July

விருந்தோம்பல்

July 3

“Be not forgetful to entertain strangers: for thereby some have entertained angels unawares.” (Heb. 13:2)

Hospitality is not only a sacred duty (Be not forgetful to entertain strangers); it carries within it the promise of glorious surprises (for thereby some have entertained angels unawares).

It had started out as just another ordinary day for Abraham. Suddenly three men appeared before him as he sat by the door of his tent. The patriarch reacted in the typical middle-eastern manner—he washed their feet, arranged a cool resting place for them under a tree, went out to the herd for a calf, asked Sarah to bake some bread, then served them a sumptuous meal.

Who were these men anyway? Two of them were angels; the third was the angel of the Lord. We believe that the angel of the Lord was the Lord Jesus appearing as a Man (see Genesis 18:13 where the angel is called “the Lord”).

So Abraham entertained not only angels, he entertained the Lord Himself in one of His many preincarnate appearances. And we may have the same privilege, startling as it may seem!

How many Christian families can testify to the blessing received from entertaining godly men and women in their homes. Impressions for God have been made on children that followed them all through their lives. Zeal for the Lord has been rekindled, sorrowing hearts have been comforted, problems have been resolved. How much we owe to these “angels” whose very presence was a benediction in the home!

But it is also our incomparable privilege to have the Lord Jesus as a guest. Whenever we receive one of His people in His Name, it is the same as if we received Him (Mt. 10:40). If we really believe this, we will spend and be spent in the wonderful ministry of hospitality as never before. We will “use hospitality one to another without grudging” (1 Pet. 4:9). We will treat every guest the same as we would treat Christ Himself. And our homes will be like the home of Mary and Martha in Bethany—where Jesus loved to be.

யூலை 3

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. (எபிரெயர் 13:2)

விருந்தோம்பல்

விருந்தோம்பல் போற்றுதற்கு உரிய ஊழியம் மட்டுமின்றி (அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்) மகிமை நிறைந்த வியத்தகு வாக்குறுதிகளை அது தன்னோடு கொண்டிருக்கிறது (அதினாலே சிலர் அறியாமல் தேவ தூதரையும் உபசரித்ததுண்டு).

அந்த நாள், மற்றுமொரு வழக்கமான நாளாகவே ஆபிரகாமின் வாழ்க்கையில் தொடங்கிற்று. தனது கூடாரத்தின் வாசலின் அருகில் அவன் அமர்ந்திருந்தான். எதிர்பாராதவிதமாக மூன்று மனிதர்கள் அவனுக்குமுன் தோன்றினர். கிழக்கத்திய மனிதர்களின் பண்பிற்கிணங்க நம் முற்பிதா நடந்து கொண்டான். விருந்தினர்களின் கால்களைக் கழுவினான். மரத்தின் கீழ் குளிர்ச்சியான இடத்தில் அவர்களை அமரச்செய்தான், மந்தைக்குச் சென்று ஒரு கன்றுக்குட்டியை அடித்துச் சமைக்கச் செய்தான், சில அப்பங்களை உண்டுபண்ணும்படி சாராளைக் கேட்டுக் கொண்டான், சுவையான உணவை அவர்களுக்குப் பரிமாறினான்.

அந்த மனிதர்கள் யாவர்? அவர்களுள் இருவர் தேவதூதர்கள். மூன்றாவது நபர் கர்த்தருடைய தூதனானவர். அங்கே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மனிதராகத் தம்மைக் காட்டினார் என்றே நாம் கருதுகிறோம் (ஆதியாகமம் 18:13ல் கர்த்தர் என்று அவர் அழைக்கப்படுவதைக் காண்க.)

தேவதூதர்களுக்கு மட்டுமின்றி, தனது மனித அவதாரத்திற்கு முன்னமே, கர்த்தர் தம்மை வெளிப்படுத்தின நிகழ்ச்சிகளில் ஒன்றில் ஆபிரகாம் அவருக்கு விருந்து படைத்து போற்றினான். இது போன்று வியத்தகு வாய்ப்பினையும், நற்பேற்றையும் நாமும் பெற இயலும்!

பயபக்தி நிறைந்த மனிதர்கட்கு தங்களுடைய வீடுகளில் விருந்தோம்பல் செய்து நற்பேற்றினை அடைந்த கிறிஸ்தவ குடும்பங்கள் எத்தனையுள்ளன. இதனைக் கண்ணுறும் பிள்ளைகள் பெற்றோரின் சீரிய பண்பைத் தங்களுடைய வாழ்நாட்காலமெலாம் தேவனுக்காகக் பின்பற்றுவர். தேவன் அவர்கள்மீது கண்ணோக்கமாயிருக்கிறார். கர்த்தர் மீது கொண்டுள்ள வைராக்கியம் தூண்டுதல் அடையும். வருந்துகிற உள்ளங்கள் ஆறுதல் அடையும். பிரச்னைகள் தீர்ந்து போகும். ‘தேவதூதர்களின்” வருகை வீட்டிற்கு ஆசியைக் கொண்டுவருகிறது. அந்தத் தூதர்களுக்கு எவ்வளவு நாம் நன்றிக்கடன்பட்டவாகளாயிருக்க வேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நமது இல்லத்தில் விருந்தினராக அடைவது ஒப்பற்ற நற்பேறாகும். அவர்தம் மக்களில் ஒருவரை, அவருடைய திருப்பெயரில் வரவேற்பது, அவரையே ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும் (மத்.10:40). இதனை உண்மையாகவே நாம் நம்புவோமாயின், இதுவரை இல்லாத அளவிற்கு விருந்தோம்பல் ஊழியத்தில் நாம் செலவு செய்வோம். நம்மையே செலவிட ஒப்புவிப்போம். ஒருவரையொருவர் முறுமுறுப்பில்லாமல் உபசரிப்போம் (1.பேது.4:9). கிறிஸ்துவிற்கு எவ்வாறு விருந்து செய்வோமோ அவ்வாறு ஒவ்வொரு விருந்தினரையும் நடத்துவோம். இயேசு கிறிஸ்துவினால் அன்புகூரப்பட்ட மரியாள், மார்த்தாள், ஆகியோரது பெத்தானியா வீட்டினரைப்போல நமது இல்லங்களும் சிறந்துமிளிரும்.

3. Juli

»Der Gastfreundschaft vergesset nicht, denn durch dieselbe haben etliche ohne ihr Wissen Engel beherbergt.« Hebräer 13,2

Gastfreundschaft ist nicht nur eine heilige Pflicht (»Der Gastfreundschaft vergesset nicht«); sie enthält auch die Verheißung herrlicher Überraschungen (»denn durch dieselbe haben etliche ohne ihr Wissen Engel beherbergt«).

Es begann wie jeder andere gewöhnliche Tag für Abraham. Dann erschienen drei Männer vor ihm, als er am Eingang seines Zeltes saß. Der Patriarch reagierte auf typisch orientalische Weise – er wusch ihre Füße, suchte für sie einen kühlen Rastplatz unter einem Baum, las aus der Herde ein Kalb aus, bat Sara, etwas Brot zu backen, und servierte ihnen dann ein reichliches Mahl.

Wer waren übrigens diese Männer? Zwei von ihnen waren Engel; der dritte war der Engel des Herrn: Wir glauben, dass der Engel des Herrn der Herr Jesus war, der in menschlicher Gestalt
erschien (vergleiche 1. Mose 8,13, wo der Engel »der Herr« genannt wird).

Abraham beherbergte also nicht nur Engel, er beherbergte sogar den Herrn selbst in einer Seiner vielen Erscheinungen vor Seiner Fleischwerdung. Und wir haben vielleicht einmal das gleiche Vorrecht, so unglaublich das auch klingen mag!

Wie viele christliche Familien können Zeugnis ablegen von dem Segen, den sie durch die Beherbergung gottesfürchtiger Männer und Frauen bei sich zu Hause empfangen haben. Die Kinder haben durch sie Eindrücke von Gott bekommen, die sie durch das ganze Leben begleitet haben. Der Eifer für den Herrn wurde neu entflammt, trauernde Herzen wurden getröstet, Probleme wurden gelöst. Wie viel verdanken wir diesen »Engeln«, deren bloße Gegenwart schon ein Segen für unser Haus war!

Aber es ist auch unser unvergleichliches Vorrecht, den Herrn Jesus als Gast aufnehmen zu dürfen. Wann immer wir einen der Seinen in Seinem Namen aufnehmen, dann ist es das Gleiche, als ob wir Ihn aufnähmen (Matthäus 10,40). Wenn wir das wirklich glauben, dann verwenden wir gern alles und lassen uns selbst verwenden wie nie zuvor in diesem wunderbaren Dienst der Gastfreundschaft. Wir sind dann »gastfrei gegeneinander ohne Murren« (1. Petrus 4,9). Wir behandeln jeden Gast so, wie wir Christus selbst behandeln würden. Und unser Zuhause wird wie das Haus Marias und Marthas in Bethanien sein – wo der Herr Jesus gern verweilte.