July

புத்துயிர் அடைவதின் அவசியம்

July 4

“Wilt thou not revive us again that thy people may rejoice in thee.” (Psa. 85:6)

A backslidden condition is often like cancer; we don’t know we have it. We can grow spiritually cold so gradually that we don’t realize how carnal we have actually become. Sometimes it takes a tragedy, a crisis or the voice of some prophet of God to awaken us to our desperate need. Only then can we claim God’s promise, “I will pour water on him that is thirsty, and floods upon the dry ground” (Isa. 44:3).

I am in need of revival when I have lost my enthusiastic zest for the Word of God, when my prayer life has lapsed into a dull routine (or lapsed altogether), when I have left my first love. I need a fresh touch from God when I am more interested in TV programs than in the meeting of the local fellowship, when I am punctual for work but late for meetings, when I am regular at my job but spasmodic at the assembly. I need reviving when I am willing to do for dollars what I am unwilling to do for the Savior, when I spend more money on self- indulgence than I do on the work of the Lord.

We need revival when we harbor grudges, resentments, bitter feelings. When we are guilty of gossiping and backbiting. When we are unwilling to confess wrongs we have committed or to forgive others when they confess their faults to us. We need reviving when we fight like cats at home, then appear in the assembly as if all were sweetness and light. We need to be revived when we have become conformed to the world in our talk, our walk, our whole life-style. How great is our need when we are guilty of the sins of Sodom—pride, fullness of bread and prosperous ease (Ez. 16:49)!

As soon as we realize our coldness and barrenness, we can claim the promise of 2 Chronicles 7:14, “If my people, which are called by my name, shall humble themselves, and pray, and seek my face, and turn from their wicked ways; then will I hear from heaven, and will forgive their sin, and will heal their land.”

Confession is the road to revival!

O Holy Ghost, revival comes from Thee;
Send a revival—start the work in me.
Thy Word declares Thou wilt supply our need.
For blessings now, O Lord, I humbly plead.

J. Edwin Orr

யூலை 4

உங்கள் ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்;பிக்க மாட்டீரோ? சங்கீதம் 85:6

புத்துயிர் அடைவதின் அவசியம்

ஆவிக்குரிய வாழ்வில் ஏற்படும் பின்மாற்றம் புற்று நோய்க்கு ஒப்பானதாகும். அந்நோயின் தொடக்கத்தில், அதனால் தாக்கப்பட்டவர் அதை அறிவதில்லை. ஆவிக்குரிய நிலையிலும் ஒருவர் குளிர்ந்துபோய், மாம்சீக நிலையை அடைந்துள்ளதை அறியாதிருப்பார். நமது வாழ்க்கையில் உண்டாகும் சோக நிகழ்ச்சியோ, நெருக்கடியான நிலையோ, தேவ வார்த்தையோ நம்மை எழுப்பிவிட்டு, நமது அவலநிலையை உணர்த்தி, தேவையை சுட்டிக்காட்டும். அதன் பிறகே, தேவனுடைய வாக்குறிதியை நாம் உரிமை கோரமுடியும், ‘தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்” (ஏசா.44:3).

திருமறையின்மீது நான் கொண்டிருந்த பற்றையும், ஆர்வத்தையும் இழந்து போயிருந்தாலோ, ஜெப வாழ்க்கை மந்தமாகிப் போயிருந்தாலோ, என்னுடைய ஆதி அன்பை இழந்திருந்தாலோ, நான் எழுச்சியடைய வேண்டியவனாக இருக்கிறேன் என்பதே பொருளாகும். சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக ஆர்வம் கொண்டிருப்பேனாகில், வேலைக்குச் சரியான நேரத்திற்குச் செல்லும் நான் சபைக் கூட்டங்களுக்குக் காலதாமதமாகச் செல்வேனாகில், அல்லது சில கூட்டங்களைத் தவிர்ப்பேனாகில் தேவனுடைய தொடுதல் புதியவகையில் எனக்குத் தேவை என்பதே பொருளாகும். செல்வத்தைச் சேர்க்க அயராது பாடுபடும் நான், கர்த்தருக்கு உழைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தனது தேவைகளுக்குத் தாராளமாகச் செலவு செய்யும் நான், கர்த்தருடைய ஊழியத்திற்குச் செலவு செய்வதில்லை. இவையாவும் நான் புதிப்பிக்கபட வேண்டியவன் என்பதற்கான அறிகுறிகளாகும்.

காழ்ப்புணர்ச்சி, சீற்றம், கசப்புணர்ச்சி, உண்டாகும் காலங்களில் நாம் புதிப்பிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். கோள் சொல்லுதல், புறங்கூறுதல், ஆகிய குற்றங்கள், மற்றவர்கள் தங்களுடைய தவறுகளை அறிக்கை செய்யும் தருணங்களில் நமது தவறுகளை எடுத்துரைக்காதிருத்தல் ஆகிய யாவும் நமது தேவையைச் சுட்டிக்காட்டுகின்றன. வீடுகளில் பூனைகளைப் போல் சண்டையிட்டுக் கொண்டு, சபையில் இனிமைக்கும் ஒளிக்கும் சான்றுகளாக நம்மைக் காண்பித்தால் நாம் புதிதாக்கப்பட வேண்டியவர்களாவோம். நமது பேச்சிலும், நடத்தையிலும், வாழ்வின் பல கூறுகளிலும் உலகிற்கு ஏற்றபடி வாழ்வோமாயின் நாம் புத்துயிர் பெறவேண்டியவர்களே. பெருமை, செல்வத்தின் திரட்சி ஆகியவை நம்மைச் சோதோம் மக்களைப் போன்றவர்களாகக் கணக்கிடும். அவ்வாறாயின் நமது தேவை எத்தனை பெரியது!

நமது குளிர்ந்து போன நிலையிலும், வெறுமையையும் உணர்வோமாயின், உடனடியாக நாம் உரிமைகோர வேண்டிய வாக்குறுதி, ‘என் நாமம் தரிப்பிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு சேமத்தைக் கொடுப்பேன்” (2.நாளா.7:14).

அறிக்கை செய்தலே புதிப்பிக்கபடுதலுக்குப் பாதையாகும்.

4. Juli

»Willst du uns nicht wieder beleben, dass dein Volk sich in dir erfreue?« Psalm 85,7

Ein Zustand geistlichen Rückfalls ist oft wie Krebs: Wir wissen nicht, dass wir daran erkrankt sind. Es ist möglich, auf so langsame Weise geistlich kalt zu werden, dass uns gar nicht bewusst ist, wie fleischlich wir in Wirklichkeit schon geworden sind. Manchmal ist ein Unglück, ein Krisenerlebnis oder die Stimme eines Propheten Gottes nötig, um uns unsere verzweifelte Not deutlich vor Augen zu führen. Nur dann können wir Gottes Verheißung in Anspruch nehmen: »Denn ich werde Wasser gießen auf das Durstige und Bäche auf das Trockene« (Jesaja 44,3).

Ich habe Neubelebung dringend nötig, wenn ich meinen begeisterten Eifer für das Wort Gottes verloren habe, wenn mein Gebetsleben zu einer eintönigen Routine geworden (oder ganz ausgefallen) ist, wenn ich meine erste Liebe verlassen habe. Ich muss von Gott ganz neu angerührt werden, wenn ich mehr am Fernsehprogramm als an den Zusammenkünften der örtlichen Versammlung interessiert bin, wenn ich zur Arbeit pünktlich, zu den Zusammenkünften aber zu spät komme, wenn ich im Beruf zuverlässig bin, in der Versammlung aber nur vereinzelt auftauche. Ich brauche Belebung, wenn ich für Geld Dinge tue, die ich für den Herrn nicht tun will, wenn ich mehr Geld für mein eigenes Wohlleben als für das Werk des Herrn ausgebe.

Wir brauchen Erneuerung, wenn wir in unserem Herzen Neid, Groll und Bitterkeit beherbergen. Wenn wir uns Verleumdung und übler Nachrede schuldig gemacht haben. Wenn wir nicht mehr bereit sind, Unrecht zu bekennen oder anderen zu vergeben, wenn sie uns ihre Fehler bekennen. Wir brauchen Belebung, wenn wir zu Hause wie Hund und Katz sind, aber dann in der Versammlung erscheinen, als wäre alles in bester Ordnung. Wir brauchen Erneuerung, wenn wir uns der Welt angepasst haben in unserem Reden, unserem Wandel und unserem ganzen Lebensstil. Wie groß ist unsere Not, wenn wir uns der Sünden Sodoms schuldig gemacht haben – Hoffart, Fülle von Brot und sorglose Ruhe (Hesekiel 16,49)!

Sobald wir uns unserer Kälte und Armut bewusst werden, können wir uns auf die Verheißung von 2. Chronik 7,14 stützen: »… und mein Volk, welches nach meinem Namen genannt wird, demütigt sich, und sie beten und suchen mein Angesicht und kehren um von ihren bösen Wegen: so werde ich vom Himmel her hören und ihre Sünden vergeben und ihr Land heilen.«

Bekenntnis ist der sichere Weg zur Neubelebung!

Herr Jesus Christ, Belebung kommt von Dir;
Sende eine Erneuerung – beginn Dein Werk in mir.
Dein Wort sagt, dass Du unsre Bedürfnisse stillst.
So fleh’ ich demütig, dass Du mit Deinem Segen mich erfüllst.