December

தியாகத்தின் பலன்

December 15

“They that sow in tears shall reap in joy. He that goeth forth and weepeth, bearing precious seed, shall doubtless come again with rejoicing, bringing his sheaves with him.” (Psa. 126:5, 6)

In Psalm 126 the children of Israel are reminiscing about their return to the land after their captivity in Babylon. It had been as if they were in a dream world, filled with laughter and singing. Even their pagan neighbors had commented on the great things the Lord had done for His people.

Now that they were back in their own land, they had to start planting crops. But this posed a problem. They had brought back only a limited amount of grain with them. They could use it as food now; after all, there were no crops in the field for them to harvest. Or they could use it as seed, sowing it in the ground with the hope of an abundant harvest in days to come. If they decided to use most of it as seed, that meant that they would have to live frugally and sacrificially until harvest time. They decided on the latter course.

As the farmer went out into his fields, dipped his hand into the seed, and scattered it broadcast on the plowed land, he would shed tears at the thought of the privations he and his family would have to endure until the time of harvest.

But later when the fields teemed with golden grain, his tears would be turned to joy as he brought the ripened sheaves back to the barn. All the sacrifices his household had made would be richly rewarded.

We can think of this in connection with our own stewardship of material things. The Lord entrusts each of us with a limited amount of money. We can spend it in self-indulgence, buying up whatever our hearts desire. Or by living sacrificially we can invest it in the work of the Lord—in foreign missions, in Christian literature, in Gospel radio broadcasts, in the local church and in many other forms of evangelistic activity. In that case it will mean choosing a modest standard of living so that everything above essentials will go into the work of the Lord. It will mean living on a restricted budget so that souls will not perish for want of the Gospel.

But any such sacrifices will not be worth mentioning when the time of harvest comes, when we will see men and women in heaven as a result of our sacrificial living. One person saved from hell to become a worshiper of the Lamb of God for all eternity is worth any sacrifice we can make now.

டிசம்பர் 15

கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பர்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான். ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கம்பீரத்தோடே திரும்பிவருவான். சங்.126:5-6

தியாகத்தின் பலன்

பாபிலோன் நாட்டில் சிறையிருப்பினின்று மீண்டுவந்த இஸ்ரவேலர் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பின நிகழ்ச்சியை மீண்டும் எண்ணிப்பார்ப்பதை 126ம் சங்கீதம் விவரிக்கின்றது. நகைப்பிலும் பாடலிலும் நிறைந்து கனவுலகில் நடப்பவர்களாக அவர்கள் காணப்பட்டனர். தமது மக்களுக்குக் கர்த்தர் செய்த மகத்துவமான செயல்களைக் கண்ட புறஇன அயலத்தார் அவரைப் புகழ்ந்தனர்.

இப்பொழுது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி விட்டனர். நிலத்தில் பயிர் விளைவிக்க வேண்டும் ஆயின் இதில் ஒரு பிரச்சனை எழுந்தது. சிறிதளவு தானியத்தையே அவர்கள் பாபிலோனிலிருந்து கொண்டு வந்திருந்தனர். தற்காலத்தில் உணவாக அதனைப் பயன்படுத்தலாம். இல்லையேல் பயிர் விளைவிக்க விதையாகப் பயன்படுத்தலாம். வயல் வெளியில் அறுவடை செய்யத்தக்க விளைச்சல் ஏதும் இல்லை. பயிரிடுகிறவர்கள் எனில் உரிய காலத்தில் பெரும் மகசூல் கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கிறது. அதில் பெரும்பகுதியை விதைத்துவிட்டால், அறுவடைக் காலம்வரைச் சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும். தங்களது வாழ்க்கைத் தேவைகளைத் தியாகம் செய்திட வேண்டும். அவர்கள் தியாக வழியையே தெரிந்தெடுத்தனர்.

உழவன் தன்னுடைய வயல் வெளிக்குச் சென்று, உழப்பட்ட நிலத்தில் விதையை அள்ளித்தூவும் வேளையில், தானும் தனது இல்லத்தாரும் அறுவடைக் காலம்வரை அடையப் போகிற வறுமையை எண்ணிக் கண்ணீர் சிந்துகிறான்.

ஆனால் பின்னர் பொன்மயமான கதிர்கள் முற்றி அந்நிலத்தில் அசைந்து ஆடும்போதும், முற்றிய கதிரை அறுத்து, தானியத்தைக் களஞ்சியத்திற்குக் கொண்டு வரும்போதும் அவனுடைய அழுகை களிப்பாக மாறும். அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் செய்த தியாகத்தின் விளைவாகப் பெரும் பயனைஅடைவர்.
பொருட்செல்வத்தைக் குறித்து நமக்கு அளிக்கப்பட்டுள்ள உக்கிராண ஊழியத்தோடு இதனை ஒப்பிட்டுக் காணலாம். நம் ஒவ்வொருவரிடத்திலும் கர்த்தர் ஓரளவு பணத்தைக் கொடுத்திருக்கிறார். நமது உள்ளம் விரும்புகிற அனைத்தையும் நாம் அப்பணத்தைக்கொண்டு வாங்கலாம். அல்லது தியாக மனப்பான்மையோடு வாழ்ந்து அப்பணத்தைக் கர்த்தருடைய பணிக்காகச் செலவுசெய்யலாம். வெளிமாநிலங்களில் உழைக்கும் இறைப்பணியாளர்கள், கிறிஸ்தவ இலக்கியங்கள், வானொலி ஊழியங்கள், உள்ளுர் சபையில் நடக்கும் நற்செய்திப்பணி, அனைத்தும் தேவையுள்ள ஊழியங்களாகும். நமது வாழ்க்கைத்தரம் மிகையின்றிக் காணப்பட்டு, அதற்கு மேலாக நாம் ஈட்டுபவை அனைத்தையும் கர்த்தருடைய பணிக்காகச் செலவிடுவது என்பதே அதன் பொருளாகும். நற்செய்தி கிடைக்காமல் ஆத்துமாக்கள் அழிந்து போவதற்கு, நாம் செலவிடும் வீணான செலவுகள் காரணமாக அமைந்துவிடக் கூடாது.

அறுவடைக் காலத்தில், அதாவது நமது தியாக வாழ்க்கையின் விளைவாக ஆண்களையும் பெண்களையும் விண்ணுலகில் நாம் காணும் வேளையில், நாம் செய்த தியாகம் ஒன்றுமில்லை என்பது விளங்கும். நரகத்திலிருந்து ஒரு ஆத்துமா விடுவிக்கப்பட்டு, தேவ ஆட்டுக்குட்டியை என்றென்றும் தொழுது கொள்கிறவராக மாறுவார் எனில், நாம் செய்கிற தியாகம் எத்தனை பெரிதாக இருந்தாலும், அது தகும்.

நித்தியத்தைக் குறித்து கவலையின்றி இவ்வுலக வாழ்வுக்கென உழைப்போர், கொஞ்சகாலத்திற்கு ஞானிகளாகவும், நித்திய காலத்திற்கு மதியீனராகவும், இருக்கின்றனர்.

15. Dezember

»Die mit Tränen säen, werden mit Jubel ernten. Er geht weinend hin und trägt den Samen zum Säen. Er kommt heim mit Jubel und trägt seine Garben. « Psalm 126,5.6

In Psalm 126 erinnern sich die Kinder Israels an ihre Rückkehr in ihr Land nach der langen Gefangenschaft in Babylon. Es war so, als ob sie träumten, sie waren voller Lachen und Singen. Selbst ihre heidnischen Nachbarn hatten damals von den großen Dingen geredet, die der Herr an Seinem Volk getan hatte.

Und jetzt, wo sie wieder in ihrem Heimatland waren, mussten sie auch die Felder neu bestellen. Aber da gab es Probleme. Sie hatten nur eine begrenzte Menge an Getreide mitgebracht. Das konnten sie jetzt für ihr eigenes Essen nehmen, denn schließlich war ja auf den Feldern nichts gewachsen, was sie ernten konnten. Oder aber sie konnten es als Saatgut einsetzen und es in die Erde säen, in der Hoffnung auf eine reiche Ernte in späterer Zeit. Wenn sie sich dafür entschieden, das meiste als Saatgut zu gebrauchen, dann hieß das, dass sie jetzt sehr bescheiden leben und bis zur Erntezeit viele Opfer bringen mussten. Sie entschieden sich aber für diesen Weg.

Wenn der Bauer dann auf sein Feld ging, die Hand in die Körner tauchte und sie breitwürfig auf das gepflügte Land ausstreute, dann vergoss er manchmal Tränen bei dem Gedanken daran, welche Not er und seine Familie noch erdulden müssten, bis die Zeit der Ernte herankam.

Aber später, als die Felder voller goldener Ähren standen, wurden seine Tränen in Freude verwandelt, wenn er schließlich die gereiften Garben zurück in seine Scheune brachte. Für alle Opfer, die sie gebracht hatten, würden sie jetzt reichlich entschädigt werden.

Wir können hier auch die Verbindung herstellen zu unserer eigenen Haushalterschaft in materiellen Dingen. Der Herr vertraut jedem von uns eine begrenzte Menge Geld an. Das können wir für unsere eigenen Wünsche ausgeben und uns kaufen, wonach unser Herz verlangt. Oder aber wir können sehr sparsam leben und Geld in die Arbeit des Herrn investieren, in Missionsgesellschaften, die im Ausland arbeiten, in christliche Literatur, in Rundfunksendungen, die das Evangelium verbreiten, in unsere Ortsgemeinde und in viele andere Formen der evangelistischen Arbeit. In diesem Fall wird das heißen, dass wir selbst einen bescheidenen Lebensstil haben, damit alles, was über das Lebensnotwendige hinausgeht, in die Arbeit des
Herrn fließen kann. Wir kommen dann mit einem eingeschränkten Haushalt aus, damit nicht irgendwo Menschen verloren gehen, nur weil sie nichts vom Evangelium gehört haben.

Aber alle solche Opfer werden gar nicht mehr der Erwähnung wert sein, wenn die Erntezeit kommt, wenn wir im Himmel Männer und Frauen sehen werden, die aufgrund unseres opferbereiten Handelns dort sind. Ein Mensch, der vor der Hölle bewahrt blieb und von jetzt an bis in alle Ewigkeit das Gotteslamm anbetet, der ist doch jedes Opfer wert, das wir hier nur bringen können.