January

பெரிய சாட்சி முன் எளிய ஆரம்பம்

2025 ஜனவரி 31 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,11 முதல் 12 வரை)  “அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்”(வசனம் 12). இராணுவம் பாலைவனத்தில் மாட்டிக்கொண்டது. போரைத் தொடங்குவதற்கு முன்னரே குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை, உணவின் கையிருப்பும் குறைந்துபோயிற்று. “அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டான்” (வசனம் 11). இத்தகைய…

January

குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை

2025 ஜனவரி 30 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,4 முதல் 10 வரை)  “ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்”(வசனம் 3). மோவாபின் அரசன் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபுக்கு கப்பமாகச் செலுத்திவந்த ஒரு லட்சம் ஆட்டுக் குட்டிகளையும், ஒரு லட்சம் குறும்பாட்டுக்கடாக்களையும் அவனுடைய மரணத்திற்குப் பின் நிறுத்தினான். யோராமுக்கோ அது கவலை அளிக்கிற காரியமாக இருந்தது. ஏனெனில் மோவாப் ராஜாவிடமிருந்து பெறப்பட்ட கப்பம் இஸ்ரவேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு…

January

இரு மனத்திலிருந்து விடுதலை அடைவோம்

2025 ஜனவரி 29 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,1 முதல் 3 வரை)  “என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்”(வசனம் 3). யோராம் இஸ்ரவேலின் அரசர்களிலேயே மிகவும் மோசமானவனாக அறியப்பட்டவர்களின் ஒருவனாகிய ஆகாபின் மகன்களில் ஒருவன். ஆகாபின் மூத்த மகன் அகசியா தந்தையைப் பின்பற்றி பொல்லாதவனாக நடந்து, கர்த்தருடைய கோபத்திற்கு ஆளாகி, எலியாவின் முன்னுரைப்பின்படியே பிள்ளையின்றி இறந்துபோனதால் அந்த இடத்திற்கு வந்தவன் யோராம். தந்தையும்,…

January

துக்கமான நிகழ்வு

2025 ஜனவரி 28 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,23 முதல் 25 வரை)  “அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்து போகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்”(வசனம் 23). ஒருங்கிணைந்த இஸ்ரவேல் நாட்டிலிருந்து பத்துக் கோத்திரங்கள் பிரிந்து வடபகுதியில் தங்களுக்கென ஒரு ராஜ்யத்தை அமைத்துக்கொண்டபோது, அதன் முதல் ராஜாவாகிய யெரொபெயாம் மக்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ள எருசலேமுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக இரண்டு கன்றுக் குட்டி…

January

புதுமையான ஊழியம்

2025 ஜனவரி 27 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,19 முதல் 22 வரை)    “அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்”(வசனம் 21). எலியாவைத் தேடச் சென்ற பலவான்களான மனிதர்கள் திரும்பி வருகிற வரையிலும் எலிசா எரிகோவில் தங்கியிருந்தான். அவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி வந்தபின், எரிகோவின் மக்கள் எலிசாவிடம் தங்கள் ஊரைப் பற்றிய குறைபாட்டைத் தெரிவித்தார்கள்.…

January

குழப்பத்திற்குச் சாய்ந்துபோக வேண்டாம்

ஜனவரி 26 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,16 முதல் 18 வரை)  “ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள்”(வசனம் 14). எலியாவின் ஆவி எலிசாவினிடத்தில் இறங்கியிருக்கிறது என்று கண்டுகொண்ட தீர்க்கதரிசிகளின் புத்திரரால் எலியா பரலோகத்திற்கு ஏறிச் சென்றான் என்பதை நம்பமுடியவில்லை. கிறிஸ்தவ விசுவாசிகளாக இருந்தும் சிலர் இன்னமும் அவிசுவாசத்தின் கரையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இவர்களால் தேவனுடைய வல்லமையின் அக்கினி ரதத்தையும், அக்கினிக் குதிரைகளையும்…

January

ஊழியத்தைத் தொடங்குதல்

2025 ஜனவரி 25 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,14 முதல் 15 வரை)  “எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்”(வசனம் 14). எலிசா திரும்பி வந்தான், எதைக் கடந்து சென்றார்களோ அது மீண்டும் அவனுக்கு குறுக்கே இருந்தது. இப்பொழுது அவன் எலியாவைத் தேடவில்லை, மாறாக எலியாவின் தேவனைத் தேடினான். கரைபுரண்டு ஓடுகிற யோர்தான் எலியாவுக்கு மட்டுமின்றி, எலிசாவுக்கும் குறுக்கே நின்றது, அதை அவன் கடந்துவர…

January

தாக்கத்தை எடுத்துக்கொள்ளுதல்

2025 ஜனவரி 24 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,13)  “பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்து …”(வசனம் 13). எலியா பரலோகத்திற்கு ஏறிச் சென்றபோது அவனுடைய தோளிலிருந்த சால்வை கீழே விழுந்தது. மேலே பார்த்துக்கொண்டிருந்த எலிசா குனிந்து அதை எடுத்துக்கொண்டான். அந்தச் சால்வை வானத்திலிருந்து நேரடியாக எலிசாவின் தோளின்மீது விழவில்லை. எலிசா அதை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதாவது எலியாவின் ஊழியத்தை நான் தொடர்ந்து செய்ய விரும்புகிறேனா என்பதை எலிசாவே முடிவு செய்ய வேண்டியிருந்தது.…

January

தாக்கத்தை விட்டுச் செல்லுதல்

2025 ஜனவரி 23 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,12)  “அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்”(வசனம் 12). எலியா, உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் என்னுடைய ஆவியின் வரம் உனக்கு இரட்டிப்பாய் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்று எலிசாவிடம் கூறியிருந்தான். எலிசாவின் விடாமுயற்சியின் விளைவாக எலியா பரலோகத்திற்கு ஏறிச் சென்றதை அவன் கண்களால் கண்டான். “அதை எலிசா கண்டு” (வசனம் 12)…

January

உலகத்தை விட்டுப் பிரிதல்

2025 ஜனவரி 22 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,11)  “இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்”(வசனம் 11). நெருப்புக் குதிரைகள் பூட்டப்பட்டிருந்த ஒரு அக்கினி ரதம் திடீரெனத் தோன்றி, உரையாடியபடியே நடந்து சென்றுகொண்டிருந்த எலியாவையும் எலிசாவையும் பிரித்தது. இது ஒரு வித்தியாசமான அதிசயம். “தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்” (எபிரெயர் 1,7) என்று தேவதூதர்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் தம்முடைய…