February

கிறிஸ்து என் பிரதிநிதி

February 7

“I have been crucified with Christ.” (Gal. 2:20 NASB)

When the Lord Jesus died on the Cross, He died not only as my Substitute; He died also as my Representative. He died not only for me but as me. When He died, there is a real sense in which I died. All that I was as a child of Adam, all my old, evil, unregenerate self was nailed to the Cross. In God’s reckoning, my history as a man in the flesh came to an end.

That is not all! When the Savior was buried, I too was buried. I am identified with Christ in His burial. This pictures the removal of the old “I” from God’s sight forever.

And when the Lord Jesus arose from the dead, I arose too. But the picture changes here. It is not the one who was buried who arose, not the old self. No, it is the new man – Christ living in me. I arose with Christ to walk in newness of life.

God sees all this as having taken place positionally. Now He wants it to be true practically in my life. He wants me to reckon myself to have gone through this cycle of death, burial and resurrection. But how do I do this?

When temptation comes to me, I should reply to it exactly as a corpse reacts to any solicitation to evil. No response! I should say, in effect, “I have died to sin. You are no longer my master. I am dead as far as you are concerned.”

Day by day I should reckon my old, corrupt self to have been buried in the grave of Jesus. This means I will not be introspectively occupied with it. I will not look for anything worthwhile in it or be disappointed at its utter corruption.

Finally, I will live each moment as one who has risen with Christ to newness of life—new ambitions, new desires, new motives, new freedom and new power.

George Muller told how this truth of identification with Christ first came home to him:

There was a day when I died. Died to George Muller, his opinions, preferences, tastes and will; died to the world, its approval or censure, to the approval or blame even of my brothers or friends, and since then, I have studied only to show myself “approved unto God.”

பெப்ரவரி 7

கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன் (கலா. 2:20)

கிறிஸ்து என் பிரதிநிதி

எனக்குப் பதிலாளாக மட்டுமின்றி என்னுடைய பிரதிநிதியாகவும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணத்தைத் தழுவினார். அஃதாவது எனக்காக அவர் அடைந்த மரணத்தில், நானும் மரித்தேன். அவர் அடைந்த மரணத்தில், நான் அடைந்த மரணத்தின் உண்மை அடங்கியிருக்கிறது. இதுகாறும் ஆதாமின் பிள்ளையாக இருந்தேன். எனது முந்தின வாழ்வின் பொல்லாப்பும், சுயமும் சிலுவையில் அறையுண்டன. தேவனின் கணக்கின்படி எனது மாம்சத்திற்குரிய சரித்திரம் முற்றுப்பெற்றது.

இது மட்டுமா! இரட்சகர் அடக்கம்பண்ணப்பட்டபோது அடியேனும் அடக்கம் பண்ணப்பட்டேன். கிறிஸ்துவின் அடக்கத்தில் நான் இணைக்கப்பட்டுவிட்டேன். „நான்“ என்னும் முந்தின மனிதன், என்றென்றிற்குமாக தேவனுடைய பார்வையினின்று அகற்றப்பட்டுவிட்டான் என்னும் சித்திரமாக இது காட்சியளிக்கிறது. மேலும், இயேசு கிறிஸ்து மரித்தோரினின்று உயிரோடு எழுப்பப்பட்டபோது நானும் அவரோடு எழுப்பப்பட்டேன். இப்பொழுது சித்திரம் மாற்றம் அடைகிறது. அடக்கம் செய்யப்பட்ட முந்தின மனிதன் உயிர்த்தெழவில்லை. அதாவது பழைய சுயம் எழவில்லை. புதிய மனிதனே உயிர்த்தெழுந்துள்ளான். அதாவது கிறிஸ்து எனக்குள் வாழ்கிற புதிய மனிதனாக எழுந்துள்ளேன். புதிய வாழ்வினை நடத்திட கிறிஸ்துவுடன் எழுந்துள்ளேன்.

இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நாம் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் இவையாவும் என் வாழ்வில் நடந்தவையாக தேவன் காண்பிக்கிறார். ஆயின் இவை நடைமுறையில் உண்மையாக விளங்கவேண்டும். மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் என்னும் சுழற்சிக்குள் நான் சென்றுவந்ததாக என்னைக்குறித்து நானே கணக்கிட்டுக்கொள்ளவேண்டுமென தேவன் விரும்புகிறார். இதனை எங்ஙனம் நான் செயலாற்றுவேன்?

சோதனை வருங்கால், பிணம் எங்ஙனம் செயலற்றுக் காணப்படுமோ அங்ஙனமே நாமும் செயலற்றுக் காணவேண்டும். மொத்தத்தில், „ பாவத்திற்கு நான் இறந்துவிட்டேன். பாவமே! இனிமேல் நீ எனது எஜமான் அல்ல. உன்னைப் பொருத்தவரை நான் இறந்துவிட்டேன்“ என்று சொல்லக்கடவோம்.

இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் பொல்லாங்கு நிறைந்த என்னுடைய சுயம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது என்று ஒவ்வொரு நாளும் நான் எண்ணிக்கொள்ளவேண்டும். அதாவது என்னுடைய சுயத்தைக் குறித்த சிந்தனையில் நான் மூழ்கியிருக்கக் கூடாது. ஏதொவொரு நன்மையாகிலும் அதில் காணவேண்டும் என்று விரும்பி, பின்னர் அதில் ஒரு நன்மையும் காணாமல் மனமடிவு கொள்ளவேண்டாம்.

கடைசியாக, புதிய வாழ்வைப் பெற்ற மனிதனாக, புதிய நோக்குடன், புதிய விருப்பத்துடன், புதிய குறிக்கோளுடன், புதிய விடுதலையுடன், புதிய வலிமையுடன் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு வேளையும் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவனாக நான் வாழ்ந்திடுவேன் என்று ஒவ்வொருவரும் உறுதிகொள்வோம்.

முதன்முதலில் கிறிஸ்துவுடன் இணைந்த உண்மையை ஐhர்ஜ் முல்லர் வர்ணிக்கிறார்: என் வாழ்வில் ஒரு நாள் ஐhர்ஜ் முல்லர் என்னும் நான் இறந்துவிட்டேன். அவருடைய கருத்துக்கள், விருப்பங்கள், ஈடுபாடுகள், சித்தங்கள் யாவும் இறந்துவிட்டன. இந்த உலகத்திற்கு நான் மரித்தேன். நண்பர்களாலும், உறவினர்களாலும் சரி என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் தவறு என்று புறக்கணிக்கப்படுவதற்கும் மரித்துவிட்டேன். „தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன்“ என்று காண நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

7. Februar

»Ich bin mit Christo gekreuzigt.« Galater 2,20

Als der Herr Jesus am Kreuz starb, starb Er nicht nur als mein Stellvertreter, Er starb auch als meine Verkörperung. Er starb nicht nur für mich, sondern auch als meine Person. Als Er starb, bin in einem sehr realen Sinn auch ich gestorben. Alles, was ich als Sohn Adams war, mein ganzes altes, böses, nicht wiedergeborenes Ich wurde an das Kreuz genagelt. Nach Gottes Gedanken hat damit meine Geschichte als Mensch im Fleisch ein Ende gefunden.

Aber das ist noch nicht alles! Als unser Heiland begraben wurde, wurde auch ich begraben. Ich bin einsgemacht mit Christus in Seinem Begräbnis. Das bedeutet das Wegtun des alten Ich aus Gottes Augen für immer und ewig.

Und als der Herr Jesus von den Toten auferstand, bin auch ich auferstanden. Aber hier ändert sich das Bild. Nicht derjenige, der begraben wurde, ist auferstanden, nicht das alte Ich. Nein, es ist der neue Mensch – Christus lebend in mir. Ich bin mit Christus auferstanden, um in Neuheit des Lebens zu wandeln.

Gott sieht dies alles als vollendete Tatsachen an – was meine Stellung betrifft. Jetztmöchte Er, dass es in der Praxis meines Lebens Wirklichkeit wird. Er will, dass ich erkenne und als Tatsache anerkenne, dass ich durch diesen Kreislauf von Tod, Begräbnisund Auferstehung gegangen bin. Aber wie kann ich das verwirklichen?

Wenn die Versuchung auf mich eindringt, sollte ich darauf genauso antworten, wie ein Leichnam auf eine Herausforderung zum Bösen reagiert: keine Reaktion! Ich muss praktisch sagen: »Ich bin der Sünde gestorben. Du bist nicht mehr meine Herrin. Was dich betrifft, bin ich tot.«

Tag für Tag sollte ich es als Tatsache anerkennen, dass mein altes, verdorbenes Ich im Grab Jesu sein Ende fand. Das bedeutet, dass ich mit ihm nicht ständig in nabelschauerischer Weise beschäftigt bin. Ich erwarte überhaupt nichts Gutes mehr von ihm und bin auch von seiner absoluten Verderbtheit nicht mehr enttäuscht.

Schließlich werde ich andererseits jeden Augenblick leben als jemand, der mit Christus zu neuem Leben auferstanden ist – neuen Zielen, neuen Wünschen, neuen Motiven, neuer Freiheit und neuer Kraft. Georg Müller erzählt, wie ihm diese Wahrheit der Einsmachung mit Christus zum ersten Mal klar wurde:

»Es gab einen Tag, an dem ich starb. Für Georg Müller starb, seinen Meinungen, seinen Vorlieben, seinen Neigungen und seinem Willen; der Welt starb, ihrem Beifall und ihrer Verachtung, ja auch dem Lob oder Tadel meiner Brüder und Freunde, und seither habe ich nur nach einem gestrebt: mich selbst ›Gott bewährt darzustellen‹.«