November

மறுதலித்தல்

November 24

“Then began he to curse and to swear.” (Matt. 26:74)

A bishop was walking alone in his garden one day, meditating on the activities of the past week. When the memory of a very embarrassing incident flashed across his mind, he let out a string of expletives that were rather salty, to say the least. One of his parishioners, walking on the other side of the high garden wall, heard the unministerial language and gasped in disbelief.

It was a case of private profanity—a heartbreaking trial in the life of many an earnest child of God. Hundreds groan under the oppression of this hideous habit, realizing how dishonoring it is to the Lord and how defiling it is in one’s own life. Yet all their efforts to break the habit prove fruitless.

The unwelcome words usually pour forth when a person is alone (or thinks he is) and when he is under nervous tension. Sometimes they are the audible expression of pent-up anger. Sometimes they give vent to our feelings of frustration. In the bishop’s case, they were his natural reaction to the shame of being embarrassed.

Even worse than the agony of private profanity is the fear that some day the words will slip out in public. Or when we are asleep. Or when we are under an anesthetic in the hospital.

This old habit returned to Peter on the night of the Savior’s trial. When he was pointed out as a companion of Jesus of Galilee, he denied it with curses and swearing (Matt. 26:74). He never would have done it in a relaxed state, but now he was in peril and in extreme duress, and the words came forth with all the facility of his unconverted days.

In spite of our best intentions and most earnest resolutions, the words slip out before we have a chance to think. They catch us completely off guard.

Must we despair of ever conquering this Goliath in our lives? No, there is the promise of victory over this as over all other temptations (1 Cor. 10:13). First, we must confess and forsake the sin every time we fall. Then we must cry to God to put a watch before our lips. We must ask for power to respond to the unfavorable circumstances of life with poise and quietness. Sometimes the act of confessing the fault to some other believer helps to break the powerful habit. Finally, we must always remember that while others may not hear it on earth, our Father hears it in heaven. The remembrance of how offensive it is to Him should serve as a powerful deterrent for us.

நவம்பர் 24

அவன் சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். மத்தேயு 26:74

மறுதலித்தல்

ஒருநாள் தன்னுடைய தோட்டத்தில் தனியாக நடந்து கொண்டிருந்த ஒரு பிஷப் முந்தின வாரத்தில் நடந்த நிகழச்சிகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் இடர்பாடு உண்டாக்கிய ஒரு நிகழ்ச்சி அவருடைய நினைவுக்கு வந்தது. உடனடியாக அவருடைய வாயிலிருந்து சில தவறான வாhத்தைகள் வெளிவந்தன. தோட்டச் சுவரின் மறுபக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆலய உறுப்பினர், ஒழுக்கமற்ற சொற்களைப் பிஷப் பேசுகிறார் என்பதை அறிந்து, நம்பிக்கையற்றவராகப் பெருமூச்சுவிட்டார்.

இது இரகசியமான முறையில் தெய்வநிந்தனை செய்வதாகும், உற்சாகமுடைய இறைமக்கள் பலருடைய வாழ்க்கையில் இருதயத்தை நொறுக்கும் சோதனையாக இது எழுகிறது. இந்த அருவருப்பான பழக்கத்தினால் நூற்றுக் கணக்கானோர் கொடுமைக்கு உட்பட்டவர்களாக மனம் புழுங்குகின்றனர். இது கர்த்தரைக் கனவீனப்படுத்துவதாகவும், சொந்த வாழ்க்கையைத் தீட்டுப்படுத்துவதாகவும் இருக்கிறதை உணர்ந்து வருந்துகின்றனர். ஆயினும், தங்களுடைய பழக்கத்தை உடைத்துப்போட அவர்கள் செய்கிற முயற்சி அனைத்தும் வீணாகப்போகின்றன.

பெரும்பாலும் ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது (தனியாக இருக்கிறோம் என்று எண்ணும்போதே) அவனுடைய வாயிலிருந்து அருவருப்பான வார்த்தைகள் உதிருகின்றன. அந்நேரத்தில் அவன் தன் நரம்பு மண்டலத்தில் பதற்றம் அடைந்தவனாக இருக்கிறான். தான் அடக்கிவைத்த கோபத்தைப் பிறர் கேட்கக்கூடிய வகையில் சில சமயங்களில் அவன் வெளிப்படுத்துகிறான். சில வேளைகளில் நமது ஏமாற்றத்தின் உணர்ச்சிகளை வெளிக்கொட்டுகிறான். தான் அடைந்த அவமானத்தைச் சகிக்கக் கூடாமல், தனது சுபாவத்தின்படி பிஷப் அன்று நடந்து கொண்டார்.

இரகசியமான முறையில் புனிதமற்ற முறையில் நடந்து கொள்வதைக்காட்டிலும், அந்த வார்த்தைகள் பொது இடங்களில் வாயிலிருந்த வெளிப்படுமென்றால் அவை மிகவும் கேவலமானதாக காணப்படும். ஒருவேளை நமது தூக்கத்தில் அவ்வாறு பேசிவிடுவோம். இல்லையேல் மருத்துவமனையில் மயக்கமருந்து கொடுத்திருக்கும்போது அவ்வாறு நடந்துவிடுகிறது.

நமது இரட்சகர் விசாரிக்கப்பட்ட அன்று இரவு பேதுருவின் வாழ்வில் இருந்த முந்தின பழக்கம் திரும்பி வந்துவிட்டது. கலிலேயாவைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் கூட்டாளி என்று அவனைக்குறித்து சொன்னவுடன் அதை அவன் மறுத்தரைத்துச் சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். (மத்.26:74). எவ்விதப் பதற்றமும் இல்லாத சூழ்நிலையில் அவன் அவ்விதமாகப் பேசியிருக்கமாட்டான். இப்பொழுதோ அவன் பேராபத்திற்குள் அகப்பட்டுக்கொண்டான். துன்பத்தின் மிகுதியால், மனந்திரும்பாத நாட்களுக்குரிய சொற்கள் தடையின்றி பேதுருவினிடத்திலிருந்து வெளிப்பட்டன.

மனமார்ந்த நோக்கமும், மிகுந்த ஆர்வத்துடனும் கூடிய தீர்மானமும் உடையவர்களாக நாம் இருப்பினும், நமது மனது சிந்திப்பதற்கு முன்னதாகவே வாயிலிருந்து சொற்கள் நழுவி வெளிவந்து விடுகின்றன. முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் நாம் இருக்கும்போது, நாம் அகப்பட்டுக்கொள்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் காணும் கோலியாத்தைத் தேற்கடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் நம்மை மனத்தளர்ச்சி அடையச் செய்யவேண்டுமோ? இல்லை. மற்ற சோதனைகளைப்போலவே இந்தச் சோதனையை வெல்லவும் வாக்குறுதி நமக்குத் தரப்பட்டுள்ளது. (1.கொரி.10:13). முதலாவதாக, நாம் வீழ்ந்துபோகிற ஒவ்வொரு முறையும், அதனை அறிக்கை செய்து விட்டொழிக்க வேண்டும். பின்னர் நமது உதடுகளுக்குக் காவல் வைக்கவேண்டும் என்று தேவனிடம் அழுது முறையிடவேண்டும். சாதகமற்ற சூழ்நிலைகளில் சாந்தத்தோடும் அமைதியாகவும் இருக்கத் தேவையான வலிமையை நாம் பெற்றிட வேண்டுதல் செய்யவேண்டும். சிலவேளைகளில், இதைக் குறித்து மற்ற விசுவாசிகளிடம் அறிக்கை செய்தால் இந்தப் பழக்கத்தைக் கைவிட முடியும். கடைசியாக, இந்த பூமியில் ஒருவரும் இதைக் கேட்காவிடினும், விண்ணுலகத் தந்தை கேட்கிறார் என்பதை எப்பொழுதும் நினைவுகூர வேண்டும். நம்முடைய இப்பழக்கம் அவரை எவ்வளவாகப் புண்படுத்தும் என்பதை நாம் எண்ணிப் பார்ப்போமாயின்;, அதுவே வலிமைமிக்க தடையாக நமக்கு உதவிசெய்யும்.

24. November

»Da fing er an, sich zu verwünschen und zu schwören.« Matthäus 26,74

Ein Bischof ging eines Tages allein in seinem Garten spazieren und dachte über die Ereignisse der vergangenen Woche nach. Als ihn plötzlich die Erinnerung an einen sehr peinlichen Vorfall überfiel, brach er in eine ganze Reihe von Flüchen aus, die ziemlich saftig waren, um es noch milde auszudrücken. Ein Mann aus seiner Gemeinde, der gerade auf der anderen Seite der hohen Gartenmauer die Straße entlangging, hörte die höchst ungeistlichen Worte seines Bischofs und hielt ungläubig die Luft an.

Es war ein Fall von heimlichem Fluchen, eine schwere Versuchung im Leben vieler Kinder Gottes, die es sonst sehr ernst meinen. Hunderte stöhnen unter dem Druck dieser schlimmen Angewohnheit; sie erkennen wohl, wie entehrend das Fluchen für den Herrn ist und wie befleckend für das eigene Leben. Und doch erweisen sich alle ihre Bemühungen, diese Gewohnheit
abzustellen, als fruchtlos.

Der ungebetene Wortschwall ergießt sich gewöhnlich dann, wenn ein Mensch allein ist (oder wenigstens glaubt, allein zu sein) und wenn er unter nervöser Anspannung steht. Manchmal sind Flüche der hörbare Ausdruck aufgestauter Wut. Manchmal machen wir so unserem Gefühl der Enttäuschung Luft. Im Fall des Bischofs war es seine natürliche Reaktion auf die Schande, dass er in so eine peinliche Situation gebracht worden war.

Noch schlimmer als die Qual dieses heimlichen Fluchens ist die Angst, dass eines Tages solche Worte uns auch in der Öffentlichkeit über die Lippen gehen könnten. Oder wenn wir im Schlaf reden. Oder wenn wir im Krankenhaus in der Narkose liegen.

Petrus kehrte eines Nachts zu dieser alten Gewohnheit zurück, als der Heiland vor Gericht stand. Als man herausfand, dass er ein Gefährte des Jesus aus Galiläa sein musste, da leugnete er es mit Schwüren und Verwünschungen (siehe Matthäus 26,74). Das hätte er in entspanntem Zustand niemals getan, aber jetzt war er in Gefahr und in äußerster Not, und die Worte kamen ihm in einer Leichtigkeit, wie er sie nur aus der Zeit vor seiner Bekehrung her kannte.

Trotz unserer besten Absichten und unserer ernsthaftesten Entschlüsse rutschen uns diese Worte heraus, bevor wir überhaupt die Möglichkeit haben, darüber nachzudenken. Sie überraschen uns völlig unvorbereitet.

Müssen wir nun verzweifeln und gegenüber diesem Goliath in unserem Leben kapitulieren? Nein, wir haben die Verheißung des Sieges über diese Versuchung wie auch über alle anderen (siehe 1. Korinther 10,13). Zunächst einmal müssen wir die Sünde bekennen und uns von ihr abwenden, und zwar jedes Mal, wenn wir wieder schwach geworden sind. Dann müssen wir zu Gott rufen, dass Er genau auf unsere Lippen achtet. Wir müssen Ihn um die Kraft bitten, auf die ungünstigen Umstände unseres Lebens mit Gelassenheit und Ruhe zu reagieren. Manchmal hilft uns auch
das Gespräch mit einem anderen Gläubigen; wenn wir in seiner Gegenwart unseren Fehler bekennen, fällt es uns leichter, diese schlechte Gewohnheit abzubauen. Und schließlich müssen wir uns immer wieder daran erinnern, dass unser Vater im Himmel alles hört, auch wenn andere Menschen auf Erden es nicht mitbekommen. Der Gedanke daran, wie beleidigend Fluchen für Gott ist, sollte eine wirkungsvolle Abschreckung für uns sein.