February

தேக்கநிலைக் கிறிஸ்தவர்கள்

February 6

“Be ye doers of the word, and not hearers only, deceiving your own selves.” (James 1:22)

There is a subtle deception that attending meetings, conferences and seminars is doing the work of God. We listen to messages and talk about what we know we should be doing, and the delusion creeps over us that we are accomplishing His will. What we are actually doing is increasing our responsibility and deceiving ourselves. We deceive ourselves that we are spiritual when actually we might be quite carnal. We deceive ourselves that we are growing when the truth is that we are stagnant. We deceive ourselves that we are wise when we are pathetically foolish.

Jesus said that the wise man is the one who hears His words and does them. The foolish man also hears His words but does nothing about them.

It is not enough to listen to a sermon and walk away saying “What a marvelous message.” The true test is when we go away saying, “I will do something about what I heard.” Someone has said that a good sermon not only stretches the mind, warms the heart, and tans the hide but it also provokes the will to action.

In the middle of his message, a preacher once asked his audience the name of the first hymn they had sung. No one knew. He asked the text of Scripture that had been read. No one knew. He asked what announcements had been made. No one could remember. The people were playing church.

Before every meeting, we might well ask ourselves the following questions. Why did I come? Am I willing to have God speak to me personally? Will I obey Him if He does?

The Dead Sea justly earned its name by constant input without corresponding outflow. In our lives, information without application leads to stagnation. The Savior’s persistent question comes home to us, “Why call ye me Lord, Lord and do not the things that I say?”

பெப்ரவரி 6

நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்.1:22).

தேக்கநிலைக் கிறிஸ்தவர்கள்

சபைக்கூட்டங்களிலும், சிறப்புக்கூட்டங்களிலும், இறைவசனக் கலந்துரையாடல்களிலும் பங்குகொள்ளும் பழக்கத்தில் ஒருவகையான ஏமாற்றும் வஞ்சகம் கலந்திருக்கிறது. இவ்விடங்களில் தேவனுடைய வார்த்தைகளைச் செய்திகளாகக் கேட்கிறோம். நாம் ஆற்றவேண்டிய பணிகளைக் குறித்து உரையாடுகிறோம். இவையே, அவருடைய சித்தத்தை நாம் நிறைவேற்றுகிறோம் என்னும் ஒரு தவறான நம்பிக்கைக்குள் நம்மை ஆழ்த்திவிடுகிறது. மாறாக, இவை நம்முடைய பொறுப்புகளை அதிகப்படுத்துகின்றன. உண்மையிலேயே நாம் மாம்சத்திற்கு உரியவர்களாக இருந்தபோதிலும், நாம் ஆவிக்குரியவர்கள் என்று நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம். வளர்ச்சியற்று தேக்கநிலையில் இருந்தபோதிலும், நாம் வளர்ச்சியடைகிறோம் என்று வீணாக நம்பி ஏமாறுகிறோம். பரிதவிக்கும் மதியீனராக இருந்தபோதிலும், ஞானமுள்ளவாகள் என்று நம்மைப் பற்றிக் கற்பனை செய்துகொள்கிறோம்.

தமக்குச் செவிகொடுத்து அதன்படி செய்கிறவனே ஞானமுள்ளவன் என்பது இயேசு கிறிஸ்துவின் கூற்று. மாறாக மதியீனன் அவருடைய வார்த்தைகளைக் கேட்டும் அதைக் குறித்து ஒன்றும் செய்கிறதில்லை.

அருட்செய்தியைக் கேட்டு, “எவ்வளவு அற்புதமான செய்தி“ எனக் கூறிச் செல்வதில் பயனேதுமில்லை. நான் கேட்டதைக் குறித்து எதையாகிலும் செய்வேன்“ என்று கூறுவதே தகும். மனதின் சிந்தனையை வளர்ப்பதோ, இதயத்தைக் களிகூரச் செய்வதோ, தோலின் நிறம் மாறுவது போன்று மேற்போங்கான மாற்றத்தைக் கொண்டு வருவதோ நல்ல செய்தி ஆகாது. நாம் எடுத்துக்கொண்ட சித்தத்தை ஆக்க பூர்வமாக நிறைவேற்றச் செய்வதே நல்ல செய்தியாகும்.

அருட்செய்தியை வழங்கிக்கொண்டிருந்த ஒரு சொற்பொழிவாளர் தனது செய்தியை நிறுத்தி, நாம் பாடிய முதல் பாடலின் தலைப்பு என்ன என்று கேட்டார். ஒருவருக்கும் விடை தெரியவில்லை. வாசித்த வேத பகுதி என்ன என்று கேட்டார். விடைபகர்வார் ஒருவருமில்லை. கொடுத்த அறிவிப்புகள் எவை என்று வினவினார். மௌனம் தொடர்ந்தது. கூடிவந்த கூட்டத்தினர், சபைக்கூட்டத்தை விளையாட்டுத் திடல் என்று நினைத்தனர் போலும்.

ஓவ்வொரு கூட்டத்தின் தொடக்கத்திலும் கீழ்க்காணும் வினாக்களை நாம் நமதுள்ளத்தில் எழுப்பவேண்டும். இங்கு நான் எதற்காக வந்திருக்கிறேன் ? தனிப்பட்ட முறையில் இன்றைக்கு தேவன் என்னோடு பேசுவதற்கு நான் விருப்பம் உடையவனாக இருக்கிறேனா? அவ்வாறு அவர் பேசுவராயின், அதற்கு நான் கீழ்ப்படிவேனா?

சாவுக்கடலுக்குள் நீரானது தொடர்ந்து உட்புகுந்த வண்ணமாயிருக்கும். ஆயின் அங்கிருந்து நீர் வெளியேறுவதில்லை. அதன் காரணத்தினால் அக்கடல் சாவுக்கடல் என்னும் பெயர் பெற்றது. அதுபோலவே நமது வாழ்விலும் தொடர்ந்து செய்திகளைக் கேட்டும், அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருப்போமென்றால், நாம் தேக்கநிலையில் இருக்கிறோம் என்பதே அதன் பொருளாகும். „ நான் சொல்லுகிறதைச் செய்யாமல், கர்த்தாவே! கர்த்தாவே! என்று ஏன் என்னை அழைக்கிறீர்கள்? என்று வலியுறுத்திக் கர்த்தர் கேட்கும் கேள்வி நமது இதயத்தில் ஊடுருவிப் பாயட்டும் !

6. Februar

»Seid aber Täter des Wortes und nicht allein Hörer, die sich selbst betrügen.« Jakobus 1,22

Unter uns herrscht oft die gefährliche Selbsttäuschung, dass das Besuchen von Zusammenkünften, Konferenzen und Seminaren schon das Tun des Werkes Gottes ist. Wir hören Botschaften und reden über das, was wir – wie wir alle wohl wissen – eigentlich tun sollten, und langsam schleicht sich die Illusion ein, dass wir Seinen Willen erfüllen. Was wir in Wirklichkeit tun, ist nur, unsere Verantwortung zu vergrößern und uns selbst zu betrügen. Wir betrügen uns selbst darin, dass wir uns für geistlich halten, wenn wir in Wirklichkeit vielleicht durch und durch fleischlich sind. Wir betrügen uns darin, dass wir zu wachsen meinen, während wir in Wirklichkeit auf der Stelle treten. Wir betrügen uns darin, dass wir uns für weise halten, während wir erbärmlich dumm sind.

Der Herr Jesus sagt, dass derjenige weise ist, der Seine Worte hört und sie auch tut.Auch der Tor hört Seine Worte, aber er setzt sie nicht in die Tat um.

Es genügt einfach nicht, sich eine Predigt anzuhören und dann mit den Worten wegzugehen: »Was für eine wunderbare Botschaft.« Entscheidend ist, dass wir nach Hause gehen und sagen: »Das, was ich gehört habe, werde ich jetzt in die Tat umsetzen. « Jemand hat einmal gesagt, dass eine gute Predigt nicht nur den Geist erweitert, das Herz wärmt und das Fell gerbt, sondern auch den Willen zum Handeln motiviert.

Mitten in einer Botschaft fragte ein Prediger einmal seine Zuhörer, welches Eingangslied sie gesungen hatten. Niemand wusste es. Er fragte nach dem Bibeltext, der verlesen wurde. Niemand wusste es. Er fragte, welche Ankündigungen gemacht worden waren. Niemand konnte sich erinnern. Diese Menschen spielten Versammlung.

Wir tun gut daran, uns vor jeder Zusammenkunft folgende Fragen zu stellen: Warum bin ich hierher gekommen? Bin ich bereit, Gott zu mir persönlich reden zu lassen? Will ich Ihm gehorchen, wenn Er zu mir spricht?

Das Tote Meer verdient seinen Namen zu Recht, weil ständig Wasser zugeführt wird, ohne dass ein entsprechender Ausfluss stattfindet. In unserem Leben führt Belehrung ohne Anwendung zu Stillstand. Die hartnäckige Frage des Herrn klingt uns in den Ohren: »Was heißet ihr mich aber: Herr, Herr! und tut nicht, was ich sage?«