November

அன்புள்ளம்

November 22

“Though I speak with the tongues of men and of angels, and have not charity (love)…” (1 Cor. 13:1)

After a young soprano had made her debut on the opera stage, a critic wrote that her brilliant performance would have been even better if she had ever loved. He detected the absence of love. Apparently her singing was technically correct but it lacked warmth.

We too can go through life, doing everything according to the rules. We can be honest, dependable, righteous, generous, energetic and humble. Yet all these virtues cannot compensate for a lack of love.

Many of us have a hard time knowing how to give love and to receive it. I read recently of a celebrity “who could do everything except express what he felt for the people he loved.”

In his book, People in Prayer, John White wrote, “For many years I was frightened of being loved. I did not mind giving love (or what I thought was love), but I grew ill at ease if anyone, man, woman or child, showed too much affection for me. In our family we had never learned how to handle love. We were not very expert at demonstrating it or receiving it. I don’t mean that we did not love one another or that we did not find ways of showing it. But we were very British. When I was nineteen and leaving home to go to war, my father did something quite unprecedented. He put his hands on my shoulder and kissed me. I was stunned. I knew neither what to say nor what to do. For me it was very embarrassing while for my father it must have been very sad.”

One day White had a vision of Christ standing before him, with nail-scarred hands outstretched toward him. At first he felt helpless to receive Christ’s love. Then he prayed, “O Lord, I want to grasp your hands. But I can’t.”

“In the quietness that followed, there came to me an assurance that the defensive wall I had built around me would gradually be dismantled and that I would learn what it was to let Christ’s love wrap around me and fill me.”

If we have built defensive walls around ourselves, hindering the flow of love to and from us, we must let the Lord dismantle those walls, and deliver us from the fears that make us cold Christians.

நவம்பர் 22

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால்….. கொரிந்தியர் 13:1

அன்புள்ளம்

இசை அரங்கு ஒன்றில், ஓர் இளம் பாடகியின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. அவள் அன்புகூருகிறவளாக இருந்திருப்பாளாயின், அவள் திறன்பட ஆற்றிய இசை நிகழ்ச்சி இன்னும் சிறப்புடன் அமைந்திருக்கும் என்று ஒருவர் விமர்சித்தார். அந்நிகழ்ச்சியில் அன்பு இல்லாதிருப்பதை அவர் கண்டு பிடித்தார். அவளுடைய இசையில் கலைநுட்பம் இருந்தது. ஆனால் அதில் உள்ளன்பு இல்லை.

நாமும் எல்லா சட்டங்களையும் பின்பற்றி நமது வாழ்க்கையை நடத்தக் கூடும். நேர்மையானவர்களாக, சார்ந்துகொள்ளத்தக்கவர்களாக, நீதியை கடைப்பிடிக்கிறவர்களாக, பெருந்தன்மை உடையவர்களாக, திறம்படச் செயல் புரிகிறவர்களாக, தாழ்மையுடையவர்களாக, நாம் இருக்கக்கூடும். ஆயினும் நாம் அன்பற்றவர்களாயிருப்போமெனில் இவற்றில் ஒன்றாகிலும் அந்நிலையை ஈடு செய்ய முடியாது.

அன்பை எவ்வாறு செலுத்துவது, மற்றும் அதை எவ்வாறு பெறுவது என்பதை அறிய நம்மில் பலர் கடினமாகச் செயல்பட்டிருக்கிறோம். ‘புகழ் பெற்ற ஒருவர் எல்லாவற்றையும் செய்ய அறிந்தும், தான் நேசிக்கிற மக்களிடம் தனது அன்பை வெளிப்படுத்த அறியாதவராக இருக்கிறார்” என்னும் செய்தி சமீபத்தில் வெளியாயிருந்தது.

மன்றாடும் மனிதர்கள் என்னும் நூலில் ஜான் வொய்ட் என்பார், ‘பல ஆண்டுகள் அன்புகூரப்படுவதை எண்ணி அச்சம் கொண்டிருந்தேன். நான் அன்பு செலுத்த வேண்டுமென்பது எனக்கு ஒரு பொருட்டாய்த் தோன்றவில்லை. (அல்லது எதனை அன்பு என்று நினைத்தேனோ, அதனைச் செலுத்துவது.) ஆனால் யாராவது ஒரு ஆண்ணோ, பெண்ணோ, குழந்தையோ, என்னிடம் மிகுதியாக அன்பு பாராட்டும்போது நோயுற்ற தன்மையை எனக்குள் அது எளிதில் பிறப்பித்தது. எவ்வாறு அன்பைக் கையாளுவது என்பதை எங்கள் குடும்பத்தில் ஒருக்காலும் நாங்கள் கற்றுக்கொள்ளவில்லை. அதனை எவ்வாறு பெறுவது என்பதில் நாங்கள் திறமைமிக்கவர்கள் அல்லர். நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறதில்லை என்பது அதன் பொருளன்று. அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை நாங்கள் அறியாதவர்களாயிருந்தோம். பழங்காலத்து மனிதர்களாயிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது பத்தொன்பது. போருக்குச் செல்ல வீட்டைவிட்டுக் கிளம்பினேன். அதுவரை நிகழ்ந்;திராத ஒரு நிகழ்ச்சி அன்று நடந்தது. எனது தந்தை தனது கரங்களை என் தோளின் மீது போட்டுக் கொண்டு என்னை முத்தம் செய்தார். எனக்கு என்ன சொல்வது என்றோ, என்ன செய்வதென்றோ தெரியவில்லை. என்னை அது திக்குமுக்காடச் செய்தது. ஆனால் என்னுடைய செயலற்ற தன்மை எனது தந்தைக்கு வருத்தத்தை அளித்திருக்கும்” என்று எழுதியுள்ளார்.

ஆணிகள் அடிக்கப்பட்ட கரங்களை விரித்த நிலையில், தன் அருகில் நிற்கிற கிறிஸ்துவை ஒருநாள் வொய்ட் தனது தரிசனத்தில் கண்டார். கிறிஸ்துவின் அன்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை அறியாது முதலில் அவர் திகைத்தார். பின்னர் அவர், ‘கர்த்தாவே! நான் உமது கரங்களைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை” என்று மன்றாடினார்.

“தொடர்ந்து நிலவிய அமைதியில், என்னைச் சுற்றிலும் நானே அமைத்துக் கொண்ட பாதுகாப்புச் சுவர் தகர்த்தப்படுவதையும், கிறிஸ்துவின் அன்பு என்னைச் சூழ்ந்து நிரப்புவதையும் உணர்ந்தேன். அதற்கு நான் அனுமதி அளிக்க அன்று கற்றுக்கொண்டேன்” என்று தொடர்ந்து அவர் எழுதியுள்ளார்.

அன்பு வெளியே செல்லாமலும் உட்புகாமலும் இருக்கும்படி நம்மைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவரை நாம் கட்டிவைத்திருப்போமாயின், அதைக் கர்த்தர் தகர்க்கிறதற்கும் அன்பற்ற கிறிஸ்தவர்களாக நம்மை இருக்கச் செய்கிற அச்சத்திலிருந்து மீட்கப்படுவதற்கும் நாம் இடம் கொடுக்கவேண்டும்.

22. November

»Wenn ich in den Sprachen der Menschen und der Engel rede, aber keine Liebe habe …« 1. Korinther 13,1

Als eine junge Sopranistin ihren ersten Auftritt auf einer Opernbühne gehabt hatte, schrieb ein Kritiker, dass ihre hervorragende Stimme bestimmt noch besser gewesen wäre, wenn sie schon einmal verliebt gewesen wäre. Er hatte entdeckt, dass ihr noch die Liebe fehlte. Offenbar war ihr Gesang von der technischen Seite gesehen vollkommen richtig, aber es fehlte ihr die Wärme.

Auch wir können durchs Leben gehen und uns an alle vorgeschriebenen Regeln halten. Wir können ehrlich, verlässlich, rechtschaffen, großzügig, energisch und demütig sein. Doch alle diese guten Eigenschaften können den Mangel an Liebe nicht wettmachen.

Vielen von uns fällt es schwer, herauszufinden, wie sie Liebe schenken und empfangen können. Ich habe erst kürzlich von einem berühmten Mann gelesen, »der wirklich alles konnte, nur nicht den Menschen, die er liebte, seine Zuneigung ausdrücken «.

John White schreibt in seinem Buch »Menschen im Gebet«: »Viele Jahre lang hatte ich Angst davor, geliebt zu werden. Ich hatte nichts dagegen, selbst einem anderen Liebe zu schenken (oder wenigstens das, was ich für Liebe hielt), aber ich fühlte mich höchst unwohl, wenn irgendjemand, sei es Mann, Frau oder Kind, mir zu viel Zuneigung entgegenbrachte. In unserer Familie hatten wir nie gelernt, wie man mit Liebe umgehen muss. Wir waren nicht besonders geübt darin, Liebe zu zeigen oder entgegenzunehmen. Damit meine ich nicht, dass wir uns nicht lieb gehabt hätten
oder dass wir gar keine Möglichkeit gefunden hätten, das zu zeigen. Aber wir waren eben sehr englisch in dieser Beziehung. Und als ich dann neunzehn Jahre alt war und von zu Hause fortging, um in den Krieg zu ziehen, tat mein Vater etwas völlig Unerwartetes. Er legte mir die Hände auf die Schultern und küsste mich. Ich war wie vom Donner gerührt. Ich wusste nicht, was ich jetzt sagen oder tun sollte. Für mich war es nur eine sehr peinliche Angelegenheit, während es für meinen Vater sehr traurig gewesen sein muss.«

Eines Tages hatte John White dann einen Traum: Christus stand vor ihm und streckte ihm die Hände mit den Nägelmalen entgegen. Zuerst kam er sich hilflos vor und wusste nicht, wie er die Liebe Jesu annehmen sollte. Doch dann betete er: »O Herr, ich möchte deine Hände ergreifen. Aber ich kann es nicht.«

»In dem Schweigen, das darauf folgte, stieg in mir die Sicherheit auf, dass die Verteidigungsmauer, die ich um mich herum gebaut hatte, allmählich niedergerissen werden würde und dass ich lernen könnte, wie es ist, wenn die Liebe Jesu Christi mich einhüllt und ausfüllt.«

Wenn wir Schutzmauern um uns herum aufgerichtet haben, die den Strom der Liebe zu uns hin und von uns weg behindern, dann müssen wir vom Herrn diese Mauern einreißen und uns von den Ängsten befreien lassen, die uns zu kalten Christen gemacht haben.