November

தத்துவ ஞானம்

November 20

“Be careful that nobody spoils your faith through intellectualism or high-sounding nonsense. Such stuff is at best founded on men’s ideas of the nature of the world and disregards Christ!” (Col. 2:8, Phillips)

The word which Phillips translates “intellectualism” here is the one from which we get the word “philosophy.” Basically it means the love of wisdom, but then it has acquired a further meaning, namely, the search for reality and the purpose of life.

Most human philosophies are expressed in complicated, highsounding language. They are above the head of the common man. They appeal to those who like to use their intellectual powers in clothing human speculations with words that are difficult to understand.

Frankly, human philosophies are inadequate. Phillips speaks of them as “intellectualism and high-sounding nonsense.” They are based on man’s ideas of the nature of things and disregard Christ. As famous a philosopher as Bertrand Russell is quoted as saying toward the close of his life, “Philosophy has proved a washout to me.”

The wise Christian is not taken in by the high-sounding nonsense of modern intellectualism. He refuses to bow at the shrine of man’s wisdom. Instead he realizes that all the treasures of wisdom and knowledge are found in Christ. He tests all human philosophies by the Word of God and rejects all that is contrary to the Scriptures.

He is not moved when philosophers hit the headlines with some new attack on the Christian faith. He has the maturity of judgment to realize that he cannot expect anything better from them.

He does not feel inferior that he cannot converse with the philosophers in words of many syllables or follow them in their involved reasonings. He is suspicious of their inability to state their message simply, and rejoices that the Gospel is such that wayfaring men, though fools, can grasp it.

He detects in modern philosophies the lure of the serpent, “…ye shall be as gods” (Gen. 3:5). Man is tempted to exalt his mind above the mind of God. But the wise Christian rejects the devil’s lie. He casts down human reasonings and every high thing that exalts itself against the knowledge of God (2 Cor. 10:5).

நவம்பர் 20

லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளை கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. (கிறிஸ்துவை அவமதிக்கிறதாயிருக்கிறது!). கொலோசெயர் 2:8

தத்துவ ஞானம்

“லெனகிக ஞானம்” என்னும் சொல்லினின்றே “தத்துவ ஞானம்” என்னும் சொல் பிறந்துள்ளது. ஞானத்தின் மீது கொண்டுள்ள பற்றுதலே இதனுடைய அடிப்படையாக விளங்குகிறது. சத்தியத்தையும், வாழ்வின் நோக்கத்தையும் தேடுவது என்னும் பொருளையும் இச்சொல் பெற்றிருக்கிறது.

பெரும்பாலும் மனிதனுடைய தத்துவங்கள் சிக்கலான மொழியிலும், பகட்டுமிக்க அலங்காரமான நடையிலுமே சொல்லப்பட்டிருக்கின்றன. சராசரி மனிதனுடைய மூளைக்கு அது புரியவில்லை. அறிவின் ஆற்றலைப் பயன்படுத்த விரும்பும் மக்கள் வியந்து போற்றும் வகையில் மற்றவர்கள் விளங்கிக் கொள்வதற்குக் கடினமான சொற்களால் மனித யூகங்களைத் தத்துவ ஞானிகள் எடுத்து இயம்புகின்றனர்.

வெளிப்படையாக கூறுவோமாயின் தத்துவ ஞானங்கள் மனிதனுக்குப் போதுமானவையல்ல. பிலிப்ஸ் என்னும் வேத மொழிப்பெயர்ப்பாளர் இவற்றை, “அவ்வாற்றலின் தத்துவம் என்றும் பகட்டுமிக்க அலங்காரமான மதியீனம் என்றும்” விவரிக்கிறார். உலகில் காணும் பொருட்களின் சுபாவத்தைக் குறித்த மனிதனுடைய எண்ணங்களாக இருக்கின்றனவேயொழிய, இவை கர்த்தருக்கு மேன்மையைத் தருவதில்லை. கிறிஸ்துவை அவமதிப்பதாகவே அவை உள்ளன. தனது வாழ்வின் முடிவில் உலகப்புகழ் பெற்ற தத்துவ ஞானியாகிய பெட்ரண்ட் ரஸ்ஸல், “தத்துவம் என்னுடைய வாழ்வில் படுதோல்வியாக முடிந்து விட்டது” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

ஆரவாரமிக்க நவீன அறிவாற்றல் தத்துவத்தினால், ஞானமுள்ள கிறிஸ்தவன் அலைக்கழிக்கப்படுவதில்லை. மனிதனுடைய லௌகிக ஞானத்திற்கு அவன் பணிய மறுக்கிறான். ஞானம், அறிவு, ஆகியவற்றின் பொக்கிஷம் யாவும் கிறிஸ்துவிடத்தில் காணப்படுகின்றன என்பதை அவன் அறிந்திருக்கிறான். மனிதனுடைய தத்துவங்கள் யாவற்றையும் தேவ வார்த்தையினாலே சோதித்துப் பார்த்து, வேதத்திற்கு முரணான யாவற்றையும் அவன் ஏற்க மறுக்கிறான்.

அடுக்கடுக்கான சொற்களோடும், ஆடம்பர மொழி நடையிலும் பேசுகிற தத்துவ ஞானிகளோடு கலந்துரையாட முடியவில்லையென்றோ கிறிஸ்தவன் தன்னைக் குறித்துத் தாழ்வாக எண்ணுவதில்லை. அந்த ஞானிகள் தங்களுடைய தத்துவத்தை எளிய நடையில் சொல்ல முடியாதவர்களாக இருப்பதால் அவன் அவர்கள் கருத்தில் அவநம்பிக்கை கொள்கிறான். ஆனால் கிறிஸ்துவின் நற்செய்தியோ, அறிவற்றவர்களாலும், நிலையற்று அங்குமிங்கும் அலைந்து திரிகிறவர்களாலும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பது குறித்து அவன் களிகூருகிறான்.

தற்கால தத்துவஞானிகள், சர்ப்பத்தைப் போன்று கவர்ந்து வஞ்சிக்கும் தன்மையுடையவர்களாக இருக்கின்றனர் என்பதை கிறிஸ்தவன் கண்டறிகிறான். “தேவர்களைப் போல இருப்பீர்கள்” (ஆதி.3:5). தேவனுடைய சித்தத்தைக் காட்டிலும் மனிதனுடைய சித்தம் மேலானது என்று ஞானமுள்ள கிறிஸ்தவன் இதனை ஏற்க மறுக்கிறான். தேவனுடைய அறிவிற்கு எதிராக எழுதுகிற எல்லா மேட்டிமைகளையும், சிந்தனைகளையும், அவன் அகற்றித் தூர எறிந்து விடுகிறான் (2.கொரி.10:5).
மெய்யான ஞானிகள் தங்கள் குறைவையும், தேவனுடைய அளவில்லா ஞானத்தையும் அறிந்திருக்கின்றனர்.

20. November

»Seht zu, dass niemand euch einfange durch die Philosophie und leeren Betrug nach der Überlieferung der Menschen, nach den Elementen der Welt und nicht Christus gemäß!« Kolosser 2,8

Das Wort »Philosophie«, das manche modern auch mit »Intellektualismus « übersetzen, meint im Grunde die Liebe zur Weisheit, hat dann aber noch eine weitere Bedeutung angenommen, nämlich die Suche nach der Wirklichkeit und nach dem Sinn des Lebens.

Die meisten menschlichen Philosophien sind in hochkomplizierter, theoretischer Sprache abgefasst. Sie gehen glatt über die Köpfe der normalen Menschen hinweg. Sie richten sich an solche, die gerne alle ihre intellektuellen Kräfte dafür einsetzen, um menschliche Gedankengänge mit schwer verständlichen Worten auszudrücken. Offen gesagt sind aber alle menschlichen Philosophien völlig unangemessen. In unserem Text heißen sie »leerer Betrug«. Sie sind begründet auf den Vorstellungen der Menschen von der Natur aller Dinge und lassen Christus ganz außer Acht. Von
einem so berühmten Philosophen wie Bertrand Russell wird erzählt, dass er gegen Ende seines Lebens gesagt haben soll: »Ich habe mittlerweile erkannt, dass die Philosophie völlig ausgelaugt ist.«

Ein weiser Christ lässt sich nicht einfangen von dem hochtrabenden Unsinn der modernen Intellektuellen. Er weigert sich, sich vor dem Altar der menschlichen Weisheit zu verneigen. Stattdessen erkennt er, dass alle Schätze der Weisheit und des Wissens in Jesus Christus begründet sind. Er überprüft alle menschlichen Philosophien am Wort Gottes und verwirft alles, was der Heiligen Schrift entgegensteht.

Er kommt sich nicht minderwertig vor, weil er sich mit den Philosophen nicht in ihrer fremdwortgespickten Sprache unterhalten oder ihnen in ihren verschlungenen Gedankengängen folgen kann. Er misstraut ihnen sogar, weil sie es nicht fertig bringen, ihre Botschaft auf einfache Weise auszudrücken, und er freut sich daran, dass das Evangelium von solcher Art ist, dass auch ganz simple Menschen, selbst wenn sie dumm sind, es doch begreifen können.

Er entlarvt die modernen Philosophien als Verlockungen der Schlange, die sagt: »Ihr werdet sein wie Gott« (1. Mose 3,5). Hier wird der Mensch versucht, seinen Verstand über die Gedanken Gottes zu erheben. Aber der kluge Christ widersteht der Lüge Satans. Er verwirft menschliche »Vernünfteleien und jede Höhe, die sich gegen die Erkenntnis Gottes erhebt« (2. Korinther 10,5).