November

பிரபஞ்சம் கீழ்ப்படிதல்

November 21

“At the name of Jesus every knee should bow, of things in heaven, and things in earth, and things under the earth; and…every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.” (Phil. 2:10, 11)

What a scene that will be! Every knee in the universe bowing to the sacred name of Jesus! Every tongue confessing that He is Lord! God has decreed it and it will surely come to pass.

This is not universal salvation. Paul is not suggesting here that all created beings will eventually embrace Christ as their living, loving Lord. Rather he is saying that those who refuse to make the great confession in this life will be compelled to make it in the next. All created beings will eventually acknowledge the truth about Jesus Christ. There will be universal submission.

In one of his messages, Jesus is Lord, John Stott said, “During the coronation of Her Majesty the Queen in Westminster Abbey, one of the most moving moments was when the crown was about to be placed upon her head and when the Archbishop of Canterbury, the chief citizen in the country, called four times towards each point of the compass in the Abbey, north, south, east and west, ‘Sirs, I present unto you the undoubted Queen of this realm. Are you willing to do her homage?’ And not until a great affirmative shout had thundered down the nave of Westminster Abbey four times was the crown placed upon her head.”

Then John Stott added, “And I say unto you tonight, Ladies and Gentlemen, ‘I present unto you Jesus Christ as your undoubted King and Lord. Are you willing to do Him homage?’”

That insistent question rings down the centuries. From many, a great affirmative shout goes up, “Jesus Christ is our Lord.” From others the defiant reply is, “We will not have this man to reign over us.” The clenched fist will one day be forced open and the hitherto unbending knee will bow to Him whose Name is above every Name. The tragedy is that it will be too late then. The day of God’s grace will have ended. The opportunity to trust the sinner’s Savior will have passed. The One whose Lordship had been spurned will then become the Judge, seated upon a great white throne.

If He is not your Lord today, confess Him as such. Be willing to do Him homage!

நவம்பர் 21

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும் பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும்  அறிக்கை பண்ணும்படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2:10-11.

பிரபஞ்சம் கீழ்ப்படிதல்

என்னே, அந்தக் கண்கொள்ளாக் காட்சி! இயேசு கிறிஸ்துவின் புனித நாமத்திற்கு முன்பாக இப்பிரபஞ்சத்தினர் அனைவருடைய கால்களும் முடங்கும் காட்சி! எல்லா நாவுகளும் அவரே கர்த்தரென்று அறிக்கை பண்ணும் காட்சி! இங்ஙனம் நடைபெறும் என தேவன் ஆணையிட்டிருந்தார். ஆகவே இது நிகழப் போவது உறுதி.

இப்பிரபஞ்சத்தினர் அனைவரும் இரட்சிப்படைவர் என்பது இதன் பொருளன்று. படைக்கப்பட்டோர் அனைவரும், உயிரோடிருக்கிறவரும் அன்புகூருகிறவருமாகிய கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வர் என்று பவுல் இங்கு கூறவில்லை. மாறாக, இவ்வுலக வாழ்க்கையில், இந்த மகா அறிக்கையைச் செய்ய மறுக்கிறவர்கள், அடுத்துவரும் வாழ்க்கையில் அதைச் செய்தே ஆகவேண்டும் என்றே அவர் கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் மகத்துவமான உண்மைகளை தேவனால் படைக்கப்பட்டோர் அனைவரும் முடிவில் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அது இப்பிரபஞ்சம் கீழ்படியும் காட்சியாக விளங்கும்.

„இயேசுவே கர்த்தர்“ என்னும் தலைப்பில் ஜான் ஸ்டாட் என்பார் அளித்த செய்தி ஒன்றில் கூறியுள்ளதாவது. ‘வெஸ்மின்ஸ்ட்ர் ஆபேயில் மாக கனம்பொருந்திய இங்கிலாந்து அரசி முடிசூட்டப்பட்ட விழாவில், கேண்டர்பரி ஆர்பிஷப் அந்த நாட்டின் முதல் குடிமகன் என்னும் அடிப்படையில், கிரீடத்தை அன்னாருடைய தலையில் சூட்டுமுன்னர் நான்கு தடவை ஒரே கேள்வியை எழுப்பினார். ‘கனம் பொருந்தியவர்களே, ஐயத்திற்கு இடமற்றபடி இந்த நாட்டின் அரசியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீங்கள் இவரைப் பணிந்து புகழ விருப்பமுடையவர்களாக இருக்கிறீர்களா?” என்று அந்த வளாகத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு திக்குக்களை நோக்கிக் கேட்டார். இடிமுழக்கம் போன்று ஆம் என்ற பதில் அந்த வளாகத்தில் பெருந்தொனியாகத் தொனிக்கும் முன்னர் கிரீடத்தை அரசியின் தலையில் அவர் சூட்டவில்லை.”

தொடர்ந்து ஜான் ஸ்டாட் கூறியதாவது, ‘இந்த இரவில் அருமையான பெருமக்களே, உங்களிடம் நான் கூற விழைவதாவது, ஐயத்திற்கிடமின்றி இயேசு கிறிஸ்துவை உங்களுடைய அரசரும் கர்த்தருமாக அறிமுகப்படுத்துகிறோம். அவரைப் பணிந்து புகழ நீங்கள் விருப்பமுடையவர்களாயிருக்கிறீர்களா?” என்பதாகும்.

இவ்வாறு வலியுத்தப்படும் கேள்வி பல நூற்றாண்டுகளாக தொனித்துக்கொண்டே இருக்கிறது. பலரிடமிருந்து, ‘இயேசு கிறிஸ்து எங்களுடைய கர்த்தராக இருக்கிறார்.” என்னும் உடன்பாடுடைய  விடை பெருந்தொனியாய்த் தொனிக்கிறது. மற்றவர்களிடமிருந்து எதிர்த்துரைக்கும் விடையும் கேட்கிறது. ‘இந்த மனிதன் எங்களை ஆளுவதற்கு இடங்கொடுக்க மாட்டோம்.” கைகளை இறுக்கி மூடி முட்டியை உயர்த்திக் காட்டுகிறவர்களின் கைகள் ஒருநாள் திறக்கப்படும். மேலும் இதுவரை முடங்காத கால்களும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமமுடைய கர்த்தருக்கு முன்பாக முடங்கும். காலம் கடந்து செய்கிற செய்கையாக அது காணப்படும் என்பதே சோகக்கதையாகும். அப்பொழுது தேவனுடைய கிருபை முடிந்து போயிருக்கும். பாவிகளின் இரட்சகரை நம்புவதற்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பம் கடந்து போயிருக்கும். எவருடைய கர்த்தத்துவம் புறக்கணித்துத் தள்ளப்பட்டதோ அவர் வெள்ளைச் சிங்காசனத்தில் நீதிபதியாக அன்று வீற்றிருப்பார்.

இதுவரை அவரை நீங்கள் உங்களுடைய கர்த்தராக ஏற்றுக் கொள்ளாதிருப்பீர்களானால், இப்பொழுது அவரை அறிக்கை செய்யுங்கள். அவரைப் பணிந்து போற்ற விருப்பம் கொள்ளுங்கள்.

21. November

»… damit in dem Namen Jesu jedes Knie sich beuge, der Himmlischen und Irdischen und Unterirdischen, und jede Zunge bekenne, dass Jesus Christus Herr ist, zur Ehre Gottes, des Vaters.« Philipper 2,10.11

Was für ein Anblick wird das sein! Alle Knie in der ganzen Welt werden sich vor dem heiligen Namen Jesu beugen! Jede Zunge wird bekennen, dass Er der Herr ist! Gott hat es so beschlossen, und es wird gewiss auch so geschehen.

Das bedeutet wohlgemerkt nicht universelle Erlösung. Paulus deutet damit nicht an, dass alle geschaffenen Wesen schließlich Christus als ihren lebendigen, liebenden Herrn umfassen werden. Er sagt vielmehr, dass diejenigen, die sich in diesem Leben weigern, das großartige Bekenntnis zu Ihm abzulegen, gezwungen sein werden, es im nächsten Leben zu tun. Alle Geschöpfe
werden letzten Endes die Wahrheit über Jesus Christus anerkennen müssen. Dann wird es eine universelle Unterwerfung unter Gott geben.

John Stott hat in einem seiner Vorträge mit dem Titel »Jesus ist der Herr« Folgendes gesagt: »Während der Krönungszeremonie Ihrer Majestät der Königin in der Westminster-Abtei war einer der bewegendsten Augenblicke, als der Erzbischof von Canterbury, der oberste Bürger im Lande, kurz vor der eigentlichen Krönung in alle Himmelsrichtungen der Abtei, nach Norden, Süden, Osten und Westen viermal ausrief: ›Meine Herren, ich stelle Ihnen die unbestrittene Königin dieses Reiches vor. Sind Sie bereit, ihr die Ehre zu erweisen?‹ Und erst, als viermal ein lauter zustimmender
Ruf im Kirchenschiff erklungen war, wurde ihr die Krone aufs Haupt gesetzt.« Und dann fuhr John Stott fort: »Und heute Abend frage ich Sie, meine Damen und Herren: Ich stelle Ihnen Jesus Christus als Ihren unbestrittenen König und Herrn vor. Sind Sie bereit, Ihm die Ehre zu erweisen?«

Diese eindringliche Frage hallt wieder durch alle Jahrhunderte. Von vielen erschallt ein lauter zustimmender Ruf: »Ja, Jesus Christus ist unser Herr.« Von anderen kommt die verächtliche Antwort: »Wir wollen nicht, dass dieser Mann über uns herrscht.« Doch die geballte Faust wird eines Tages mit Gewalt geöffnet werden, und das Knie, das sich bisher nicht gebeugt hat, wird sich vor Dem beugen, Dessen Name über alle Namen ist. Das Tragische daran ist nur, dass es dann zu spät sein wird. Die Gnadenzeit Gottes ist einmal zu Ende. Die Gelegenheiten, sich dem Sünderheiland anzuvertrauen, sind dann alle vorüber. Der Eine, dessen Herrschaft mit Füßen getreten worden ist, wird dann der Richter sein, der auf einem großen weißen Thron sitzt.

Wenn Er heute noch nicht dein Herr ist, dann bekenne dich jetzt zu Ihm. Sei bereit, Ihm die Ehre zu erweisen!