November

நன்றி பாராட்டுதல்

November 25

“…and be ye thankful.” (Col. 3:15)

A thankful heart adds sparkle to all of life. At the close of a dinner, one of the children said, “That was a good meal, Mother.” That remark created a new sense of warmth in an already happy house.

Too often we fail to express our thanks. The Lord Jesus healed ten lepers, but only one returned to give thanks, and that one was a Samaritan (Lu. 17:17). Two lessons emerge. Gratitude is rare in a world of fallen men. And when it does appear, it often comes from the least-expected sources.

It is easy for us to feel grieved when we show kindness to others and they do not even have the courtesy to say “Thank you.” By the same token, we should realize how others feel when we fail to express gratitude for favors received.

Even a cursory examination of the Bible reveals that it is punctuated with exhortations and examples of thanksgiving to God. We have so many things for which to be grateful to Him; we could not possibly tabulate them all. Our whole lives should be psalms of thanks to Him.

Ten thousand, thousand precious gifts My daily thanks employ; Nor is the least a cheerful heart To taste those gifts with joy.

And we should cultivate the habit of expressing thanks to one another as well. A warm handshake, a phone call or a letter—what uplift they bring! An aged doctor received a note of thanks along with the payment from one of his patients. He kept that note among his prized possessions; it was the first one he had ever received.

We should be quick to express gratitude for gifts, for hospitality, for free transportation, for the loan of tools or other equipment, for help with our work projects, for every form of kindness and service that is shown to us.

The trouble is that too often we take these things for granted. Or we are too undisciplined to sit down and write a letter. In that case, we must work at the habit of thanksgiving, developing an awareness of all that we have for which to be grateful, then training ourselves to acknowledge these things promptly. The promptness of the acknowledgment doubles the thanks.

நவம்பர் 25

நன்றியறிதலுள்ளவர்களுமாயிருங்கள். கொலோசெயர் 3:15

நன்றி பாராட்டுதல்

நன்றியறிதலுள்ள உள்ளம் வாழ்க்கை முழுவதும் பளிச்சிடச் செய்யும் ஒளியை நல்கும். உணவு உண்டபின் ஒரு பிள்ளை, ‘இன்று சுவையான உணவு, அம்மா” என்று கூறினால், ஏற்கெனவே மகிழ்ந்திருக்கும் குடும்பத்தில் புதிய வகையில் பாசவுணர்ச்சி பெருகும்.

நம்முடைய நன்றியறிதலை அவ்வப்போது நாம் தெரிவிக்கத் தவறி விடுகிறோம். பத்து தொழுநோயாளிகளைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குணமாக்கினார். ஆனால் அவர்களில் ஒருவன் மட்டுமே திரும்பி வந்து நன்றி கூறினான். அவனோ சமாரியன் (லூக்.17:17). இங்கு இரண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. வீழ்ந்துபோன மனித சமுதாயத்தில் நன்றியறிதலைக் காண்பது அரிதாயிருக்கிறது. மேலும் நன்றியறிதல் வெளிப்படுகிறபோது, பெரும்பாலும் எதிர்பாராத இடத்திலிருந்தே அது வெளிப்படுகிறது.

பிறர்பால் தயைபாராட்டும் வேளையில் மரியாதைக்குரிய வகையில் ‘நன்றி” என்று அவர்கள் கூறாவிடில், நாம் துக்கமடைவது இயற்கை. இதுபோலவே, பிறரிடமிருந்து சகாயத்தைப் பெற்ற நாம், நம்முடைய நன்றியறிதலை வெளிப்படுத்தாவிடில் அவர்கள் வருத்தமடைவர் என்று நாம் உணரவேண்டும்.
திருமறை மேலோட்டமாக ஆராய்ந்து பார்க்குங்கால், தேவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதற்கான அறிவுரைகளும் எடுத்துக்காட்டுக்களும், அங்கு நிறைந்திருப்பதைக் காணலாம். நாம் அவருக்கு நன்றி செலுத்துவதற்கான பல காரணங்கள் உள்ளன. எல்லாவற்றையும் பட்டியலிட்டுக் காட்டுவது கடினம். நம்முடைய முழுவாழ்க்கையும் நன்றி நாவிலும் கீதங்களாகக் காணப்பெறுதல் வேண்டும்.

ஆயிரம் பதினாயிரம் நன்மைகள் தந்திட்டார்.
பாயிரம் பாடி நாம் நன்றிகள் செலுத்துவோம்.
உள்ளங்கள் நிறைந்திட, சுவைத்திட, மகிழ்ந்திட,
நன்மைகள் ஏராளம் சொல்லியே முடியாது.

ஒருவருக்கொருவர் நன்றி பாராட்டுகிறவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். அந்தப் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். நன்றியறிதலோடு கூடிய கைகுலுக்கல், தொலைபேசியில் தொடர்பு கொள்ளுதல், ஒரு மடல் – எத்தனை மகிழ்ச்சியைக் கொண்டுவரும்! வயது முதிர்ந்த மருத்துவர் ஒருவர் நலம் பெற்ற நோயாளி ஒருவரிடமிருந்து சிகிட்சைக்கான தொகையோடு நன்றி மடல் ஒன்றையும் பெற்றார். அந்த மடலை, தன்னுடைய வீட்டிலிருந்த விலைமதிப்புடைய பொருட்களோடு சேர்த்து வைத்துக் கொண்டார். அவர் பெற்ற நன்றி மடல் அதுவே.

நாம் பெறுகிற அன்பளிப்புகளுக்கும், விருந்தோம்பல்களுக்கும், பயணவசதிகளுக்கும், உடனடியாக நன்றி செலுத்தவேண்டும். சில பொருட்களைக் கடன்வாங்குகிறோம், சில வேளைகளில் உதவியை நாடுகிறோம். எவ்விதமாக நன்மையைப் பெற்றிடினும், உடனடியாக நம்முடைய நன்றியறிதலை வெளிப்படுத்தவேண்டும்.

இவ்வகையான நன்மைகள் நமக்கே உரியன என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். அமர்ந்திருந்து மடல் எழுதுவதற்கு நம்மை ஒழுங்குபடுத்தாதிருக்கிறோம். நன்றிசெலுத்தக்கூடிய பழக்கத்தை வளர்க்க நாம் கடும் முயற்சி செய்யவேண்டும். அடைந்த நன்மைகள் எல்லாவற்றுக்கும் நன்றிபகிர நாம் கவனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். உடனடியாக நன்றி கூறிஎழுத பயிற்சி பெறவேண்டும். உடனடியாக எழுதப்படுகிற இத்தகைய மடல் இரண்டத்தனையான நன்றி கூறுதலுக்கு ஒப்பாகும்.

25. November

»… und seid dankbar.« Kolosser 3,15

Ein dankbares Herz lässt das ganze Leben aufleuchten. Als das Mittagessen zu Ende ist, sagt eins von den Kindern: »Das war aber ein gutes Essen, Mama.« Dieser Satz bringt ein neues Gefühl der Herzlichkeit in die ohnehin schon glückliche Familie.

Allzu oft vergessen wir, unseren Dank auszudrücken. Der Herr Jesus heilte einmal zehn Aussätzige, aber nur ein einziger kam zu Ihm zurück, um Ihm zu danken, und das war ein Samariter (siehe Lukas 17,17). Zwei Dinge können wir daraus lernen. Dankbarkeit ist selten in der Welt des gefallenen Menschen. Und wenn sie vorkommt, dann kommt sie oft aus einer Ecke, aus der wir es am wenigsten erwartet haben.

Wir sind leicht gekränkt, wenn wir anderen eine Freundlichkeit erwiesen haben und sie noch nicht einmal die Höflichkeit besitzen, dafür »Danke « zu sagen. Doch daraus sollten wir nur lernen, wie andere sich vorkommen, wenn wir ihnen den Dank für einen Gefallen, den sie uns getan haben, schuldig bleiben.

Selbst ein oberflächliches Lesen in der Bibel zeigt uns schon, dass überall in Ermahnungen und Beispielen betont wird, wie wichtig unser Dank an Gott ist. Wir haben so vieles, für das wir Ihm dankbar sein müssen; wir könnten es gar nicht alles aufzählen. Unser ganzes Leben soll eigentlich ein einziger Dankpsalm für Ihn sein.

O dass ich tausend Zungen hätte
Und einen tausendfachen Mund,
So stimmt ich damit um die Wette
Vom allertiefsten Herzensgrund
Ein Loblied nach dem anderen an
Von dem, was Gott an mir getan.

Und wir sollten die Gewohnheit, uns untereinander Dank zu sagen, auch einüben. Ein herzlicher Händedruck, ein Anruf oder ein Brief – wie viel Auftrieb können sie geben! Ein sehr betagter Arzt erhielt von einem seiner Patienten zusammen mit der Bezahlung einer Rechnung auch einen kurzen Dankesbrief. Er bewahrte ihn unter seinen kostbarsten Besitztümern auf; denn es war der erste, den er in seinem ganzen Leben bekommen hatte.

Wir sollten sofort ein Dankeschön sagen für Geschenke, für Gastfreundschaft, für das Mitnehmen im Auto, für das Ausleihen von Werkzeugen oder anderen Geräten, für die Hilfe bei irgendeinem Projekt, für jede Form der Freundlichkeit und jeden Dienst, der für uns getan wird.

Das Dumme ist, dass wir allzu oft solche Dinge für selbstverständlich halten. Oder wir haben zu wenig Disziplin, uns hinzusetzen und einen Brief zu schreiben. In diesem Fall müssen wir an uns arbeiten, uns regelrecht angewöhnen zu danken, ein Bewusstsein entwickeln für all das, was wir haben und wofür wir dankbar sein sollten. Und dann müssen wir uns darin trainieren, unsere Anerkennung auch sofort auszusprechen. Denn wenn ein Dank prompt kommt, ist er doppelt so viel wert.