November

காரியத்தின் இருபக்கங்கள்

November 11

“He that answereth a matter before he heareth it, it is folly and shame unto him.” (Prov. 18:13)

Living Bible paraphrases this verse, “What a shame—yes, how stupid!—to decide before knowing the facts!” This pinpoints an important lesson. You cannot make an intelligent decision until you hear all the facts. Unfortunately many Christians do not wait to hear both sides of an issue. They form a judgment on the basis of one man’s story, and often that judgment is totally wrong.

In 1979 Gary Brooks (fictitious name) was a member of the Board of Deacons of an evangelical church. He was extremely popular. He had a warm, outgoing personality. Whenever he entered a room full of people, it seemed to light up. He distinguished himself by serving the members of the church whenever they needed help. He was always attentive to the older folks in the congregation. His wife and two sons were also active in church affairs. The Brooks were looked on as a model family.

It was like an exploding bomb, therefore, when word got out that the elders had disciplined Gary by relieving him of his work as a deacon and asking him to refrain from participating in the communion service. Friends rallied to his defense and called on other church members to oppose the elders in this decision. The elders were at a disadvantage, not wishing to make a public announcement of all they knew. So they had to sit back and listen to Gary’s virtues being extolled, knowing that there was another side to the story. And they had to take considerable abuse in the process.

What did the elders know? They knew that Gary’s marriage was on the rocks because he had been carrying on an affair with his secretary. They knew that he had misappropriated church funds to finance his high lifestyle. They knew that he had engaged in unethical business practices, and that his testimony in the business world was negative. They also knew that he had lied to them when they confronted him with evidence of his wrongdoing.

Rather than submit to the discipline of the elders, Gary organized his friends in open defiance, even at the risk of splitting the church. Eventually a few of his followers spoke to one of the elders and learned some of the sad facts, but then they were too ashamed to do an about face. So they continued to fight on his behalf.

Three lessons emerge from all of this for us. First, don’t try to form a judgment until you know all the facts. Second, if you can’t get all the facts, withhold your judgment. Finally, don’t let the bonds of friendship pressure you into defending unrighteousness.

நவம்பர் 11

காரியத்தைக் கேட்கும்முன் உத்திரம் சொல்லுகிறவனுக்கு அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும். நீதிமொழிகள் 18:13

காரியத்தின் இருபக்கங்கள்

‘எத்தனை வெட்கக்கேடு – ஆம், நடந்த நிகழ்ச்சி என்ன என்பதை அறிவதற்கு முன்னமே முடிவெடுப்பது எவ்வளவு மதியீனம்!” இதுவே ‘ஜீவ வேதம்” என்னும் மொழிபெயர்ப்பு இவ்வசனத்திற்குத் தந்துள்ள பொழிப்புரை. இன்றியமையாத பாடம் ஒன்றை இவ்வசனம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. எல்லா உண்மைகளையும் நீங்கள் கேட்கிறதற்கு முன்னர் உங்களால் அறிவார்ந்த தீர்மானத்தை எடுக்க முடியாது. ஒரு பிரச்சனை எழுகிற வேளையில் இருபுறத்தையும் தீர விசாரிக்க, பல கிறிஸ்தவர்கள் காத்திருப்பதில்லை. ஒரு மனிதனுடைய கதையைக் கேட்டு, அதனடிப்படையில் அவர்கள் தீர்ப்பு வழங்கிவிடுகின்றனர்.  பெரும்பாலும் அந்த தீர்;ப்பு முற்றிலும் தவறானதாகப் போய் விடுகிறது.

ஒரு சுவிசேஷ சபையில், 1979 ஆண்டு கேரி புரூக்ஸ் என்பார் (உண்மைப் பெயர் அல்ல) உதவிக்காரர்கள் குழுவின் ஒரு அங்கத்தினராக இருந்தார். அவர் மக்களுடைய பாராட்டைப் பெற்றுப் புகழ்வாய்ந்தவராக இருந்தார். அவர் இனிமையாகப் பழகும் இயல்புடையவராக இருந்தார். மக்கள் நிறைந்த ஒரு அறைக்குள்ளாக அவர் நுழைவாரானால், அறை முழுவதும் புத்துணர்ச்சி அடைந்து விடும். அந்தச் சபை மக்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவை எழுகிறதோ அதை உடனடியாக செய்வார், அதில் தனிச்சிறப்பு பெற்றவர். சபையில் உள்ள முதியவர்கள் பேசும்போது அவர் மிக்க கவனமாகக் கேட்பார். அவருடைய மனைவியும் இரண்டு ஆண்மக்களும் சபை நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். அந்தக் குடும்பம் நல்லதொரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.

சபை மூப்பர்கள் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உதவிக்காரர் பதவியிலிருந்து அவரை நீக்கினர். அவர் அப்பம் பிட்கும் கூட்டத்தில் பங்குபெறக் கூடாது என்றும் கூறிவிட்டனர். இச்செய்தி மற்றவர்களுக்குத் தெரிந்தபோது அது வெடிகுண்டு வெடித்துச் சிதறியது போல இருந்தது. நண்பர்கள் திரண்டனர், சபையின் மற்ற அங்கத்தினர்களை ஒன்று சேர்த்து சபையின் கண்காணிகள் எடுத்த முடிவை வன்மையாக எதிர்த்தனர். கண்காணிகளோ தாங்கள் அறிந்த எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. ஆகவே அவர்கள் அனுகூலமற்ற நிலையில் இருந்தனர். கேரியின் குணநலங்கள் சபை உறுப்பினர்களால் புகழ்பாடுவதைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தனர். கதையின் மறுபக்கத்தை அவர்கள் மட்டுமே அறிவார்கள். இவையாவும் நடந்து கொண்டிருந்தபோது மிகுதியான ஏச்சுக்களை அவர்கள் கேட்கவேண்டியதாயிற்று.

அந்த மூப்பர்கள் அறிந்த உண்மையென்ன? கேரி தன் செயலாளரோடு தகாத உறவுவைத்துக் கொண்டிருந்ததால் அவரது திருமண உறவு முறியக்கூடிய நிலை இருந்தது. தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு அவர் சபையின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டார். தனது தொழிலில் நெறிமுறைகளைச் சரியாகக் கடைபிடிக்காததால், அங்கு அவருக்கு நல்ல சாட்சி இல்லை. அவருடைய தவறுகளை ஆதாரங்களுடன் மூப்பர்கள் சுட்டிக் காட்டியபோது அவற்றை மறுத்து அவர் பொய் கூறினார்.

கண்காணிகள் எடுத்த நடவடிக்கைக்குக் கீழ்ப்படியாமல், கேரி தனது நண்பர்களைத் தூண்டிவிட்டு, சபை இரண்டாக உடையக்கூடிய கட்டத்திற்குக் கொண்டு வந்துவிட்டார். இறுதியில் கேரியின் சில நண்பர்கள் ஒரு மூப்பரிடம் பேசி வருத்தத்திற்குரிய உண்மைகளில் சிறிதளவு அறிந்து கொண்டனர். ஆனாலும் அவர்கள் முற்றிலுமாகத் தங்களுடைய நிலையை மாற்றிக்கொள்ள சுயகௌரவம் அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. ஆகவே அவர்கள் தொடர்ந்து கேரிக்காகப் போராடினர்.

இதிலிருந்து மூன்று பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். முதலாவது, எல்லா உண்மைகளையும் அறிவதற்கு முன்னர் தீர்ப்பு வழங்குவதற்கு முயற்சி செய்யக்கூடாது. இரண்டாவது, எல்லா உண்மைகளையும் நீங்கள் அறிய முடியாவிடில் தீர்ப்பு வாழங்காதீர்கள். மூன்றாவது, உங்களுடைய நட்புணர்வு அநீதிக்கு ஆதரவளிக்கும்படி உங்களை வற்புறுத்த நீங்கள் இடம்கொடுக்கக்கூடாது.

11. November

»Wer Antwort gibt, bevor er zuhört, dem ist es Narrheit und Schande.« Sprüche 18,13

Modern formuliert könnte man den Vers so wiedergeben: »Was für eine Schande, ja, wie dumm ist es, zu entscheiden, bevor man überhaupt die Sachlage kennt!« Das ist eine wichtige Lehre auch für uns. Man kann keine vernünftige Entscheidung treffen, bevor man alle Tatsachen untersucht hat. Leider warten viele Christen nicht, bis sie beide Seiten in einer Sache gehört haben. Sie bilden sich ihr – oftmals völlig falsches – Urteil schon aufgrund einer Geschichte, die sie von irgendjemand gehört haben.

Gary Brooks war einer der Diakone einer evangelikalen Gemeinde in den USA. Er war ungeheuer bekannt und beliebt. Er hatte eine sehr herzliche und offene Art. Immer wenn er in einen Raum voller Leute kam, schien es hell zu werden. Er zeichnete sich dadurch aus, dass er den Mitgliedern seiner Kirche diente, wenn sie Hilfe brauchten. Er behandelte auch die älteren Leute in seiner Gemeinde besonders aufmerksam. Seine Frau und seine zwei Söhne waren ebenfalls aktiv im Leben der Gemeinde engagiert. Die Brooks galten allgemein als eine vorbildliche Familie.

Daher wirkte es wie eine Bombe, als plötzlich das Gerücht aufkam, dass die Ältesten der Gemeinde Gary Brooks aus disziplinarischen Gründen aus seiner Arbeit als Diener der Gemeinde entfernt und ihn gebeten hätten, von der Teilnahme am Abendmahl abzusehen. Freunde taten sich empört zu seiner Verteidigung zusammen und riefen andere Gemeindemitglieder auf, sich gegen die Entscheidung der Ältesten zur Wehr zu setzen. Die Ältesten wollten das, was sie wussten, nur sehr ungern an die große Glocke hängen. So mussten sie sich anhören, wie die Tugenden von Gary Brooks in den höchsten Tönen gelobt wurden, obwohl sie wussten, dass die Kehrseite der Medaille sehr viel anders aussah. Und sie mussten sich im Laufe der Sache auch noch heftig beschimpfen lassen.

Welche Informationen hatten die Ältesten nun eigentlich? Sie wussten, dass Brooks’ Ehe auf der Kippe stand, weil er schon längere Zeit ein Verhältnis mit seiner Sekretärin hatte. Sie wussten, dass er sich widerrechtlich Gelder der Gemeinde angeeignet hatte, um seinen gehobenen Lebensstil finanzieren zu können. Sie wussten, dass er sich mit sehr unfairen Geschäftspraktiken
hervorgetan hatte und dass sein Ruf in der Geschäftswelt denkbar schlecht war. Und sie wussten außerdem, dass er sie angelogen hatte, als sie ihn mit Beweisen für sein Fehlverhalten konfrontiert hatten.

Anstatt sich zu beugen, hatte Gary Brooks seine Freunde in offener Herausforderung organisiert und war damit sogar das Risiko eingegangen, die Gemeinde zu spalten. Schließlich sprachen ein paar seiner Gefolgsleute mit einem der Ältesten und erfuhren dadurch etwas von den traurigen Tatsachen, doch sie schämten sich zu sehr, jetzt noch eine Kehrtwendung zu machen. Und so kämpften sie weiter für Brooks.

Drei Dinge können wir aus alledem lernen. Erstens: Versuchen wir nicht, uns schon ein Urteil zu bilden, bevor wir alle Tatsachen kennen. Zweitens: Wenn wir nicht alle Tatsachen in Erfahrung bringen können, halten wir uns mit unserem Urteil zurück. Und drittens: Lassen wir es nicht zu, dass die Bande der Freundschaft uns dazu bringen, Unrecht zu verteidigen.

(Anmerkung des Herausgebers: Der biblische Weg wäre gewesen, wenn die Zucht von der ganzen Gemeinde ausgegangen wäre.)