November

நம்மை அறிந்த கர்த்தர்

November 19

“I know thy…tribulation, and poverty.” (Rev. 2:9)

Seven times in His letters to the churches of Asia, the Lord Jesus says “I know” and usually those words are used in a favorable sense. “I know thy works…thy labour…thy patience…thy tribulation…thy poverty…and charity…and faith.” In those words “I know” there is tremendous comfort and sympathy and encouragement for God’s people.

Lehman Strauss points out that when Jesus said “I know,” “He did not use the word ginoske, which frequently means to know in the sense of realizing through progress in knowledge. He used the word oida, which suggests fullness of knowledge, to know perfectly, not merely from observation, but from experience. Though suffering saints are unknown to the world and hated by the world, they are known to the Lord and loved by Him. Christ knows the persecution and poverty of His own; He knows how the world looks upon them. Many a tired, tried, and troubled saint has been strengthened and encouraged by those two monosyllables, I know. Those two words uttered by our Saviour touch our troubles with the smile of God, and make this world’s suffering ‘not worthy to be compared with the glory which shall be revealed in us’ Romans 8:18.”

They are words of sympathy. Our Great High Priest knows what we are going through because He has been through it Himself. He is the Man of sorrows and is acquainted with grief. He has suffered, being tempted.

They are words of sharing. As the Head of the body, He shares the trials and persecutions of the members. “In every pang that rends the heart, the Man of sorrows has a part.” He not only knows intellectually what we are going through; He knows it as a matter of present experience. He feels it.

They are words of promised help. As our Paraclete, He comes alongside to bear our burdens and wipe away our falling tears. He is there to bind up our wounds and to drive back our foes.

Finally, they are words of assured rewards. He knows everything we do and suffer because of our identification with Him. He keeps a careful record of every act of love, obedience and patience. One day soon He will richly repay.

If you are passing through a valley of sorrow or suffering just now, hear the Savior saying to you, “I know.” You are not alone. He is with you in the valley, will bring you safely through, and will lead you safely to your desired destination.

நவம்பர் 19

உன் உபத்திரவத்தையும்…. உனக்கிருக்கிற தரித்திரத்தையும் அறிந்திருக்கிறேன். வெளி 2:9

நம்மை அறிந்த கர்த்தர்

ஆசியநாட்டு சபைகளுக்கு எழுதியுள்ள மடல்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “அறிந்திருக்கிறேன்” என்று ஏழுமுறை சொல்லியிருக்கிறார். பொதுவாக இச்சொல் சாதகமான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “உன் கிரியையை, உன் பிரயாசத்தை, உன் பொறுமையை, உன் உபத்திரத்தை, உன் தரித்திரத்தை, உன் அன்பை, உன் விசுவாசத்தை…… அறிந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். அவருடைய சொல்லால் மிகுதியான ஆறுதலையும் பரிவிரக்கத்தையும், உற்சாகத்தையும், இறைமக்கள் அடைகின்றனர்.

“அறிந்திருக்கிறேன்” என்று இயேசு கிறிஸ்து கூறியருப்பதில், அறிவின் வளர்ச்சியினால் அடைகிற உணர்வைக் குறிக்கும் “ஜினோஸ்கே” என்னும் சொல்லைப் பயன்படுத்தாமல், அறிவின் நிறைவால் உணர்கிறதைக் குறிக்கும். “ஓய்டா” என்பார் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர், “அதனைக் கவனிப்பதால் மட்டுமன்றி தமது அனுபவத்தில் அதனை நிறைவாக அறிந்திருக்கிறார். உபத்திரவப்படுகிற பரிசுத்தவான்கள் உலகத்தால் அறியப்படுவதில்லை. மாறாக, வெறுக்கப்படுகின்றனர். அவர்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார். அவர்களிடத்தில் அவர் அன்புகூரவும் செய்கிறார். தம்முடையவர்களுடைய உபத்திரவத்தையும், வறுமையையும், கிறிஸ்து அறிந்திருக்கிறார். “அறிந்திருக்கிறேன்” என்னும் மூன்றசைச் சொல்லால், களைப்புற்ற, சோதிக்கப்பட்ட, உபத்திரவப்பட்ட, பரிசுத்தவான்கள் பலர் பலப்படுத்தப்பட்டுள்ளனர். உற்சாகப்படுத்தப்பட்டுள்ளனர். தேவனுடைய புன்னகையோடு, நமது இரட்சகரின் சொல் நமது பிரச்சனைகளில் நம்மைத் தொடுகிறது. இவ்வுலகத்தின் பாடுகள், ‘இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவை அல்ல” என்பதை நாம் அறிவோம். (ரோமர் 8:18).

பரிவிரக்கத்தின் சொல்லாக இது இருக்கிறது. சரீரத்தின் சிரசு என்னும் அடிப்படையில், அவயவங்கள் படும் பாடுகளிலும், சோதனைகளிலும் அவர் பங்கு வகிக்கிறார். ‘இருதயத்தைக் கிழிக்கும்படியாக உண்டாகிற பெரும் வேதனைகளில், துக்கங்களின் மனிதருக்குப் பங்கு உண்டு”. நாம் எவ்வகைப் பாடுகளின் ஊடாகக் கடந்து செல்கிறோம். என்பதை அறிவார்ந்த நிலையில் அவர் அறிந்திருக்கிறது மட்டுமின்றி, இன்றைய அனுபவமாக அவர் அறிகிறார். அதனை அவர் உணர்கிறார்.

வாக்குறுதியால் உதவி செய்கிற சொல்லாக இது இருக்கிறது. அவர் நமது தூய வழக்கறிஞராகச் செயல்பட்டு, நமது அருகிலே உடன் வருகிறவராக இருக்கிறார். நமது கண்ணீரைத் துடைக்கிறார். அவர் நமது காயங்களைக் கட்டி, நமது பகைஞரைத் துரத்தி விடுகிறார்.

இறுதியாக, நாம் பெறப்போகிற பரிசுப் பொருட்களின் உறுதியின் சொல்லாக இது இருக்கிறது. அவரோடு கூட இணைக்கப்பட்டிருக்கிற காரணத்தால் நாம் என்ன செய்கிறோம், எவ்விதமாய்ப் பாடுபடுகிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நமது அன்பு, கீழ்படிதல், பொறுமை, ஆகியவற்றின் செயல்பாடுகளை மிகுந்த கவனத்தோடு அவர் குறித்து வைத்திருக்கிறார். ஒரு நாளில் அவர் அதற்கான பரிசைப் பெருமளவில் வழங்குவார்.

வருத்தத்தின் ஊடாகவும், பாடுகளின் பள்ளத்தாக்கின் வழியாகவும் நீங்கள் இப்பொழுது செல்கிறவராக இருப்பீர்கள் எனில், இரட்சகர் உரைக்கும் “அறிந்திருக்கிறேன்” என்ற சொல்லைக் கேளுங்கள். நீங்கள் தனியாக இல்லை. இந்தப் பள்ளத்தாக்கிலே அவர் உங்களோடு இருக்கிறார். நீங்கள் விரும்புகிற இடத்திற்கு அவர் பாதுகாப்பாக உங்களை அழைத்துச் செல்வார்.

19. November

»Ich kenne deine Drangsal und deine Armut.« Offenbarung 2,9

Siebenmal sagt der Herr Jesus in Seinen Sendschreiben an die Gemeinden in Asien: »Ich kenne«, und normalerweise werden diese Worte in einem wohlmeinenden Sinn gebraucht. »Ich kenne deine Werke … deine Mühen … deine Geduld … deine Drangsal … deine Armut … deine Liebe … deinen Glauben.« In diesen Worten liegt ein unendlicher Trost, Mitgefühl und Ermutigung für das Volk Gottes.

Lehman Strauss weist in diesem Zusammenhang auf Folgendes hin: »Jesus verwendete hier nicht das Wort ›ginoske‹, das auch häufig ›kennen‹ bedeutet im Sinne von ›erkennen, durch Dazulernen erfahren‹. Er benutzte vielmehr den Ausdruck ›oida‹, das bedeutet ›die Fülle des Wissens haben, etwas vollkommen kennen, nicht nur aus Beobachtung, sondern aus Erfahrung‹. Obwohl die Welt die leidenden Heiligen nicht kennt und sie sogar hasst, sind sie dem Herrn doch bekannt und von Ihm geliebt. Jesus Christus kennt Verfolgung und Armut aus eigener Erfahrung. Er weiß wohl, wie die Welt die Christen ansieht. So mancher müde, von Versuchungen geplagte und betrübte Heilige ist schon von diesen zwei Worten gestärkt und ermutigt worden: ›Ich kenne …‹ Diese Worte aus dem Mund unseres Heilandes berühren unsere Nöte mit dem Lächeln Gottes und machen, ›dass die Leiden dieser Welt nicht ins Gewicht fallen gegenüber der zukünftigen Herrlichkeit, die an uns geoffenbart werden soll‹« (siehe Römer 8,18).

Es sind Worte des Mitgefühls. Unser großer Hohepriester weiß, was wir durchmachen müssen, weil Er es selbst auch durchgemacht hat. Er ist der Mann der Schmerzen, der mit Sorgen und Kummer wohlvertraut ist. Auch Er hat gelitten und ist versucht worden.

Es sind Worte der Anteilnahme. Als das Haupt des Leibes teilt Jesus mit Seinen Gliedern die Versuchungen und Verfolgungen. An jedem Schlag, der uns das Herz zerreißen will, nimmt der Mann der Schmerzen Anteil. Er weiß nicht nur gedanklich, was wir erleben müssen; Er kennt es so, als ob Er es in diesem Moment wieder selbst erfahren würde. Er empfindet mit.

Und es sind Worte der versprochenen Hilfe. Als unser Tröster kommt Er an unsere Seite, um unsere Lasten mitzutragen und uns die Tränen abzuwischen. Er ist da, um unsere Wunden zu verbinden und unsere Feinde zu vertreiben.

Und schließlich sind es auch Worte des versprochenen Lohns. Der Herr weiß alles, was wir tun und erleiden, weil wir mit Ihm eins sind. Er registriert sorgfältig jede Tat der Liebe, des Gehorsams und der Geduld. Und eines Tages, vielleicht schon bald, wird Er uns reichlich vergelten.

Wenn wir jetzt gerade durch ein finsteres Tal der Sorge und des Leidens hindurchmüssen, dann hören wir, wie der Heiland zu uns sagt: »Ich kenne es.« Wir sind nicht allein. Er ist bei uns in diesem Tal, wird uns sicher hindurchbringen und uns sicher an den ersehnten Ort unserer Bestimmung führen.