December

நோயுற்ற விசுவாசி

December 16

“Bless the Lord, O my soul, and forget not all his benefits:…who healeth all thy diseases.” (Psa. 103:2, 3b)

One of the compound names of God is Jehovah-Rapha, meaning “I am the Lord that healeth thee” (Ex. 15:26b). It is God who heals us. He heals us of all kinds of diseases, and will ultimately deliver us permanently from every form of sickness.

Sometimes He heals us through the tremendous recuperative powers which He has placed in our bodies. This is why doctors often say, “Most things are better by morning.” Sometimes He heals through medicines and surgery. Dubois, the famous French physician, said, “The surgeon dresses the wound; God heals it.” Sometimes He heals miraculously. We know this from the Gospels and from personal experience.

However, it is not always God’s will to heal. If it were, some would never grow old and die. But everyone dies sooner or later -until the Lord comes. God did not remove Paul’s physical affliction but gave Him grace to bear it (2 Cor. 12:7-10).

In a general sense, all sickness is a result of sin. In other words, if there never had been any sin, there wouldn’t be any sickness. Sometimes illness is a direct result of sin in a person’s life. For example, alcoholism sometimes causes liver disease, smoking sometimes causes cancer, sexual immorality sometimes causes venereal disease, and worry sometimes causes ulcers. But not all sickness is a direct result of a person’s own sin. Satan caused Job’s serious illness (Job 2:7), and yet Job was the most righteous man on earth (Job 1:8; 2:3). He caused an unknown woman to be afflicted with curvature of the spine (Lu. 13:11-17). And he caused Paul’s thorn in the flesh (2 Cor. 12:7). In John 9:2, 3, it could not have been the man’s own sin that caused him to be born blind. Epaphroditus was critically ill, not because of sin, but because of his untiring service for the Lord (Phil. 2:30). Gaius was spiritually healthy but physically unwell (3 John 2).

Finally, failure to be healed does not necessarily indicate a lack of faith. Only when God has given a specific promise that He will heal can faith claim healing. Otherwise we commit ourselves to our living, loving Lord and pray that His will be done.

டிசம்பர் 16

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே…..உன் நோய்களையெல்லாம் குணமாக்கி…… சங்கீதம் 103:2-3

நோயுற்ற விசுவாசி

தேவனுடைய கூட்டுப் பெயர்களில் ஒன்று யெகோவா ராப்பா என்பதாகும். ‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” என்பது இப்பெயரின் பொருளாகும். (யாத்.15:26). நமது நோய்களையெல்லாம் நீக்கி அவர் நம்மைக் குணமாக்குகிறார். முடிவில் எல்லாவித நோய்களிலிருந்தும் நிரந்தரமாக விடுதலையை அவர் அளிப்பார்.

நோயினின்று மீள்வுறும் வலிமையை நமது உடலுக்குக் கொடுத்து, அவர் சிலவேளைகளில் நமக்குக் குணமளிக்கிறார். அவ்வப்போது மருத்துவர்கள் இதனைக் கூறுகின்றனர். ‘காலையில் எல்லாம் சரியாகி விடும்”. சிலவேளைகளில் மருத்துக்களாலும் அறுவைச் சிகிச்சையினாலும் அவர் குணமாக்கிறார். பிரான்சு நாட்டுப் புகழ்பெற்ற மருத்துவர் டூபாய்ஸ் என்பார், ‘மருத்துவர் புண்ணைக் கட்டுகிறார், தேவன் அதை ஆற்றுகிறார்” எனக் கூறியுள்ளார். சிலவேளைகளில் அவர் வியத்தகு முறையில் குணமளிக்கிறார். இதனை நாம் நற்செய்தி நூல்களில் காண்கிறோம். நமது வாழ்வின் அனுபவங்களின் வாயிலாக இதனை நாம் அறிந்திருக்கிறோம்.

இருந்த போதிலும் எல்லா நேரங்களிலும் குணமாக்குதல் தேவனுடைய சித்தமாக இருப்பதில்லை. அவ்வாறு இருக்குமென்றால் சிலர் முதிர்வயது அடைந்து இறந்துபோக மாட்டார்கள். ஆயின் நமது கர்த்தர் மீண்டும் வரும்வரை எல்லோரும் சீக்கிரமாகவே அல்லது காலம் தாழ்த்தியோ இறந்தே ஆகவேண்டும். தனது சரீரத்தில் பாடுகள் உடையவராக இருந்த பவுலுக்கு, தேவன் அப்பாடுகளிலிருந்து உடல் நலத்தைக் கொடுக்கவில்லை. மாறாக அதனைத் தாங்குவதற்குத் தேவையான கிருபையையே அருளினார் (2.கொரி.12:7-10).

பொதுவான நிலையில், எல்லா நோய்களும் பாவத்தின் விளைவாக இருக்கின்றன. அதாவது, பாவம் ஒருக்காலும் செய்யப்படாதிருந்தால், நோய்கள் ஒன்றும் மனிதனுக்கு வந்திருக்காது. ஒரு தனி மனிதனுடைய சொந்த வாழ்வில் செய்த பாவத்தின் நிமித்தமாக, சிலவேளைகளில் அவனுக்கு நோய் உண்டாகிறது. எடுத்துக்காட்டாக, மது அருந்தல் சிலவேளைகளில் ஈரலில் நோயை உண்டாக்கிறது. புகைப்பழக்கம் சிலவேளைகளில் புற்றுநோயை உண்டாக்குகிறது. சிற்றின்ப சீர்கேடு பாலியல் நோய்களை விளைவிக்கிறது. ஆனால் எல்லா நோய்களும் அம்மனிதனுடைய சொந்தப் பாவத்தினால் ஏற்படுவதில்லை. யோபுவின் வியாதிக்கு சாத்தான் காரணமாயிருந்தான் (யோபு 2:7). ஆனாலும் யோபு உலகில் மிகுந்த நீதிமானாக இருந்தான். (யோபு 1:8, 2:3). பெயர் தெரியாத ஒரு பெண்மணியின் கூனலான முதுகுக்குச் சாத்தானே காரணமாயிருந்தான் (லூக்:13:11-17). பவுலின் சரீரத்தில் இருந்த முள்ளுக்கும் சாத்தானே காரணன் (2.கொரி.12:7). தனது பிறப்பிலேயே குருடனாகப் பிறந்த மனிதனின் குறைபாட்டிற்கு அவனுடைய பாவம் காரணமல்ல (யோவான் 9:2-3). எப்பாப்பிரா தீத்து மரணத்திற்குச் சமீபமானபடி நோயுற்றிருந்தான். அது அவனுடைய பாவத்தினால் உண்டானதன்று. கர்த்தருக்காக அயராது உழைத்ததின் நிமித்தம் அவன் நோய்வாய்ப்பட்டான். (பிலி.2:30). ஆவிக்குரிய வகையில் நலம் கொண்டிருந்த காயு, சரீரத்தில் நோயுற்றவனாகக் காணப்பட்டான் (3.யோவான் 2).

இறுதியாக, நோயுற்ற விசுவாசி குணம் பெறாததற்கு அவனுடைய விசுவாசக் குறைவே காரணம் என்று சொல்லிவிட முடியாது. தேவன் குறிப்பிட்ட வகையில் குணப்படுத்துவதாக வாக்களித்து இருப்பாராயின், விசுவாசத்தின் மூலம் அதனைப் பெற்றிட இயலும். இல்லையெனில், ஜீவனுள்ள அன்புகூருகிற கர்த்தரிடத்தில் நமது வாழ்க்கையை ஒப்புவித்து, அவருடைய சித்தம் நிறைவேறும்படி மன்றாடவேண்டும்.

16. Dezember

»Preise den Herrn, meine Seele, und vergiss nicht alle seine Wohltaten …, der da heilt alle deine Krankheiten.« Psalm 103,2.3b

Einer der alttestamentlichen Namen für Gott ist Jehova-Rapha, das bedeutet: »der Herr, der dich heilt« (siehe 2. Mose 15,26b). Gott ist es, der uns gesund macht. Er heilt uns von allen möglichen Gebrechen, und Er wird uns letzten Endes für immer von jeder Form der Krankheit erlösen.

Manchmal heilt Er uns durch die unglaublich starken Gesundungskräfte, die Er in unserem Körper angelegt hat. Deshalb sagen die Ärzte oft: »Die meisten Dinge sehen am anderen Morgen besser aus.« Manchmal heilt Er auch durch Medizin und durch Operationen. Dubois, ein berühmter französischer Arzt, hat einmal gesagt: »Der Arzt verbindet die Wunde, aber Gott heilt sie.« Manchmal heilt Er auch auf wunderbare Weise. Das wissen wir aus den Evangelien und auch aus persönlicher Erfahrung.

Es ist jedoch nicht immer der Wille Gottes, uns zu heilen. Wenn es so wäre, dann würden ja manche Menschen niemals alt werden und sterben. Aber jeder stirbt früher oder später – bis der Herr wiederkommt. Gott hat auch das körperliche Leiden des Paulus nicht weggenommen; Er hat ihm aber die Gnade geschenkt, es zu ertragen (siehe 2. Korinther 12,7-10).

Allgemein gesehen ist alle Krankheit eine Folge der Sünde. Damit meine ich: Wenn es nie eine Sünde gegeben hätte, dann gäbe es auch keine Krankheit. Manchmal ist Krankheit auch die direkte Folge der Sünde im Leben eines Menschen. Beispielsweise ruft Alkoholismus manchmal Leberkrankheiten hervor, Rauchen verursacht manchmal Krebs, sexuelle Unzucht führt manchmal zu Geschlechtskrankheiten, und Ärger bringt einem manchmal Magengeschwüre ein. Aber nicht jede Krankheit ist eine direkte Folge der Sünde dieses Menschen. Satan fügte Hiob schlimme Krankheiten zu (siehe Hiob 2,7), und doch war Hiob der gerechteste Mensch auf Erden (siehe Hiob 1,8; 2,3). Er quälte eine unbekannte Frau mit einer Verkrümmung des Rückgrats
(siehe Lukas 13,11-17). Und er war die Ursache für den »Dorn für das Fleisch« bei Paulus (siehe 2. Korinther 12,7). In Johannes 9,2.3 wird von einem Blindgeborenen gesprochen, der nicht durch eigene Sünde seine Krankheit verschuldet haben konnte. Epaphroditus war ernsthaft krank, doch nicht wegen einer Sünde, sondern wegen seines unermüdlichen Dienstes für den Herrn (siehe Philipper 2,30). Und Gajus war geistlich gesehen gesund, aber körperlich kränklich (siehe 3. Johannes 2).

Schließlich muss man noch hinzufügen: Wenn man nicht geheilt wird, weist das nicht notwendigerweise darauf hin, dass man zu wenig Glauben hat. Nur wenn Gott Seine spezielle Zusage gegeben hat, dass Er heilen wird, kann der Glaube die Heilung für sich beanspruchen. Sonst überlassen wir uns unserem lebendigen, liebevollen Gott und beten darum, dass Sein Wille
geschieht.