April

காணிக்கை என்னும் உகந்தபலி

April 7

“But I have all, and abound: I am full, having received of Epaphroditus the things which were sent from you, an odour of a sweet smell, a sacrifice acceptable, wellpleasing to God.” (Phil. 4:18)

Paul’s letter to the Philippians was really an acknowledgment of a gift which he had received from the believers at Philippi. We are probably safe in assuming that it was a gift of money. The surprising thing is the way in which the apostle magnifies the gift. He calls it “an odour of a sweet smell, a sacrifice acceptable, wellpleasing to God.” In Ephesians 5:2 He uses a similar expression to describe Christ’s great gift of Himself at Calvary. He speaks of it as “an offering and a sacrifice to God for a sweetsmelling savour.” It is breathtaking to think that a gift given to a servant of the Lord should be memorialized with language similar to that which describes the Unspeakable Gift.

J. H. Jowett comments finely on this point. “How vast, then, is the range of an apparently local kindness! We thought we were ministering to a pauper, and in reality we were conversing with the King. We imagined that the fragrance would be shut up in a petty neighborhood, and lo, the sweet aroma steals through the universe. We thought that we were dealing only with Paul, and we find that we were ministering to Paul’s Savior and Lord.” When we understand the true spiritual nature of Christian giving and the vast range of its influence, we are delivered from giving grudgingly or of necessity. We are immune forever to the gimmickry of professional fund-raisers who extort by cajolery, pathos or comedy. We see that giving is a form of priestly service, not a legal enaction. We give because we love, and we love to give.

The truth that my minuscule gifts to the Great God fill the throne room of the universe with fragrance should inspire me to humble worship and hilarious giving. Never again will the offering on Sunday morning be a boring, if necessary, part of the service. It will be as truly a means of giving directly to the Lord Jesus as if He were bodily present.

ஏப்ரல் 7

எல்லாம் எனக்குக் கிடைத்தது¸ பரிப10ரணமும் உண்டாயிருக்கிறது¸ உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோ தீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தி அடைந்திருக்கிறேன். (பிலிப்பியர் 4:18)

காணிக்கை என்னும் உகந்தபலி

உண்மையில் பிலிப்பு நகர விசுவாசிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஈவிற்கு நன்றிகூறி எழுதிய மடலே¸ பவுல் பிலிப்பியர்களுக்கு எழுதிய நிருபமாகும். அந்த ஈவு பணமாகத் தான் இருக்கும் என்று எண்ணுவதில் எவ்விதத் தவறுமில்லை. அந்த ஈவை அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வளவு மேன்மைப்படுத்தி எழுதியிருப்பதே மிகுந்த வியப்பினை நமக்களிக்கிறது. ‘சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்தபலி” என்று அதனை அழைத்துள்ளார். கல்வாரியில் மாபொரும் ஈவாகத் தம்மையே கிறிஸ்து அளித்ததைத் குறித்து பவுல் எபேசியர் 5:2 ஆம் வசனத்தில் இது போன்றதொரு வாசகத்தால் விளக்கியுள்ளார். ‘தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ” என்று அவர் உரைத்திருப்பதை உற்றுநோக்குங்கள். கர்த்தருடைய ஊழியக்காரர் ஒருவருக்கு நாம் தருகிற ஈவை¸ கர்த்தர் தம்மையே ஒப்புவித்த சொல்லிமுடியாத ஈவுக்கு இணையான சொற்களால் நினைவு கூரும் சின்னமாக விளங்கியிருப்பது எண்ணிப்பார்ப்பதற்கும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
இதனை அழகுற விவரிக்கிறார் த.h ஜோவெட்¸ உள்ளுரில் காட்டுகிற இரக்கம் உண்மையிலேயே எத்தனை பெரிதாயிருக்கிறது! ஒரு தரித்திரனுக்குப் பணிவிடை செய்து அவரோடு அளவளாவுகிறோம் என்றும்¸ நம்மைச் சுற்றியுள்ள சிறுபகுதியில் அந்தத் தூபம் அடைபட்டுகிடக்கும் என்றும் எண்ணுகிறோம். ஆயின்¸ அந்தச் சுகந்தம் பிரபஞ்சம் முழுவதும் மணம் கமழும். நாம் பவுலோடு உறவாடுகிறோம் என நினைக்கிறோம். ஆனால் பவுலுடைய இரட்சகரும் கர்த்தருமாகிய கிறிஸ்துவுக்கே பணிவிடை செய்கிறவர்களாக இருக்கிறோம் என்பதே உண்மை.” கிறிஸ்துவுக்கென்று கொடுப்பதன் உண்மையான ஆவிக்குரிய தன்மையையும் அதனுடைய பரந்த செல்வாக்கையும் நாம் அறிந்திடுவோமாயின்¸ தயக்கத்துடனோ கட்டாயத்தின் அடிப்படைலோ கொடுக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்படுவோம். சிலர் தங்களுடைய பசப்பு வார்த்தைகளினாலும் பரிவு உண்டாக்கும் சொற்களினாலும்¸ நகைசுவையினாலும்¸ பணம் பறிக்கிறார்கள். அத்தகையோர் பணம் சேகரிப்பதைத் தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர். அவர்களது ஏமாற்று வேலையிலிருந்து நாம் தப்ப வேண்டும். ஆனால் கர்த்தர் நிமித்தமாகக் கொடுப்பது என்னும் செயல்¸ ஆசாரிய ஊழியமாக இருக்கிறதேயன்றி¸ அது சட்டப10ர்வமான செயலென்று எண்ணக்கூடாது. நாம் அன்பு கூருகிறதால் கொடுக்கிறோம். மேலும் அவ்வாறு கொடுப்பதிலே இன்பம் கொள்கிறோம்.
நாம் கொடுக்கிற மிகச்சிறிய காணிக்கை¸ இப்பிரபஞ்சத்தின் மகாதேவனுடைய சிங்காசன அவையைச் சுகந்தத்தால் நிரப்பும் என்னும் உண்மை நம்மை தாழ்ந்து பணியவும்¸ மகிழ்ந்து கொடுக்கவும் ஊக்கிவிக்க வேண்டும். ஞாயிறு காலையில் காணிக்கை செலுத்துவது நமக்குக் கட்டாய ஊழியமாகவோ¸ சலிப்புத் தட்டுகிறதாகவோ¸ தோன்றாது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது சரீரத்திலே பிரசன்னமாயிருக்கிறதாகவும்¸ அவரிடம் நேரடியாகக் காணிக்கையைச் செலுத்துவதாகவும் அது எண்ணப்படும்.

7. April

»Ich habe aber alles in Fülle und habe Überfluss; ich bin erfüllt, da ich von Epaphroditus das von euch Gesandte empfangen habe, einen duftenden Wohlgeruch, ein angenehmes Opfer, Gott wohlgefällig.« Philipper 4,18

Paulus’ Brief an die Philipper war eigentlich die Empfangsbestätigung und der Dank für eine Gabe, die er von den Gläubigen in Philippi erhalten hatte. Wir können ziemlich sicher sagen, dass es eine finanzielle Gabe war. Das Erstaunliche ist nun, wie der Apostel diese Gabe rühmt. Er nennt sie »einen duftenden Wohlgeruch, ein angenehmes Opfer, Gott wohlgefällig«. In Epheser 5,2 gebraucht er einen ähnlichen Ausdruck, um Christi unbeschreibliche Gabe Seiner Selbst auf Golgatha zu beschreiben. Es heißt dort: »… als Darbringung und Schlachtopfer, Gott zu einem
duftenden Wohlgeruch «. Es nimmt uns schier den Atem, wenn wir uns vorstellen, dass die einem Diener des Herrn gegebene Gabe mit einer Sprache beschrieben wird ähnlich der, welche die Unaussprechliche Gabe rühmt.

J.H. Jowett (1864-1923, englischer Prediger, zeitweilig in New York, Nachfolger Campbell Morgans in Westminster Chapel) kommentiert dazu treffend: »Wie gewaltig ist also die Reichweite einer scheinbar örtlich und zeitlich beschränkten gütigen Handlung! Wir dachten, einem Armen zu helfen, und hatten in Wirklichkeit Umgang mit dem König selbst. Wir glaubten, der Wohlgeruch bliebe auf eine unbedeutende Gegend beschränkt, und siehe, der liebliche Duft verbreitete sich im ganzen Universum. Wir meinten, es nur mit Paulus zu tun zu haben, und stellen fest, dass wir Paulus’ Herrn und Erlöser gedient haben.« Wenn wir die wahre geistliche Natur christlichen Gebens und seinen weit reichenden Einfluss verstehen, dann sind wir von gezwungenem und mürrischem Geben ein für alle Mal befreit. Wir sind für alle Zeiten immun gegen die Tricks professioneller Spendeneintreiber, die durch Schmeichelei und theatralische Methoden die Gläubigen zu erpressen suchen. Wir sehen, dass Geben eine Form priesterlichen Dienstes, nicht gesetzlicher Verpflichtung ist. Wir geben, weil wir lieben, und wir lieben es, zu geben.

Die Wahrheit, dass meine winzigen Gaben an den großen Gott den Thronsaal des Universums mit Wohlgeruch füllen, sollte mich zu demütiger Anbetung und freudigem Geben anspornen. Dann wird das Zusammenlegen der Gaben am Sonntagmorgen nie wieder ein langweiliger, wenn auch notwendiger Teil des Gottesdienstes. Es ist dann ebenso sehr ein Mittel, etwas dem Herrn Jesus direkt und persönlich zu geben, als wenn Er leiblich gegenwärtig wäre.