November

ஜெபம் செய்யாது இழந்தவை

November 13

“Ye have not, because ye ask not.” (James 4:2)

A verse like this raises an interesting question. If we have not because we ask not, what great things are we missing in life simply because we do not pray for them?

A similar question arises from James 5:16, ““The effectual fervent prayer of a righteous man availeth much.” If this righteous man doesn’t pray, then does it not follow that little is accomplished through him?

The trouble with most of us is that we do not pray enough, or when we do pray, we ask for so little. We are what C.T. Studd called “nibblers of the possible instead of grabbers of the impossible.” Our prayers are timid and unimaginative when they should be bold and daring.

We should be honoring God by praying for great things. In John Newton’s words,

Thou art coming to a King,
Large petitions with thee bring;
For His grace and power are such,
None can ever ask too much,

When we do this, we not only honor God; we enrich ourselves spiritually. He loves to open heaven’s treasures to us, but today’s verse suggest that He only does it in answer to prayer.

It seems to me that this verse answers a question that we often hear. The question is this: does prayer actually move God to do things that He would not have done otherwise, or does it merely bring us into harmony with what He would have done anyway? The answer seems clear: God does things in answer to prayer that He would not have done otherwise.

Our imaginations can run riot in two directions as we ponder this. First, we can think of the tremendous achievements that have come as a direct result of prayer. Borrowing the words of Hebrews 11:33, 34, we remember those who “subdued kingdoms, wrought righteousness, obtained promises, stopped the mouths of lions, quenched the violence of fire, escaped the edge of the sword, out of weakness were made strong, waxed valiant in fight, turned to flight the armies of the aliens.”

But we can also think of what we ourselves might have accomplished for Christ if we had only asked. We can think of the many exceedingly great and precious promises in the Word which we have failed to claim. We have been weak when we might have been powerful. We have touched a few lives for God when we might have touched thousands or even millions. We have asked for acres when we might have asked for continents. We have been spiritual paupers when we might have been plutocrats. We do not have because we do not ask.

நவம்பர் 13

நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருப்பதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. யாக்கோபு 4:2

ஜெபம் செய்யாது இழந்தவை

இத்தகைய வசனம் ஆர்வமிக்க கேள்வியை எழுப்புகிறது. நாம் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினாலே நமக்குச் சித்திக்கிறது இல்லை எனில், நாம் விண்ணப்பம் செய்யாமல் என்னென்ன மேன்மையானவற்றை இழந்துபோயிருக்கிறோம்?

இதற்கு இணையான கேள்வி யாக்கோபு 5:16ல் எழுகிறது. ‘நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பலனுள்ளதாயிருக்கிறது.” அந்த நீதிமான் விண்ணப்பிக்கவில்லை என்றால், தேவனால் ஏதொன்றையும் நிறைவேற்ற இயலாதா?

பிரச்சனை யாதெனில், நம்மில் பலர் போதுமான அளவு விண்ணப்பம் செய்கிறதில்லை. அவ்வாறு விண்ணப்பம் செய்தாலும், கொஞ்சமாகவே கேட்கிறோம். ‘நிகழக் கூடாததைக் கைப்பற்றுபவராக இல்லாமல், நிகழக் கூடியதைச் சிறுகச் சிறுகப் பற்றிக் கொள்கிறவர்களாக இருக்கிறோம்.” என்று C. T. ஸ்டட் கூறியது போல் நாம் நடந்து கொள்கிறோம். தைரியத்தோடும் உற்சாகத்தோடும் ஜெபம் செய்வதற்குப் பதிலாக, பலவீனத்தோடும், கற்பனைவளம் அற்ற நிலையிலும் நாம் ஜெபிக்கிறோம்.

பெரிய காரியங்களுக்காக விண்ணப்பம் செய்வோமானால் அது தேவனைக் கனப்படுத்தும். ‘நீங்கள் மன்னரிடத்தில் வருகிறீர்கள் என்பதை அறிந்தவர்களாக, பெரிய விண்ணப்பங்களைக் கொண்டு வாருங்கள். எவரேனும் நிறையக் கேட்டுவிட்டனர் என்று ஒருக்காலும் சொல்லக்கூடாதபடி, அவருடைய கிருபையும் வல்லமையும் மிகப் பெரியதாயுள்ளன” என திரு. ஜான் நியூட்டன் கூறியுள்ளார்.

இவ்வாறு செய்யுங்கால் நாம் தேவனைக் கனப்படுத்துவது மட்டுமின்றி, ஆவிக்குரிய வகையில் நம்மையே வளமாக்கிக்கொள்கிறோம். விண்ணப்பதின் செல்வத்தைத் திறந்தளிப்பதில் அவர் விருப்பம் கொண்டிருக்கிறார். ஆனாலும் அதற்காக நாம் விண்ணப்பித்தால் மட்டுமே அதை அவர் செய்வார் என இன்றைய வசனம் கூறுகிறது.

அவ்வப்போது நாம் கேள்விப்படுகிற வினாவிற்கு இன்றைய வசனம் விடை தருகிறது. அந்தக் கேள்வியானது. உண்மையாகவே தேவன் ஜெபத்தினால் அசைந்து சில செயல்களைச் செய்கிறாரா? அவ்வாறு விண்ணப்பம் பண்ணாமலிருந்தால் அச்செயல்கள் நிறைவேறாமல் போயிருக்குமா?. அல்லது எப்படியும் நிகழப்போகிற ஒன்றோடு, நம்முடைய மனநிலை இசைந்து ஜெபமாக அது ஏறெடுக்கப்பட்டதா? இதன் விடை மிகத் தொளிவாயிருக்கிறது. விண்ணப்பங்களுக்கு விடையாக தேவன் சில செயல்களைச் செய்கிறார்.

இதனை ஆழ்ந்து சிந்திக்கும் தறுவாயில், நமது கற்பனை ஒரு திக்குக்களில் ஆரவாரித்து ஓடுகிறது. முதலாவதாக, நமது விண்ணப்பத்தின் மூலமாக நாம் அடைந்த மேன்மையான வெற்றிகளைக் குறித்துச் சிந்திக்கிறோம். எபிரெயர் 11:33-34 ஆகிய வசனங்கள் இதற்கு உதவிபுரிகின்றன. ‘விசுவாசத்தினாலே அவர்கள் ராஐ;யங்களை ஜெயித்தார்கள். நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.”

விண்ணப்பத்தினால் கிறிஸ்துவுக்காக நாம் ஆற்றியிருக்க வேண்டிய பணியைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கலாம். மிகவும் அருமையானதும் மதிப்பு மிகுந்ததுமான வாக்குறுதிகள் பல வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிக்காக நாம் விண்ணப்பிக்காத காரணத்தினால் அவற்றை இழந்து போயிருக்கிறோம். நாம் மிகுந்த வல்லமையுள்ளவர்களாக இருக்க வேண்டியதற்குப் பதிலாக, வலிமை குன்றியவர்களாயிருக்கிறோம். தேவனுக்காக ஆயிரம் பதினாயிரம் ஆத்துமாக்களைத் தொடுவதற்கு மாறாக ஒருசில ஆத்துமாக்களை மட்டுமே தொட்டிருக்கிறோம். நாம் பெருநிலப்பரப்புகளை வேண்டுவதற்குப் பதிலாக சில ஏக்கர் நிலத்தை மட்டுமே கேட்டிருக்கிறோம். நாம் ஆவிக்குரிய நிலையில் செல்வந்தராகத் திகழ்வதற்கு மாறாக வறியவர்களாக இருக்கிறோம். நாம் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே நமக்குச் சித்திக்கிறதில்லை.

13. November

»Ihr habt nichts, weil ihr nicht bittet.« Jakobus 4,2

Ein solcher Vers wirft eine interessante Frage auf: Wenn wir also nicht haben, weil wir nicht bitten, welche großen Dinge fehlen dann in unserem Leben, einfach, weil wir nicht darum beten?

Eine ähnliche Frage drängt sich auf, wenn wir Jakobus 5,16 lesen: »Viel vermag eines Gerechten Gebet in seiner Wirkung.« Wenn dieser Gerechte nicht betet, folgt dann nicht daraus, dass auch nur wenig durch ihn bewirkt wird?

Die Schwierigkeit bei den meisten von uns liegt darin, dass wir nicht genug beten oder dass wir, wenn wir beten, nur um so wenig bitten. Wir sind so, wie C.T. Studd einmal gesagt hat: »Wir knabbern nur am Möglichen, anstatt mit beiden Händen nach dem Unmöglichen zu greifen.« Unsere Gebete sind schüchtern und phantasielos, gerade dann, wenn sie kühn und wagemutig sein sollten.

Wir sollten Gott damit ehren, dass wir um große Dinge bitten. John Newton hat gesagt: »Komm her nun zum großen König mit vielen Wünschen geschritten; denn Seiner Gnade und Vollmacht sind nie zu viel unsere Bitten.«

Wenn wir das tun, geben wir nicht nur Gott die Ehre; wir machen uns auch selbst geistlich gesehen reich. Er öffnet gern die Schätze des Himmels für uns, aber der heutige Bibelvers gibt uns auch zu verstehen, dass Er das nur als Antwort auf unser Gebet tut.

Mir scheint, dieser Vers beantwortet auch eine andere Frage, die wir öfter hören: Bewegt das Gebet Gott tatsächlich dazu, Dinge zu tun, die Er sonst nicht getan hätte, oder bringt es uns nur in Übereinstimmung mit dem, was Gott sowieso getan hätte? Die Antwort scheint klar zu heißen: Gott tut das, was Er sonst nicht getan hätte, als Antwort auf unsere Gebete.

Unsere Vorstellung kann uns jetzt in zwei Richtungen davontragen, wenn wir die Konsequenzen dieser Tatsache erwägen. Erstens können wir an die ungeheuren Errungenschaften denken, die sich als direktes Ergebnis des Gebetes eingestellt haben. Mit den Worten aus Hebräer 11,33.34 erinnern wir uns an diejenigen, »die durch Glauben Königreiche bezwangen, Gerechtigkeit
wirkten, Verheißungen erlangten, der Löwen Rachen verstopften, des Feuers Kraft auslöschten, des Schwertes Schärfe entgingen, aus der Schwachheit Kraft gewannen, im Kampf stark wurden, der Fremden Heere zurücktrieben«.

Aber wir können auch überlegen, was wir selbst schon für Christus alles hätten erreichen können, wenn wir nur darum gebeten hätten. Wir können an die vielen über die Maßen großartigen und kostbaren Verheißungen im Wort Gottes denken, die wir noch nicht in Anspruch genommen haben. Wir sind schwach gewesen, wenn wir doch hätten mächtig sein können. Wir haben Gott mit ein paar einzelnen Menschen bekannt gemacht, wenn wir doch in dieser Zeit Tausende oder sogar Millionen hätten erreichen können. Wir haben um ein paar Quadratmeter Land gebeten, wo wir
doch um ganze Kontinente hätten bitten können. Wir sind geistliche Hungerleider gewesen, wo wir Großkapitalisten hätten sein können. Wir haben nicht, weil wir nicht bitten.