January

பிறர் மேன்மை கருதுதல்

  • January-02
❚❚

கேட்பதற்கு மேலே அழுத்தவும் !

January 2

“In lowliness of mind, let each esteem other better than themselves.” (Philippians 2:3b)

To esteem others better than self is unnatural; fallen human nature rebels at such a blow to its ego. It is humanly impossible; we do not have the power in ourselves to live such an otherworldly life. But it is divinely feasible; the indwelling Holy Spirit empowers us to efface self in order that others might be honored.

Gideon illustrates our text. After his three hundred men had defeated the Midianites, he called for the men of Ephraim to add the final blow. They cut off the escape route and captured two Midianite princes. But they complained that they had not been called earlier. Gideon replied that the gleaning of the grapes of Ephraim was better than the vintage of Abiezer (Judges 8:2), that is, the mopping-up operation conducted by the men of Ephraim was more illustrious than the whole campaign waged by Gideon. This spirit of selflessness appeased the Ephraimites.

Joab showed great unselfishness when he captured Rabbah and then called for David to come and administer the coup de grace (2 Samuel 12:26-28). Joab was quite content that David should get credit for the victory. It was one of the nobler moments in Joab’s life.

The Apostle Paul esteemed the Philippians better than himself. He said that what they were doing was the significant sacrifice to God, whereas he was nothing more than a drink offering, poured out over the sacrifice and service of their faith (Philippians 2:17).

In more recent times, a beloved servant of Christ was waiting in an anteroom with other distinguished preachers, ready to file out onto the platform. When he finally appeared at the door and a thunderous ovation took place, he quickly stepped aside so that those who were following him would receive the applause.

The supreme example of self-abnegation is the Lord Jesus. He humbled Himself that we might be exalted. He became poor that we might become rich. He died that we might live.

“Let this mind be in you, which was also in Christ Jesus.”

ஜனவரி 2

மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் (பிலி.2:3).

பிறர் மேன்மை கருதுதல்

மற்றவர்களை மேன்மையுள்ளவர்களாகக் கருதுவது மனிதனின் இயல்பல்ல. வீழ்ந்துபோன மனுக்குலம் தற்பெருமைக்கு விழும் தண்டனையை ஏற்றுக்கொள்ளாமல் அதனை எதிர்த்துநிற்கின்றது. அது மனித இயல்பிற்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. தற்பெருமையற்ற வானுலக வாழ்வினை வாழ்வதற்கு நாம் சொந்த பலமற்றவர்களாய் இருக்கிறோம். ஆயினும் தெய்வீக வல்லமையால் அவ்வாறு வாழ இயலும். நாம் நமது சுயத்தை அழித்து, மற்றவர்களை மேன்மையாக கருதக்கூடிய தன்மையை அடையத் தேவையான பலத்தை நமக்குள்ளாக வாசம் செய்யும் தூய ஆவியானவர் நமக்குத் தந்தருளுகின்றார்.

இந்த திருவசனத்திற்கு கிதியோன் நல்லதொரு சான்றாக விளங்குகின்றான். மூந்நூறு ஆட்களைக் கொண்டு மீதியானியர்களைத் தோற்கடித்தபிறகு, கடைசித்தாக்குதலை நடத்த எப்பிராயீம் மனிதர்களை அழைத்தான். எதிரிகளை தப்பியோடும் வழிகளை அவர்கள் அடைத்து மீதியான் நாட்டு இளவரசர்கள் இருவரைச் சிறைப்பிடித்தனர். முன்னரே ஏன் தாங்கள் அழைக்கப்படவில்லையென்று அவர்கள் முறையிட்டனர்.

ராப்பா பட்டணத்தை யோவாப் வென்றான். எனினும் தனது தன்னலமற்ற எண்ணத்தினால், தாவீது தனது மனிதர்களோடு வந்து, அப்பட்டணத்தை முற்றுகையிட்டுப் பிடிக்கும்படி அவனுக்கச் சொல்லி அனுப்பினான் (2.சாமு.12:26-28). மனநிறைவுகொண்ட யோவாப், அந்த வெற்றிக்குரிய பெருமை தாவீதையே சேரவேண்டும் என்று கருதினான். யோவாபின் பெருந்தன்மையுள்ள செய்யைகளில் இதுவும் ஒன்று.

அப்போஸ்தலனாகிய பவுல் தன்னைக் காட்டிலும் பிலிப்பு பட்டணத்தாரை மேன்மையாகக் கருதினார். அவர்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும், ஊழியத்தின்மேலும் உற்றப்படுகின்ற பானபலியைப் போன்று தனது ஊழியம் அமைந்திருக்கிறது என்றும், அவர்களுடைய ஊழியமோ அதனைக் காட்டிலும் மேலானதும், தேவனுக்கு உகந்ததுமாக இருக்கிறது என்றும் கூறினார் (பிலி.217).

சிறிய காலத்திற்கு முன்னர் நடந்த நிகழ்சி ஒன்றைக் கூறுகிறேன். புகழ்பெற்ற இறையியல் சொற்பொழிவாளர் சிலருடன், தேவனுடைய மனமகிழ்ச்சிக்குரிய ஊழியர் ஒருவர், மேடைக்குச் செல்ல அதற்கு அருகில் இருந்த அறையில் காத்திருந்தார். குறித்த நேரம் வந்தவுடன் மேடையின் வாசல்வழிய அவர் நுழைந்தபோது, அரங்கில் இருந்தோர் எழுந்து நின்று இடிமுழக்கம்போல கரவொலி எழுப்பினர். அந்த ஊழியரோ உடனடியாகப் பின்புறமாகச் சென்று தன்னைத் தொடர்ந்து வந்தவர்கள் முன்சென்று அந்தப் பாராட்டைப் பெற்றுக்கொள்ளும்படியாகத் தன்னை மறைத்துக்கொண்டார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தன்னலமற்ற குணத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். நாம் உயர்த்தப்படும்படி அவர் தம்மைத் தாழ்த்தினார். நாம் ஐசுவரியராகும்படி அவர் தரித்திரரானார். நாம் வாழும்படி அவர் மரித்தார்.

„கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது’

2 Januar

»In der Demut einer den anderen höher achtend als sich selbst.« Philipper 2,3b

Andere höher zu achten als sich selbst ist unnatürlich; die gefallene menschliche Natur wehrt sich dagegen, wenn ihrem Ego ein solcher Schlag versetzt wird. Es ist menschlich einfach unmöglich; wir haben in uns selbst nicht die Kraft, ein solches übernatürliches Leben zu leben. Aber durch die Kraft Gottes ist es möglich; der in uns wohnende Heilige Geist befähigt uns, unser Ich zurückzustellen, so dass andere geehrt werden.

Gideon ist eine schöne Illustration für unseren Vers. Nachdem seine dreihundert Mann die Midianiter geschlagen hatten, rief er die Männer von Ephraim, um dem Feind den Todesstoß zu versetzen. Sie schnitten den Fluchtweg ab und nahmen zwei Fürsten von Midian gefangen. Aber dennoch beklagten sie sich, dass sie nicht eher zu Hilfe gerufen worden waren. Gideon antwortete, die Nachlese Ephraims sei besser als die Weinlese Abiesers (Richter 8,2), d.h. die von den Ephraimiten durchgeführte Säuberungsaktion war nach seinen Worten beeindruckender als der ganze Feldzug Gideons. Diese selbstlose Haltung beruhigte die Männer von Ephraim.

Joab legte große Selbstlosigkeit an den Tag, als er Rabba einnahm und dann David rief, um der so gut wie eroberten Stadt den Gnadenstoß zu versetzen (2. Samuel 12,26-28). Joab war es recht, ja es war sein Wunsch, dass David den Ruhm des Sieges bekommen sollte. Dies war einer der edlen Momente im Leben Joabs.

Der Apostel Paulus achtete die Philipper höher als sich selbst. Er sagte, dass ihr Wandel und Dienst das eigentliche Opfer für Gott war, während er selbst nichts weiter als ein Trankopfer darstellte, das über das Opfer und den Dienst ihres Glaubens gesprengt wurde (Philipper 2,17).

In neuerer Zeit hielt sich einmal ein hoch geschätzter Diener des Herrn zusammen mit anderen bekannten Predigern im Seitenzimmer eines großen Vortragssaales auf und wartete darauf, mit ihnen zusammen die Bühne zu betreten. Als er schließlich in der Tür erschien, erhob sich donnernder Applaus. Doch er ging schnell zur Seite, damit die anderen, die ihm folgten, den Beifall erhielten.

Das größte Beispiel der Selbstverleugnung ist der Herr Jesus. Er erniedrigte Sich Selbst, damit wir erhöht würden. Er wurde arm, damit wir reich würden. Er starb, damit wir leben.

»Diese Gesinnung sei in euch, die auch in Christo Jesu war.«