January

புறத்தோற்றம் என்னும் மாயை

  • January-03
❚❚

கேட்பதற்கு மேலே அழுத்தவும் !

January 3

“Judge not according to the appearance, but judge righteous judgment.” (John 7:24)

One of the most deep-seated frailties of fallen humanity is the persistent tendency to judge according to appearance. We judge a person according to his looks. We judge a used car by its body. We judge a book by its cover. No matter how often we are disappointed and disillusioned, we stubbornly refuse to learn that “all is not gold that glitters.”

In his book Hide or Seek, Dr. James Dobson says that physical beauty is the most highly valued personal attribute in our culture. We have made it what he calls “the gold coin of human worth.” Thus a beautiful child is more favored by adults than a plain one. Teachers tend to give better grades to attractive children. Pretty children get less discipline than others. Homely children are more subject to blame for misdemeanors.

Samuel would have chosen the tall, good-looking Eliab to be king (1 Sam. 16:7), but the Lord corrected him, “Look not on his countenance or on the height of his stature; because I have refused him: for the Lord seeth not as man seeth; for man looketh on the outward appearance, but the Lord looketh on the heart.”

The greatest case of misjudgment in history occurred when the Lord Jesus visited our planet. Apparently He was not prepossessing as far as physical appearance was concerned. He had no form or comeliness, and when men saw Him, no beauty that they should desire Him (Isa. 53:2). They could see no beauty in the only truly beautiful Person who ever lived!

Yet He Himself never fell into this terrible trap of judging according to looks, for before His advent, it was prophesied of Him, “He shall not judge after the sight of His eyes, neither reprove after the hearing of His ears” (Isa. 11:3). To Him it was not the face but the character that counted. Not the cover but the contents. Not the physical but the spiritual.

ஜனவரி 3

தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள் (யோ.7:24)

புறத்தோற்றம் என்னும் மாயை

தோற்றத்தின்படி தீர்ப்பு வழங்குவதில் கொண்டுள்ள உறுதியான மனப்பாங்கு, விழுந்துபோன மனுக்குலத்தின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ள பலவீனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒருவருடைய தோற்றத்தின்படியே நாம் தீர்ப்புவழங்குகிறவர்களாக இருக்கிறோம். பயன்படுத்திய வாகனத்தின் விலை அதனுடைய தோற்றத்தைப் பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. ஒரு நூலின் தரத்தை அதன் மேலட்டையைப் பார்த்து கணக்கிறோம். எத்தனை முறை நாம் ஏமாற்றம் அடைந்தாலும் நம்பிக்கையற்றுப்போனாலும், „ மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்னும் பாடத்தைக் கற்றுக்கொள்ளாமல், அதனை எதிர்த்து நிற்கிறோம்.

நம்முடைய பண்பாட்டின்படி, சரீர அழகு ஒருவருடைய மிக உயர்ந்த குணநலனாகக் கருத்தப்படுகிறது என்று முனைவர் ஜேம்ஸ் டாப்சன் என்பார், „மறைந்துகொள் அல்லது தேடு’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். சரீர அழகை „ மனிதர்கள் மதிக்கும் பொன் நாணயம்’ என்று அவர் அழைக்கிறார். அத்தகு கூற்று உண்மையெனக் கருதத்தக்கபடி கவர்ச்சியற்ற குழந்தையைக் காட்டிலும், அழகுமிக்க குழந்தை பெரியவர்களின் அன்பைப் பெறுகிறது. கவர்ச்சியான பின்ளைகளுக்கு ஆசிரியர்கள் கூடுதல் மதிப்பெண்கள் தர தூண்டப்படுகின்றனர். பொதுவாக, அழகுள்ள பிள்ளைகள் மற்றப் பிள்ளைகளைப்போலக் கண்டிக்கப்படுகிறதில்லை. ஆடம்பரமற்ற பிள்ளைகள் சிறுதவறுகளுக்கும் அதிகமாகக் குற்றப்படுத்தப்படுகிறார்கள்.

நல்ல உயரமுடையவனும், அழகு நிறைந்தவனுமாகிய எலியாப் என்பவனையே, சாமுவேல் அரசனாகத் தெரிந்தெடுத்திருப்பான் (1.சாமு.16:7). ஆனால், கர்த்தரோ, „நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரத்தையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’ என்று சொல்லி சாமுவேலைத் திருத்தவேண்டியதாயிற்று.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய கோளத்திற்கு இறங்கி வந்தபோதுதான், உலகவரலாற்றில் மிகப்பெரிய தவறான முடிவு எடுக்கப்பட்டது. சரீரதோற்றத்தைப் பொறுத்தமட்டில் அவர் கவர்ச்சி மிக்க தோற்றம் அழிக்கவில்லை என்பதை நாம் அறிவோம். அவருக்கு அழகுமில்லை, சௌந்தர்யமுமில்லை, மனிதர்கள் அவரைப் பார்க்கும்போது விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது (ஏசா.53.2). உலகினில் வாழ்;ந்த அனைவருக்குள்ளும் உண்மையாகவே அழகுநிறைந்த ஒரே ஒருவராகிய இயேசு நாதரிடம் மனிதர்களால் அழகினைக் காணமுடியவில்லை !

ஆயினும், தோற்றத்தைக கண்டு முடிவெடுக்கும் தவறனான கண்ணியில் அவர் எத்தருணத்திலும் சிக்கிக்கொள்ளவில்லை. அவருடைய வருகைக்கு முன்னரே, „ அவர் தம் கண்கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும் இருப்பார்’ என்று அவரைக் குறித்து முன்னுரைக்கப்பட்டது (ஏசா.11:3). முகத்தையல்ல, குணத்தையே: வெளியே அல்ல உள்ளே இருப்பதையே, சரீரத்தைதோற்றத்தை அல்ல ஆவிக்குரியதையே கர்த்தர் கணக்கில் கொள்கிறார்.

3. Januar

»Richtet nicht nach dem Schein, sondern richtet ein gerechtes Gericht.« Johannes 7,24

Eine der am tiefsten eingewurzelten Schwächen der gefallenen Menschheit ist die ständige Tendenz, nach dem Augenschein zu richten. Wir beurteilen einen Menschen nach seinem Aussehen. Wir beurteilen einen Gebrauchtwagen nach dem Zustand der Lackierung. Wir beurteilen ein Buch nach dem Umschlag. Gleichgültig, wie oft wir auch enttäuscht und desillusioniert werden, wir weigern uns hartnäckig zu lernen, dass »nicht alles Gold ist, was glänzt«.

In seinem Buch »Minderwertigkeitsgefühle – eine Epidemie« sagt Dr. James Dobson, dass physische Schönheit die höchstbewertete menschliche Eigenschaft in unserer Kultur ist. Wir haben sie nach seinen Worten zum »Goldstandard menschlichen Wertes« gemacht. So begünstigen Erwachsene ein hübsches Kind mehr als ein durchschnittlich aussehendes. Lehrer geben äußerlich attraktiven Kindern oft bessere Noten. Hübsche Kinder werden auch weniger bestraft als andere. Unscheinbare Kinder dagegen werden viel häufiger für Missetaten zur Verantwortung gezogen.

Samuel hätte den großen, gut aussehenden Eliab zum König gewählt (1. Samuel 16,7), aber der Herr korrigierte ihn: »Blicke nicht auf sein Aussehen und auf die Höhe seines Wuchses, denn ich habe ihn verworfen; denn der Herr sieht nicht auf das, worauf der Mensch sieht; denn der Mensch sieht auf das Äußere, aber der Herr sieht auf das Herz.«

Der größte Fall von Fehlurteil in der Geschichte fand statt, als der Herr Jesus auf die Erde kam. Offensichtlich war Er nicht anziehend, was Seine physische Erscheinung betraf. »Er hatte keine Gestalt und keine Pracht; und als wir ihn sahen, da hatte Er kein Aussehen, dass wir Seiner begehrt hätten« (Jesaja 53,2). Wir konnten keine Schönheit entdecken in dem einzigen wahrhaft schönen Menschen, der je gelebt hat!

Er Selbst aber fiel niemals in diese schreckliche Falle des Richtens nach dem Augenschein, denn vor Seinem Kommen wurde von Ihm prophezeit: »Und er wird nicht richten nach dem Sehen seiner Augen und nicht Recht sprechen nach dem Hören seiner Ohren« (Jesaja 11,3). Für Ihn zählte nicht das Gesicht, sondern der Charakter, nicht die Verpackung, sondern der Inhalt, nicht das Physische, sondern das Geistliche.