January

தேவ திட்டத்தில் முன்னேறுதல்

January 13

“I can do all things through Christ which strengthened me.” (Phil. 4:13)

It is easy to misunderstand a verse like this. We read it and immediately think of hundreds of things that we cannot do. In the physical realm, for instance, we think of some ridiculous stunt requiring superhuman power. Or we think of some great mental achievement that lies far beyond us. So the words become a torture to us instead of a comfort.

What the verse actually means, of course, is that the Lord will give us power to do anything He wants us to do. Within the circle of His will there are no impossibilities.

Peter knew this secret. He knew that, left to himself, he couldn’t walk on water. But He also knew that if the Lord told him to do it, then he could do it. As soon as Jesus said, “Come,” Peter got out of the boat and strode across the water to Him.

Ordinarily a mountain will not slide into the sea at my command. But if that mountain stands between me and the accomplishment of God’s will, then I can say “Be removed,” and it will.

What it boils down to is that “His commands are His enablements.” Therefore He will provide strength to bear any trial. He will enable me to resist every temptation and conquer every habit. He will strengthen me to have a clean thought life, to have pure motives, and to always do the thing that pleases His heart.

If I am not getting the strength to accomplish something, if I am threatened with physical, mental or emotional collapse, then I may well question if I have missed His will and am seeking my own desires. It is possible to do work for God that may not be the work of God. Such work does not carry the promise of His power.

So it is important to know that we are moving forward in the current of His plans. Then we can have the joyous confidence that His grace will sustain and empower us.

ஜனவரி 13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13

தேவ திட்டத்தில் முன்னேறுதல்

இத்தகைய வசனத்தின் உண்மையான பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது இயற்கையே. இதனைப் படித்தவுடன், நாம் செய்ய முடியாத நூற்றுக்கணக்கான செயல்களைப்பற்றி எண்ணுகிறோம். நம்முடைய அறிவிற்கு அப்பாற்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்கிறோம். இதன் காரணமாக, இவ்வசனம் நமக்கு ஆறுதலை அளிப்பதற்கு மாறாக இடர்ப்பாட்டினையே அளிக்கிறது.

நாம் என்ன செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறாரோ, அதனைச் செய்து முடிக்கும் திறனை அவர் தந்தருகிறார் என்பதே இவ்வசனத்தின் உண்மையான பொருளாகும். அவருடைய சித்தம் என்னும் வட்டத்திற்குள், முடியாதது என்று ஒன்றுமேயில்லை.

இந்த இரகசியத்தை பேதுரு அறிந்திருந்தார். அவர் தமது சொந்த பலத்தினால், நீரின் மேலே நடக்க இயலாது என்பதை அறிந்திருந்தார். மேலும், அவர் அதனைச் செய்ய வேண்டும் என்று கர்த்தர் கூறினால், தன்னால் அதைச் செய்ய முடியும் என்று அறிந்திருந்தார். “வா” என்று இயேசுகிறிஸ்து கூறிய உடனே, படகிலிருந்து இறங்கி நீரின் மேலே கர்த்தரை நோக்கிப் பேதுரு நடந்தார்.

என்னுடைய கட்டளையின்படி, பொதுவாக ஒரு மலையானது பெயர்ந்து கடலுக்குள் மூழ்கிவிடாது. கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதற்கும் எனக்கும் இடையில் அந்த மலையானது நிற்குமென்றால், அப்பொழுது அம்மலையை நோக்கி, “பெயர்ந்து போ” என்று நான் கூறும் வேளையில், அது அங்கிருந்து பெயர்ந்து போகும்.

சுருங்கக் கூறின், “அவருடைய கட்டளைகள், அவரால் செயலாற்றக் கூடியவையே.” ஆகவே, எல்லாவிதச் சோதனையையும் தாங்க அவர் பெலன் தருவார். ஓவ்வொரு சோதனையை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு பழக்கத்தை வெற்றிகொள்ளவும் எனக்குத் தேவையான வலிமையைத் தருகிறார். தூய சிந்தனையோடு கூடிய வாழ்க்கையைக் கொண்டிருக்கவும், தூய்மையான நோக்கங்களை உடையவனாயிருக்கவும், அவருடைய உள்ளத்திற்குப் பிரியமானதைச் செய்யவும் அவர் எனக்கு வலிமையைத் தருகிறார்.

ஏதோ ஒன்றைச் செய்து முடிக்கத் திறன் அற்றுப்போவேனென்றால், அதாவது சரீரத்திலும், மனதிலும், உணர்ச்சியிலும் செயலற்றுப்போவேனென்றால், அவருடைய சித்தத்தைத் தவறவிட்டு, என்னுடைய சுயவிருப்பதை நாடுகிறவனாகச் செயல்புரிகிறேனோ என்று என்னையே நோக்கிப் கேள்வி கேட்கவேண்டும். தேவனுக்கென்று பணிபுரிகிறவனாகத் தோன்றினாலும் உண்மையில் தேவனுடைய பணியைச் செய்யாதவனாக நான் இருப்பேன். அவர் வாக்களித்த வல்லமையை அத்தகைய செய்கையில் காண இயலாது.

ஆகவே, அவருடைய திட்டங்களில் நீரோட்டத்தில் நாம் முன்னேறிச் செல்கிறவராக இருக்கிறோம் என்ற அறிவு இன்றியமையாதது. அவ்வாறு நாம் பெற்ற அறிவு நம்மைத் திடங்கொள்ளச்செய்து, பெருமகிழ்ச்சியின் நம்பிக்கையை நமக்களிக்கும்.

13. Januar

»Alles vermag ich in dem, der mich kräftigt.« Philipper 4,13

Ein solcher Vers wird leicht missverstanden. Wir lesen ihn und denken sofort an Hunderte von Dingen, die wir nicht tun können. Im physischen Bereich denken wir beispielsweise an irgendeinen lächerlichen Kraftakt, der übermenschliche Stärke erfordert. Oder wir denken an eine große geistige Errungenschaft, die weit außerhalb unserer Reichweite liegt. So werden diese Worte für uns zu einer Folter statt zum Trost.

Der Vers bedeutet in Wirklichkeit natürlich etwas anderes, nämlich dass der Herr uns Kraft geben wird, alles zu tun, was Er von uns möchte. Innerhalb des Bereichs Seines Willens gibt es nichts Unmögliches.

Petrus kannte dieses Geheimnis. Er wusste, dass er – auf sich allein gestellt – nicht auf dem Wasser gehen konnte. Aber er wusste auch, dass er es dann tun konnte, wenn es der Herr befahl. Sobald der Herr Jesus gesagt hatte: »Komm«, stieg Petrus aus dem Boot und schritt über das Wasser zu Ihm.

Normalerweise wird auf meinen Befehl hin kein Berg ins Meer rutschen. Aber wenn der Berg zwischen mir und der Erfüllung des Willens Gottes steht, dann kann ich sagen: »Hebe dich hinweg«, und es wird geschehen.

Worauf es letztendlich hinausläuft ist, dass »Seine Gebote auch Seine Befähigungen sind«. Deshalb wird Er uns Kraft verleihen, jede Prüfung zu ertragen. Er wird mich befähigen, jeder Versuchung zu widerstehen und jedes Laster zu überwinden. Er wird mich kräftigen, Sauberkeit in meine Gedanken hineinzubringen, reine Motive zu haben und immer das zu tun, was Seinem Herzen wohlgefällig ist.

Wenn ich nicht die Kraft bekomme, etwas zu vollbringen, wenn ich von physischem, geistigem oder emotionellem Zusammenbruch bedroht bin, dann muss ich mir wohl die Frage stellen, ob ich Seinen Willen verfehlt habe und die Befriedigung meiner eigenen Lüste suche. Es ist möglich, für Gott zu wirken, ohne dass dies notwendigerweise das Werk Gottes ist. Solches Wirken ist nicht von der Verheißung Seiner Kräftigung begleitet.

Es ist also wichtig zu wissen, dass wir uns im Strom Seiner Pläne vorwärts bewegen. Dann haben wir die freudige Zuversicht, dass uns Seine Gnade aufrechterhalten und kräftigen wird.