January

மனக்கடினத்துக்குத் தண்டனை

2025 ஜனவரி 11 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,11 முதல் 12 வரை)  “மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்” (வசனம் 11). இரண்டாவதாக அனுப்பபட்ட தளபதியும் முதல் தளபதி செய்த தவறையே செய்தான். முதல் தளபதிக்கு என்ன நேரிட்டது என்பதை இவன் உணர்ந்திருப்பானானால் இத்தகைய தவறை மீண்டும் செய்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. துக்கமான காரியம் என்னவென்றால், வேதாகமத்தின்…

January

உடனடியான தண்டனை

2025 ஜனவரி 10 (வேதபகுதி: 2 ராஜாக்கள் 1,10)  “அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்” (வசனம் 10). எலியாவைத் தேவனுடைய மனிதன் என்று கூறியும், அதைக் காட்டிலும் ராஜாவின் அதிகாரம் பெரிதானது என்று நிரூபிக்க முயன்ற அந்த தலைவனுக்கு, இவ்விரண்டு அதிகாரங்களுக்குமாக வேறுபாட்டை எலியா காண்பிக்க விரும்பினான். “நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன்…

January

இறுதியான கீழ்ப்படிதல்

2025 ஜனவரி 9 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,9)  “அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்” (வசனம் 9). அரசன் அகசியாவின் நோக்கம் வெளிப்படையாக இருந்தது. தனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொன்ன எலியாவைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் அல்லது தண்டிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தலைவனின் கீழ் ஐம்பது வீரர்களை அனுப்பினான். சில நேரங்களில்…

January

ஆடையும் ஆற்றலும்

2025 ஜனவரி 8 (வேதபகுதி: 2 ராஜாக்கள் 1,8)  “அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்” (வசனம் 8). கர்த்தருடைய தீர்க்கதரிசிகளிலேயே எலியா மிகவும் வேறுபட்டவனாக விளங்கினான். இவன் ஒரு நாடோடித் தீர்க்கதரிசி. இவன் எங்கே தங்கியிருக்கிறான், எப்பொழுது வருவான் என்பதுகூட ஒருவராலும் கணிக்க முடியாததாகவே இருந்தது. அவன் கர்த்தருடைய கையசைவுக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். இந்த வேறுபாடு அவனது செயலில் மட்டுமின்றி, உடைகளிலும் காணப்பட்டது. “அவன் மயிர் உடையைத்…

January

முக்கியமானதைத் தேடுவோம்

2025 ஜனவரி 7 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,7)  “அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு எதிர்ப்பட்டு வந்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்டவன் என்று கேட்டான்” (வசனம் 7). செய்தியைக் காட்டிலும், செய்தியாளர் யார் என்பதை அறிவதிலுள்ள ஆர்வம் அகசியாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். நமக்கு ஒரு கடிதம் வந்தால், அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று அறிந்துகொள்கிற ஆர்வத்தைக் காட்டிலும், அதைக் கொண்டுவருகிற அஞ்சல்காரன்…

January

நம்பிக்கையும் விசுவாசமும்

2025 ஜனவரி 6 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,5)  “இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்” (வசனம் 5). எலியா கர்த்தருடைய வார்த்தையின்படி புறப்பட்டுச் சென்று, “நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (வசனம் 4) என்று அகசியா அனுப்பிய வேலைக்காரர்களிடம் கூறினான். எலியா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து சென்றான். தேவனுடைய ஊழியக்காரர்களாகிய நம் ஒவ்வொருவரிடத்திலும்…

January

மரண வாசனை

2025 ஜனவரி 5 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,4 முதல் 5 வரை)  “இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்” (வசனம் 4). “நீ ஏறின கட்டிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய்” என்னும் கடுமையான தீர்ப்பை எலியா தீர்க்கதரிசி அகசியாவுக்கு விரோதமாக வழங்கினான். ஒரு விசுவாச துரோக மன்னனுக்கு இதைக் காட்டிலும் மென்மையான தீர்ப்பை எதிர்பார்ப்பது தேவனுடைய…

January

இறுதி வாய்ப்பு

2025 ஜனவரி 4 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,3 முதல் 4 வரை)  “கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?” (வசனம் 3). அகசியா தன் நோயிலிருந்து மீண்டு வருவேனா என்பதை ஏன் கர்த்தரிடம் விசாரிக்கவில்லை. கர்த்தர் இருக்கிறார் என்பதை அவன் அறிவான், அவரிடத்தில் கேட்டால் அவர் பதில் அளிப்பார் என்பதையும் அவன் அறிவான். ஆயினும்…

January

தவறுமேல் தவறு

2025 ஜனவரி 3 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,2)  “அகசியா … எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்” (வசனம் 2). அகசியா தான் வியாதி நீங்கிப் பிழைப்பேனோ என்று பெலிஸ்தியர்களின் தெய்வமாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரிக்கும்படி ஆட்களை அனுப்பினான். பெலிஸ்தியர் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அவற்றில் ஒன்றுதான் இந்த, “பாகால்சேபூ”. இது ஈக்களால் பரப்பப்படும் நோய்களைத் தடுக்கும் கடவுள் என்று அவர்களால் நம்பப்பட்டு வந்தது. மிகவும் ஆற்றல்வாய்ந்த ஒன்றாகக்…

January

வேண்டாத அந்நிய காரியங்கள்

2025 ஜனவரி 2 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,2)  “இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்” (வசனம் 2). வியாதிப்படுக்கையில் கிடந்த அகசியாவுக்கு தான் குணமாகி உயிர் பிழைப்பேனா என்னும் சந்தேகம் ஏற்பட்டது. விசுவாசியாக இருந்தாலும், அவிசுவாசியாக இருந்தாலும் ஏதாவது நோய் ஏற்பட்டால் இந்த வியாதியிலிருந்து நான் மீண்டு வருவேனா என்ற கேள்வி எழுவது இயல்பு. ஏனெனில் நாம் இந்தப் பூமியில் நீண்ட நாட்கள்…