July

தேவன் ஏற்காத பலிகள்

July 15

“But go ye and learn what that meaneth, I will have mercy, and not sacrifice.” (Mt. 9:13)

God is far more interested in how we treat other people than in how many religious ceremonies we go through. He prefers mercy to sacrifice. He places practical morality above ritual. It might seem strange to read that God doesn’t desire sacrifice, because it was He who instituted the sacrificial system in the first place. But there is no contradiction. While it is true that He ordered the people to bring sacrifices and offerings, He never intended these to take the place of justice and kindness. “To do justice and judgment is more acceptable to the Lord than sacrifice” (Prov. 21:3)

The Old Testament prophets thundered out against people who observed all the proper rituals, yet who cheated and oppressed their neighbors. Isaiah told them that God was fed up with their burnt offerings and religious holidays as long as they oppressed the fatherless and widows (Isa. 1:10-17). He told them that the fast God desired was to treat their employees fairly, to feed the hungry and clothe the poor (Isa. 58:6,7). Unless their lives were right, they might as well offer a dog’s head or swines’ blood (Isa. 66:3).

Amos told the people to stop their religious observances because God would continue to hate these rituals until justice and mercy flowed like a mighty torrent (Amos 5:21-24). And Micah warned that what God wants more than ritual is reality—the reality of fairness, justice, mercy and humility (Micah 6:6-8).

In our Lord’s day, the Pharisees earned His scorn by pretending to be religious with long, public prayers while evicting widows from their homes (Mt. 23:14). They were careful to give God a tenth of the mint in their garden, but this could never take the place of justice and faith (Mt. 23:23). It is futile for us to bring our offering to the Lord if our brother has a valid grievance against us (Mt. 5:24); the gift is acceptable only after the wrong has been righted. Attending church regularly will never serve as a cover-up for dishonest business practices during the week. There is no use giving mother a box of chocolates on Mother’s Day if we treat her hatefully during the year. Or a shirt to father on Father’s Day if we do not show love and respect to him the rest of the time.

God is not fooled by externals or rituals. He sees the heart and our day-by-day behavior.

யூலை 15

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள். மத்தேயு 9:13

தேவன் ஏற்காத பலிகள்

எத்தனை சமயச் சடங்குகளை நாம் நிறைவேற்றுகிறோம் என்பதில் அல்ல, மற்றவர்களை எவ்விதத்தில் நடத்துகிறோம் என்பதிலேயே தேவன் விருப்பமுடையவராக இருக்கிறார். மக்கள் பலிசெலுத்துவதைக் காட்டிலும் அவர்கள் இரக்கத்தைச் செலுத்தவேண்டும் என்பதற்கே அவர் முதலிடத்தைத் தருகிறார். சடங்குகளைக் காட்டிலும் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். பலி செலுத்தும் நியமத்தை தேவன் தாமே நியமித்திருக்கிறார். இருந்த போதிலும் பலிகளை தேவன் விரும்புகிறதில்லை என்பது விநோதமாகத் தோன்றலாம். ஆயின் அங்கே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. பலிகளையும், காணிக்கைகளையும் தமது மக்கள் செலுத்த வேண்டும் என்று கட்டளை கொடுத்து தேவன். அது உண்மையெனினும் நீதி, இரக்கம், ஆகியவற்றின் இடத்தை அது எடுத்துக்கொள்ளக் கூடாது என்றே விரும்பினார். ‘பலியிடுவதைப் பார்க்கிலும், நீதியும் நியாயம் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்” (நீதி. 21:3).

சமயச் சடங்குகள் யாவற்றையும் செவ்வனே நிறைவேற்றியும் தங்களது அயலகத்தாரை வஞ்சித்தும் அடக்கியும் வாழும் மக்களுக்கு எதிராகப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் இடிமுழக்கமிட்டனர். திக்கற்றோரையும், விதவைகளையும் கொடுமைப்படுத்தும் மக்கள் செலுத்தும் தகனபலிகளும், பண்டிகைகளும் தேவனுக்கு வெறுப்பாயுள்ளன என்று ஏசாயா கூறினான். (ஏசாயா 1:10-17). தங்களுடைய வேலைக்காரரை நன்றாக நடத்துவதும், பசியுற்றோருக்கு உணவளிப்பதும், ஏழைகளுக்கு உடைகொடுத்தலுமே, உண்மையான உபவாசமாகும் என்றும் அவன் கூறினான் (ஏசாயா 58:6-7). அவர்களுடைய நடக்கை சரியில்லையெனில் அவர்களுடைய பலிகள் நாய்த் தலையாகவும், பன்றியின் இரத்தமாகவுமே கருதப்படும் (ஏசாயா 66:3).

இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சமயச் சடங்குகளைக் கைக்கொள்ள வேண்டாமென்று ஆமோஸ் கூறினான். ஏனெனில், அவர்களிடமிருந்து நீதியும் இரக்கமும் பெருவெள்ளமாகப் பாய்ந்து வருமட்டும் அவர்கள் செலுத்தும் பலிகளைத் தேவன் விரும்பவில்லை. (ஆமோஸ் 5:21-24). நியாயம், நீதி, இரக்கம், மனத்தாழ்மை, ஆகிய நன்மைகளையே தேவன் சடங்குகளைக் காட்டிலும் மேலானதாகக் கருதுகிறார் என மீகா கூறினான் (மீகா 6:6-8).

நமது கர்த்தர் இப்புவியில் வாழ்ந்த நாட்களில், பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணி, தங்களைப் பக்தி நிறைந்தவர்களாகக் காட்டி, விதவைகளை வீட்டைவிட்டு துரத்திய பரிசேயர்கள் அவருடைய வெறுப்பிற்கு ஆளாயினர் (மத்.23:14). அவர்கள் செலுத்திய தசமபாகம், நீதிக்கும் விசுவாசத்திற்கும் ஈடாகாது என்று அவர் கண்டித்துணர்த்தினார் (மத்.23:23). நம்முடைய சகோதரன் நமக்கு எதிராக ஒரு தகுந்த காரணத்தினால் மனத்தாங்கல் உடையவனாக இருக்கும்போது நாம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை வீணென்று அறியக்கடவோம் (மத். 5:24). அந்தத் தவறு சரிசெய்யப்;பட்ட பிறகே அந்தக் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படும். சபைக்கு தவறாமல் செல்வதினால் நமது நேர்மையற்ற தன்மை சீராகாது. தாயையும், தந்தையையும், ஆண்டு முழுவதும் அன்புடன் நடத்தாமல் அன்னையின் தினத்தில் இனிப்பு வழங்குவதோ, தகப்பனாரின் தினத்தில் ஒரு பரிசுப்பொருள் வழங்குவதோ பயனற்றது.

வெளிப்படையான சடங்குகளைச் செய்து தேவனை ஏமாற்ற முடியாது. நமது நடத்தை நாள்தோறும் எவ்வண்ணம் இருக்கிறது என்றும், நமது இருதயம் எங்ஙனம் இருக்கிறது எனவும் அவர் காண்கிறார்.

15. Juli

»Gehet aber hin und lernet, was das ist: ›Ich will Barmherzigkeit und nicht Schlachtopfer.‹« Matthäus 9,13

Gott liegt viel mehr daran, wie wir andere Menschen behandeln, als wie vielen religiösen Zeremonien wir uns unterziehen. Er zieht Barmherzigkeit den Schlachtopfern vor. Er stellt Moral über Ritual. Vielleicht finden wir es seltsam, dass Gott anscheinend keine Opfer begehrt, denn schließlich hat Er ja das Opfersystem überhaupt erst eingeführt. Doch besteht da kein Widerspruch. Während es richtig ist, dass Er dem Volk gebot, Opfergaben und Schlachtopfer darzubringen, war es doch nie Seine Absicht, dass diese als Ersatz für Gerechtigkeit und Güte dienen sollten.
»Gerechtigkeit und Recht üben ist dem Herrn lieber als Schlachtopfer« (Sprüche 21,3).

Die alttestamentlichen Propheten zürnten gegen die Menschen, die alle vorgeschriebenen Riten beobachteten, aber dabei ihren Nächsten betrogen und unterdrückten. Jesaja sagte ihnen, dass für Gott ihre Brandopfer und Festfeiern ein Gräuel waren, solange sie die Witwen und Waisen unterdrückten (Jesaja 10,1-17). Er sagte ihnen, dass das Fasten nach Gottes Gedanken darin besteht, dass man seine Angestellten gerecht behandelt, die Hungrigen speist und die Armen bekleidet (Jesaja 58,6.7). Solange ihr Leben nicht in Ordnung wäre, wäre es so, als ob sie als Opfer einen Hundekopf oder Schweineblut darbringen würden (Jesaja 66,3).

Amos sagte dem Volk, dass es religiöse Feste ganz sein lassen sollte, weil Gott diese Rituale solange hassen und verschmähen würde, bis sich das Recht einherwälzen würde wie Wasser und die Gerechtigkeit wie ein immer fließender Bach (siehe Amos 5,21-24). Und Micha betonte, dass Gott Realität statt Rituale will – die Realität und Echtheit von Recht, Gerechtigkeit, Güte und Demut (siehe Micha 6,6-8).

In den Tagen unseres Herrn zogen sich die Pharisäer Seinen Zorn zu durch ihre religiöse Heuchelei, die darin sichtbar wurde, dass sie lange öffentliche Gebete sprachen, während sie Witwen aus ihren Häusern vertrieben (Matthäus 23,14). Sie achteten sorgfältig darauf, Gott den Zehnten von der Minze in ihrem Garten zu geben, aber dies konnte niemals Gerechtigkeit und Glauben ersetzen (Matthäus 23,23). Es ist nutzlos, unsere Gabe zum Altar zu bringen, wenn unser Bruder zu Recht etwas gegen uns hat (Matthäus 5,24); die Gabe wird von Gott erst dann angenommen, wenn das Unrecht in Ordnung gebracht ist. Unser regelmäßiger Gemeindebesuch kann niemals als Ausgleich oder Tarnung für unehrliche Geschäftspraktiken während der Woche herhalten. Es ist umsonst, unserer Mutter am Muttertag eine Schachtel Pralinen zu schenken, wenn wir sie das ganze Jahr über respektlos und gehässig behandeln.

Oder für Vater ein Hemd zum Vatertag zu kaufen, wenn wir ihm ansonsten weder Liebe noch Respekt erweisen.

Gott lässt Sich durch Äußerlichkeiten und Rituale nicht täuschen. Er sieht das Herz und unser alltägliches Verhalten.