konnte nichts von alledem tun.

Daher beweisen diese Verse nicht etwa, dass Jesus Christus schwach und begrenzt ist, sondern gerade das Gegenteil; dass Er göttlich und vollkommen ist. Das kommt klar heraus, wenn man die Verse ganz liest und nicht mittendrin aufhört. In Vers 19 sagt Jesus: »Der Sohn kann nichts von sich selbst tun, außer was er den Vater tun sieht; denn was der tut, das tut ebenso auch der Sohn.« Mit anderen Worten: Der Sohn kann nicht unabhängig vom Vater handeln, aber Er kann alles tun, was der Vater auch tut. Es ist also eigentlich der Anspruch Jesu, dass Er Gott gleich ist.

Und in Vers 30 heißt es vollständig: »Ich kann nichts von mir selbst tun; so wie ich höre, richte ich, und mein Gericht ist gerecht, denn ich suche nicht meinen Willen, sondern den Willen dessen, der mich gesandt hat.« Das heißt, dass Jesus Seine Entscheidungen nur auf der Grundlage der Anweisungen traf, die Er von Seinem Vater bekam, und dass Seine völlige Unterordnung
unter Gottes Willen die Sicherheit dafür war, dass diese Entscheidungen auch richtig waren.

J.S. Baxter weist darauf hin, dass dieser Abschnitt sieben klare Ansprüche Jesu enthält, Gott gleich zu sein. Er ist Ihm gleich in Seinem Wirken (Vers 19), gleich in Seinem Wissen (Vers 20), gleich in der Auferweckung der Toten (Verse 21.28.29), gleich im Richten (Verse 22.27), gleich in der Ehre (Vers 23), gleich im Schenken des ewigen Lebens (Verse 24.25) und gleich im Leben aus sich selbst heraus (Vers 26). Unser Heiland ist wahrhaftig kein schwaches, zerbrechliches Geschöpf mit begrenzter Macht, sondern Er ist der allmächtige Gott, der Fleisch und Blut angenommen hat.