ஒப்புவித்தலுக்கான ஆசீர்வாதம்
2025 ஜனவரி 21 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,11) “அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில்…”(வசனம் 11). யோர்தானைக் கடந்து எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துபோனார்கள். அவர்கள் எதைப் பற்றி அல்லது யாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்? என்ன பேசினார்கள் என்று நமக்குத் தெரிவிக்கப்படாவிட்டாலும், எலிசாவின் வருங்கால ஊழியத்தைக் குறித்தும், இஸ்ரவேல் நாட்டின் நிலையைக் குறித்தும் பேசியிருக்கலாம். மல்கியா தீர்க்கதரிசி எழுதியிருக்கிறதைப் போல, கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் என்ன பேசியிருப்பார்களோ அதையே இவர்களும் பேசியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறுரூப மலையில்,…