November

உள்ளதை உரைத்தல்

November 12

“He that is first in his own cause seemeth just; but his neighbor cometh and searcheth him.” (Prov. 18:17)

The first part of this verse points out a failing that is common to most of us—we invariably present evidence in such a way as to put ourselves in the best possible light. It comes quite naturally to us. For instance, we withhold facts that would prove damaging to us and concentrate on our good points. We compare ourselves with others whose failings are more obvious. We pass the blame for our actions on to others. We assign pious motives to actions that are patently wrong. We twist and distort the facts until they have only a faint resemblance to the reality. We use emotionally colored words to paint a more favorable picture.

Adam blamed Eve, “The woman whom thou gavest to be with me, she gave me of the tree, and I did eat” (Gen. 3:12). Eve blamed the Devil, “The serpent beguiled me, and I did eat” (Gen. 3:13).

Saul defended his disobedience in sparing the sheep and oxen of the Amalekites by assigning a pious motive: “The people took of the spoil…to sacrifice unto the Lord thy God” (1 Sam. 15:21). He also suggested, of course, that if there was blame, it was the people’s, not his.

David lied to Ahimelech in order to get weapons, saying “The king’s business required haste” (1 Sam. 21:8). Actually David wasn’t on the king’s business; he was fleeing from King Saul.

The woman at the well withheld the truth. She said, “I have no husband” (John 4:17). Actually she had had five husbands and was now cohabiting with a man to whom she was not married.

And so it goes! Because of our fallen nature, inherited from Adam, it is difficult for us to be completely objective when presenting our own side of a matter. Our tendency is to picture ourselves in the most favorable light. We can have a kindly regard toward sins in our own life when we would vigorously condemn those same sins in someone else’s.

“He that is first in his own cause seemeth just, but his neighbor cometh and searcheth him,” that is, when his neighbor has a chance to testify, he gives a more accurate presentation of the facts. He exposes all the subtle attempts at whitewashing and self-vindication. He tells the story without distortion.

Ultimately God is our Neighbor—the One who brings to light the hidden things of darkness and reveals the thoughts and intents of the heart. He is light, and in Him is no darkness at all. If we are to walk in unclouded communion with Him, we must be honest and aboveboard in all our testimony, even if it results in our own undoing.

நவம்பர் 12

தன் வழக்கிலே முதல் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான். அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான். நீதிமொழிகள் 18:17

உள்ளதை உரைத்தல்

இந்த வசனத்தின் முந்தைய பகுதி, நாம் அனைவரும் தவறுகிற ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. நம்மை குற்றமற்றவர்களாகக் காண்பிக்கத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் தவறாமல் நாம் காட்டுகிறோம். அது நம்முடைய இயல்பாக இருக்கிறது. நம்முடைய குற்றத்தை வெளிப்படுத்தக் கூடிய அனைத்தையும் நாம் மறைத்து விடுகிறோம். நமக்குச் சாதகமாக உள்ளவற்றை ஒருமுகப்படுத்திச் சொல்லுகிறோம். வெளியரங்கமாகப் பாவத்தைச் செய்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறோம். நம்முடைய தவறான செயல்களுக்கான பொறுப்பை மற்றவர்கள் மேல் சுமத்துகிறோம். நாம் செய்தவை தவறென்று தெளிவாகத் தெரிந்தாலும், அதற்கு பயபக்திக்குரிய நோக்கத்தைக் கற்பிக்கிறோம். நடந்த நிகழ்ச்சிகளின் உண்மைகளை திரித்துக் கூறி, அவற்றைச் சிதைத்து, உண்மை மங்கிப்போகும்படி செய்கிறோம். சொற்களுக்கு உணர்ச்சி பூர்வமான அர்த்தத்தைக் கொடுத்து நமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறோம்.

“‘என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரியானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன்” என்று கூறிய ஆதாம் ஏவாளைக் குற்றப்படுத்தினான். (ஆதி.3:12). ‘சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன்” என்று சொல்லிப் பிசாசைக் குற்றப்படுத்தினாள் (ஆதி.3:13).

அமலேக்கியர்களுடைய ஆடுகளையும் மாடுகளையும் சவுல் உயிரோடு வைத்து, தனது கீழ்ப்படியாமைக்குப் பயபக்திக்குரிய நோக்கத்தைக் கற்பித்துத் தற்காத்துக் கொள்ள முயற்ச்சி செய்தான். ‘ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவதற்காக ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.” என்று சவுல் கூறினான் (1.சாமு.15:21). அதில் ஏதேனும் குற்றம் இருக்குமானால் அது ஜனங்களுடைய குற்றமே என்று அவனுடைய பதிலில் உள்ளர்த்தம் காணப்பட்டது.

“இராஜாவின் காரியம் அவசரமாயிருந்தது” என்று தாவீது அகிமெலேக்கிடம் பொய்யுரைத்தான் (1சாமு.21:8). உண்மையில் இராஜாவுக்காக அவன் பயணம் மேற்கொள்ளவில்லை. அரசனைவிட்டுத் தப்பி ஓடினான். போகும் வழிக்கு ஆயுதத்தைப் பெற்றுக்கொள்ள அவன் அகிமெலேக்கிடம் பொய்யுரைத்தான்.

கிணற்றின் அண்டைக்கு வந்த பெண்மணி, ‘எனக்கு புருஷன் இல்லை” என்று சொல்லி உண்மையை மறைத்தாள். உண்மையில் அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். ஆனாலும் அவள் புருஷனல்லாத வேறொருவனோடு வசித்துக் கொண்டிருந்தாள்.

அதுபோன்று பல எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம்! ஆதாமிடத்திலிருந்து வீழ்ந்துபோன இயல்பைப் பெற்றிருக்கும் நாம் ஒரு பிரச்சனையின் நமது பக்கத்தை எடுத்துரைக்கும்போது பாரபட்சமற்ற விதத்தில் நேர்மையானபடி நடந்துகொள்வது கடினம்.  நமக்குச் சாதகமானவற்றைக் கூறி நம்மிடத்தில் எவ்வித தவறும் இல்லை என்று காணும்படி நடந்துகொள்வோம். நம்முடைய சொந்த வாழ்க்கையில் காணும் பாவத்தைக் குறித்துத் தவறேதுமில்லை என்று நல்லெண்ணம்கொள்ளும் நாம், வோறொருவரிடத்தில் அதே பாவத்தைக் காண்கிறபோது வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலே எழுதப்பட்டள்ள வசனத்தை மீண்டும் படியுங்கள். அதாவது, வாய்ப்புக கிடைக்குமென்றால், அவனுடைய அயலகத்தான் நடந்த நிகழ்ச்சியின் உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துரைப்பான். தன்னைக் குற்றவாளி அல்ல என்று காட்டுவதற்கு அவன் செய்த அனைத்துத் தந்திரமான முயற்சிகளையும் அயலகத்தான் வெளிப்படுத்துவான். எந்தச் சிதைவும் இல்லாதபடி அவன் கதையைக் கூறுவான்.

முடிவான அயலகத்தாராக தேவன் விளங்குகிறார். இருதயத்தின் சிந்தனைகளையும் அதன் நோக்கங்களையும், இருளில் மறைந்திருக்கும் உண்மைகளையும் அவரே வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறவர். அவர் ஒளியாக இருக்கிறார். அவரிடத்தில் இருள் ஏதுமில்லை. எவ்வித இருளும் இடையூறு செய்யாதபடி அவரோடு ஐக்கியம் உடையவர்களாக நாம் காணப்பட வேண்டுமாகில், சூழ்நிலைகள் நமக்கு எதிராக உள்ள காலத்திலும் நேர்மையாகவும், நாணயத்துடனும் நடக்கவேண்டும்.

12. November

»Im Recht scheint, wer in seiner Streitsache als Erster auftritt, bis sein Nächster kommt und ihn ausforscht.« Sprüche 18,17

Der erste Teil dieses Verses zeigt eine Schwäche auf, die bei den meisten von uns auch verbreitet ist: Wir stellen die Tatsachen immer so dar, dass wir selbst im bestmöglichen Licht erscheinen. Das passiert uns von ganz allein so. Wir behalten beispielsweise Dinge für uns, die uns schaden könnten, und konzentrieren uns nur auf unsere guten Seiten. Wir vergleichen uns mit anderen, deren Fehler viel deutlicher sichtbar sind. Wir schieben die Schuld für unser Handeln jemand anderem zu. Wir führen fromme Beweggründe für Taten an, die offenkundig falsch sind. Wir verdrehen und verzerren die Tatsachen, bis sie nur noch eine schwache Ähnlichkeit mit der Wirklichkeit haben.

Schon Adam schob die Schuld auf Eva: »Die Frau, die du mir zur Seite gegeben hast, sie gab mir von dem Baum, und ich aß« (1. Mose 3,12). Und Eva ihrerseits beschuldigte den Teufel: »Die Schlange hat mich getäuscht, da aß ich« (1. Mose 3,13).

Als Saul die Schafe und Rinder der Amalekiter verschont hatte, verteidigte er seinen Ungehorsam, indem er fromme Motive anführte: »Aber das Volk hat von der Beute genommen: Schafe und Rinder, das Beste vom Gebannten, um es dem Herrn, deinem Gott, in Gilgal zu opfern« (1. Samuel 15,21). Damit gab er natürlich auch zu verstehen, dass es, wenn überhaupt von Schuld die Rede sein konnte, die Schuld des Volkes war, nicht seine eigene.

David log Ahimelech an, damit er von ihm Waffen bekäme, und sagte: »Denn ich habe mein Schwert und meine Waffen nicht mit mir genommen, weil die Sache des Königs dringend war« (1. Samuel 21,9). In Wirklichkeit stand David gar nicht im Dienst des Königs; er war auf der Flucht vor König Saul.

Auch die Samariterin am Brunnen verschwieg die eigentliche Wahrheit. Sie sagte: »Ich habe keinen Mann« (Johannes 4,17). Doch die Sache war so, dass sie schon fünf Ehemänner gehabt hatte und im Moment mit einem zusammenlebte, mit dem sie nicht verheiratet war.

Und so geht es immer weiter! Wegen unserer gefallenen Natur, die wir von Adam geerbt haben, fällt es uns so schwer, völlig objektiv zu sein, wenn wir unsere eigene Seite der Sache darstellen sollen. Wir neigen immer dazu, uns selbst im günstigsten Licht darzustellen. Wir können mit Sünden in unserem eigenen Leben sehr mild und freundlich umgehen, während wir dieselben Sünden bei jemand anderem unnachsichtig verurteilen würden.

Unser Bibelvers will sagen: Wenn unser Nächster auch die Möglichkeit bekommt, eine Zeugenaussage zu machen, dann wird er eine wirklichkeitsgetreuere Darstellung der Tatsachen liefern. Er stellt uns bloß in all unseren versteckten Versuchen, uns reinzuwaschen und uns selbst zu rechtfertigen. Er berichtet die Tatsachen, ohne sie zu verdrehen. Letzten Endes ist Gott unser Nächster, derjenige, der die verborgenen Dinge der Dunkelheit ans Licht bringt und die Gedanken und Wünsche des Herzens offen darlegt. Er ist Licht, und in Ihm ist keine Finsternis. Wenn wir in ungetrübter Gemeinschaft mit Ihm leben sollen, dann müssen wir ehrlich und redlich sein in alledem, was wir sagen, selbst wenn dadurch unsere Untaten herauskommen.