November

இருக்கும் என் நிலை

November 28

“By the grace of God I am what 1 am.” (1 Cor. 15:10)

One of the self-inflicted agonies of life is trying to be someone you were never intended to be. Everyone is a unique creation of God. As someone has said, “When He made us, He threw away the pattern.” He never intended us to try to change it.

Maxwell Maltz wrote, “‘You’ as a personality are not in competition with any other personality simply because there is not another person on the face of the earth like you, or in your particular class. You are an individual. You are unique. You are not ‘like’ any other person and can never become ‘like’ any other person. You are not ‘supposed’ to be like any other person and no other person is ‘supposed’ to be like you.”

“God did not create a standard person and in some way label that person by saying ‘this is it.’ He made every human being individual and unique just as He made every snowflake individual and unique.”

Everyone of us is the product of the wisdom and love of God. In making us as we are, He knew exactly what He was doing. Our appearance, our intelligence and our talents represent His best for us. Anyone with infinite knowledge and infinite love would have done the same.

Now then, to wish we were someone else is an insult to God. It suggests that He has made a mistake or has withheld from us something that would have been for our good.

Lusting to be like someone else is futile. There is a finality about what God has made us and what He has given us. Of course we can imitate the virtues of other people, but what we are thinking about here is what we are as God’s creation.

If we go through life dissatisfied with God’s design for our lives, we will be paralyzed with feelings of inferiority. But it is not a question of inferiority. We are not inferior—just individual and unique.

The attempt to be someone else is doomed to end in failure. It is as unthinkable as a little finger trying to do the work of the heart. That was not God’s design and it simply won’t work.

The proper attitude is to say with Paul, “By the grace of God I am what I am” (1 Cor. 15:10). We should rejoice in what we are as a distinct design of God and determine to use what we are and have to the maximum for His glory. There are many things we won’t be able to do, but there are other things we can do that others cannot.

நவம்பர் 28

ஆகிலும் நான் தேவ கிருபையினாலே இருக்கிறேன். 1.கொரிந்தியர் 15:19

இருக்கும் என் நிலை

ஒருவர் எத்தகைய மனிதராக இருக்கவேண்டும் என்று திட்டமிடக் கூடாதோ, அவ்வகை மனிதராக மாறவேண்டும் என்று முயற்சி செய்வது தம்மீது தானே சுமத்திக்கொள்கிற வேதனைகளில் ஒன்றாகும். மனிதன் ஒவ்வொருவரும் தனிச் சிறப்பு வாய்ந்தவகையில் படைக்கப்பட்டிருக்கின்றனர். “அவர் நம்மைப் படைத்தபோது, மாதிரியைத் தூர எறிந்துவிட்டார்” என்று ஒருவர் கூறியிருக்கிறார். அதனை நாம் மாற்ற முயற்சி செய்யக்கூடாது என்றே அவர் விருப்பம் கொண்டிருக்கிறார்.

மாக்ஸ்வேல் மால்ட்ஸ் என்பார் இதைப் பற்றி எழுதியுள்ளதாவது. “ஆள் தன்மையின்படி” நீங்கள் என்பவர் வேறொருவருடைய ஆள்தன்மையோடு போட்டியிடமுடியாது. ஏனெனில் உங்களைப் போல ஆள்தன்மையடைய வேறொருவர் இவ்வுலகில் இல்லை. நீங்கள் தனிப்பட்ட மனிதர், நீங்கள் தனிச் சிறப்பு படைத்தவர். நீங்கள் வேறொருவரைப் “போல” இல்லை, நீங்கள் ஒருபோதும் வேறொருவரைப் “போல” ஆகவும் முடியாது. உங்களை வேறொரு மனிதரைப் போல “பாவிக்க” முடியாது. மேலும் வேறொரவரை உங்களைப் போல “பாவிக்க” முடியாது.

“இவன்தான் மனிதனுக்கு அளவுகோல்” என்று ஒரு மனிதனை தேவன் படைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனையும், தனி மனிதனாகவும், தனிச்சிறப்பு வாய்ந்தவனாகவும் படைத்துள்ளார். ஒவ்வொரு பனித் திவலையையும் தனித்தனியாகவும், தனிப்பண்பு உடையதாகவும் படைத்துள்ளதுபோலவே மனிதனையும் படைத்துள்ளார்.

தேவனுடைய ஞானத்தினாலும் அன்பினாலும் ஒவ்வொரு மனிதனும் படைக்கப்பட்டிருக்கிறான். நாம் இருக்கிற தனி ஒரு நிலையில் நம்மை உருவாக்கும்போது, தாம் செய்கிறது என்ன என்பதை அவர் அறிந்திருந்தார். எவையெல்லாம் நமக்கு சிறந்தவை என்று அறிந்தவராக, அதன்படியே நமது தோற்றம், நமது அறிவாற்றல், நமது செயல்திறம், ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார். முடிவில்லா ஞானமும், முடிவில்லா அன்புமும் உடைய எவரும் இப்படித்தான் உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆகவே இப்பொழுது, நாம் வேறொருவரைப் போல இருக்க வேண்டுமென்று நினைப்பது தேவனுக்கு அவமதிப்பைக் கொண்டு வருவதாகும். அவ்வாறு நினைப்பது, அவர் நம்மைப் படைக்கும்போது ஏதோ தவறு செய்துவிட்டார் என்றோ, நமது நன்மைக்கு ஏதுவான ஒன்றைத் தராமல் மறந்துவிட்டார் என்றோ பொருளாகிவிடும்.
வேறொருவரைப்போல ஆக வேண்டும் என்று நினைப்பது வீண் முயற்சியாகும். தேவன் எவ்வாறு நம்மை உருவாக்கியிருக்கிறாரோ, நமக்கு எதைத் தந்திருக்கிறாரோ அதில் நிறைவான முடிவு இருக்கிறது. மற்றவர்களுடைய பண்புகளை நாம் பின்பற்றி வாழலாம் என்பதில் ஐயமில்லை. இங்கே அதைக் குறித்து நாம் சிந்திக்கவில்லை. தேவனுடைய படைப்பில் நாம் யாராக இருக்கிறோம் என்பதையே இங்கு சிந்திக்கிறோம்.

நம்முடைய வாழ்க்கைக்கென தேவன் திட்டமிட்டுள்ளதில் நாம் மனநிறைவு அற்றவர்களாக இருப்போமானால், நாம் தரக்குறைவானவர்கள் என்னும் எண்ணத்தில் செயலிழந்து போவோம். நாம் தரக்குறைவானவர்கள் அல்லர்… நாம் தனிப்பட்டோர், தனிச்சிறப்புடையோர். தரம் குறைந்தோர் என்ற கேள்விக்கே இடமில்லை.
மற்றவரைப்போல ஆக வேண்டுமென்ற முயற்சி தோல்வியில் முடிவடையும். நமது சுண்டுவிரல், இதயம் செய்யும் வேலையைச் செய்ய  வேண்டும் என்று நினைப்பது நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகும். அது தேவனுடைய திட்டமன்று. நிச்சயமாக அது நிறைவேறக்கூடாத ஒன்றாகும்.

“ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்” (1.கொரி.15:10) என்று பவுல்  கூறிய வண்ணம், நம்முடைய மனப்பான்மை இருக்குமாயின்அதுவே தகுதியானது. தனிச்சிறப்பு வாய்ந்த வகையில் படைக்கப்பட்டிருப்பது குறித்து நாம் களிகூர வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் இருக்கிற வண்ணம் இருந்து தேவனுக்கு மகிமையாக வாழ வேண்டும். மற்றவர்கள் செய்யும் பல செயல்களை நம்மால் செய்யமுடியாது. ஆனால் மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை நம்மால் மட்டுமே செய்ய முடியும்.

28. November

»Aber durch Gottes Gnade bin ich, was ich bin.« 1. Korinther 15,10

Eine der Qualen im Leben, die wir uns selbst bereiten, ist der Versuch, jemand anders sein zu wollen, jemand, der wir eigentlich nie sein sollten. Jeder Mensch ist ein einzigartiges Geschöpf Gottes. In diesem Zusammenhang hat einmal jemand gesagt: »Als der Herr uns geschaffen hatte, hat Er die Gussform weggeworfen.« Denn Er wollte nicht, dass wir jemals versuchten,
noch etwas daran zu ändern.

Maxwell Maltz hat dazu geschrieben: »Du als Persönlichkeit stehst mit keiner anderen Person im Wettbewerb, einfach weil es keinen anderen Menschen auf der ganzen Welt gibt, der genauso ist wie du oder auch nur von deiner besonderen Art. Du bist ein Individuum. Du bist einzigartig. Du bist nicht genauso wie ein anderer und kannst es auch nie werden. Man erwartet nicht von dir, dass du so wie jemand anders bist, und man kann auch von keinem anderen Menschen verlangen, dass er so sein soll wie du. Gott hat kein Standardmodell erschaffen und ihm dann sozusagen
ein Etikett aufgeklebt mit den Worten: ›Das ist der eigentliche Mensch.‹ Er hat vielmehr jedes menschliche Wesen als Individuum und Einzelstück erschaffen, genauso wie Er jede Schneeflocke einzeln und einzigartig gemacht hat.«

Jeder von uns ist das Ergebnis der Weisheit und Liebe Gottes. Als Er uns so geschaffen hat, wie wir sind, da wusste Er genau, was Er tat. Unsere äußere Erscheinung, unsere Intelligenz und unsere Begabungen stellen das Beste dar, was der Herr für uns vorsehen konnte. Es ist das Ergebnis Seines unendlichen Wissens und seiner unendlichen Liebe zu uns, wie Er alles passend auf uns zugeschnitten hat.

Wenn wir uns nun also wünschen, jemand anders zu sein, ist das eigentlich eine Beleidigung für Gott. Wir geben Ihm damit zu verstehen, dass Er etwas falsch gemacht oder uns etwas vorenthalten hat, was besser für uns gewesen wäre.

Wenn wir uns sehnlichst wünschen, ein anderer zu sein, ist das ein sinnloser Wunsch. Denn es steht ein Ziel und Zweck hinter dem, wie Gott uns gemacht hat und was Er uns geschenkt hat. Natürlich können wir die Tugenden anderer Menschen nachmachen; aber worüber wir hier nachdenken, ist ja eher, was wir als Geschöpfe Gottes eigentlich sind.

Wenn wir durchs Leben gehen und dabei ständig unzufrieden sind mit Gottes Plan für unser Leben, dann werden wir von Minderwertigkeitskomplexen regelrecht gelähmt. Aber hier geht es gar nicht darum, was wir wert sind. Wir sind nicht minderwertig, sondern einzigartig.

Der Versuch, jemand anders zu werden, ist von Anfang an zum Scheitern verurteilt. Das ist so undenkbar, wie wenn ein kleiner Finger versuchen wollte, die Arbeit des Herzens zu übernehmen. Das war nie Gottes Absicht, und es funktioniert auch einfach nicht.

Die richtige Haltung ist vielmehr, mit Paulus zu sagen: »Durch Gottes Gnade bin ich, was ich bin.« Wir sollten uns an dem freuen, was wir nach Gottes klarem Entwurf sind, und uns entschließen, das zu gebrauchen, was wir sind und haben, um so viel wie möglich zur Ehre des Herrn zu wirken. Es gibt sicher viele Dinge, die wir nie werden tun können, aber es gibt auch andere, die nur wir leisten können und sonst keiner.