கர்த்தரிடத்தில் திரும்புவோம்
2025 ஜனவரி 1 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,1 முதல் 2 வரை) “ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்” (வசனம் 1). மோவாபியர் இஸ்ரவேலருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து சென்றார்கள். அதாவது மோவாபியர் தாவீதின் காலந்தொடங்கி (2 சாமுவேல் 8,2), ஆகாபின் காலம் வரையும் இஸ்ரவேல் நாட்டின் ஆதிக்கத்தின்கீழ் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் ஆகாபின் மரணத்திற்குப் பின் அவனுடைய மகன் அகசியா ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே அவர்கள் கலகம் செய்தார்கள்,…