February

எளிமையான வாழ்க்கை

2025 பிப்ரவரி 9 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,10)  “நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்”(வசனம் 10). ஒரு தேவனுடைய மனிதனுக்கு என்ன தேவைகள் இருந்திருக்கும்? “ஓர் உண்மையான தேவனுடைய மனிதனின் வாழ்க்கை தேவனுக்குள் மறைக்கப்பட்டுள்ளதால் உலகப்பிரகாரமான தேவைகள் மிகவும் குறைவாகவே தேவைப்படுகிறது” என்று திருவாளர் எப். பி. மேயர் கூறியிருக்கிறார். சூனேமியாள் எலிசாவுக்குச் செய்து கொடுத்தவை யாவை? ஒரு மேல் அறை,…

February

ஆவிக்குரிய வளர்ச்சி

2025 பிப்ரவரி 8 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,10)  “நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்”(வசனம் 10). பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள பக்தியுள்ள சிறந்த ஒரு பெண்மணியைப் பற்றி நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். முதலாவது அவளுடைய விருந்தோம்பலைக் கண்டோம். இந்த விருந்தோம்பல் எலிசாவுக்கும் இவளுடைய குடும்பத்திற்கும் இடையே ஒரு நெருக்கமான உறவைக் கொண்டுவந்தது. ஒரு சிறிய நற்கிரியை ஒரு பெரிய தீர்க்கதரிசியின் நட்பை…

February

விருந்தோம்பலின் மேன்மை

2025 பிப்ரவரி 7 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,8 முதல் 9 வரை)  “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்”(வசனம் 8). சூனேம் ஊரில் ஒரு கனம்பொருந்திய பெண் தன் கணவனுடன் வசித்து வந்தாள். எலிசா ஒரு நாள் அங்கே சென்றான். இந்தப் பெண்ணுக்கும் எலிசாவுக்குமான உறவு ஒரு விருந்தோம்பலில் தொடங்கியது. நம்முடைய ஊர்களுக்கு அல்லது நம்முடைய சபைகளுக்கு புதிதாக வருகிற தேவனுடைய பிள்ளைகளை…

February

விசுவாசமும் கீழ்ப்படிதலும்

2025 பிப்ரவரி 6 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,2 முதல் 7 வரை)  “வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்”(வசனம் 2). கடன் பிரச்சினையின் தவிப்பினாலும், பிள்ளைகள் அடிமைகளாகக் கொண்டுபோகப்படுவார்களோ என்னும் பயத்தினாலும் இந்த ஏழை விதவைத் தாய் எலிசாவிடம் ஓடிவந்தாள். ஒரு தாயின் உள்ளம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்பதை இக்காட்சி நம்முடைய கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.…

February

ஆபத்துக்காலத்தில் கேட்கப்பட்ட உதவி

2025 பிப்ரவரி 5 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,1)  “தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; …”( வசனம் 1). முந்தைய வேதபகுதியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோமோ அதுபோன்றதொரு பாடத்தையே இதிலும் கற்றுக்கொள்கிறோம். தண்ணீரைச் சேமிக்கும்படி பள்ளத்தாக்கில் பள்ளங்களைத் தோண்டினது போலவே, எண்ணெயைச் சேமிக்கும்படி காலிப் பாத்திரங்களை வாங்க வேண்டும். எலிசா எப்போதும் ஓர் ஆர்ப்பாட்டமான அல்லது மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதங்களைச் செய்கிறவர்…

February

முழு ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கத் தவறுதல்

2025 பிப்ரவரி 4 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,21 முதல் 27 வரை)  “மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது”(வசனம் 22). தாகந்தீர்க்கும் தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள், வீரர்களைச் சரீரச் சோர்விலிருந்து  காப்பாற்றியது மட்டுமின்றி, எதிரிகளைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கும் காரணமாக அமைந்தன. தேவன் எப்போதுமே பன்முகத்தன்மையுடன் செயல்படுகிறவர். அவர் ஒரே காரியத்தை ஒருவருக்கு ஒருவிதமாகவும் இன்னொருவருக்கு வேறுவிதமாகவும் பயன்படுத்த வல்லவர். இந்த மூன்று ராஜாக்களுக்கும் வெற்றிக்குக்…

February

ஆசீர்வாதத்திற்கான கீழ்ப்படிதல்

2025 பிப்ரவரி 3 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,18 முதல் 20 வரை)  “மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று”(வசனம் 20). “இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்” (வசனம் 18). தண்ணீருக்காக கர்த்தருடைய ஊழியரைத் தேடிச் சென்றவர்களுக்கு, எதிரியின்மீது வெற்றி என்னும் வாக்குறுதியையும் சேர்த்துப் பெற்றார்கள். தேவன் உடனடியான தேவைகளைச் சந்திக்கிறவர் மட்டுமின்றி, நீண்ட கால அடிப்படையிலான தேவைகளையும் சந்திக்கிறார்.…

February

ஆசீர்வாதத்திற்கான ஆயத்தம்

2025 பிப்ரவரி 2 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,15 முதல் 17 வரை)  “நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்”(வசனம் 17). கர்த்தர் யோசபாத்திற்கு மட்டுமின்றி இஸ்ரவேலின் ராஜாவுக்கும் ஏதோமின் ராஜாவுக்கும் தயை பாராட்டினார். பல நேரங்களில் நம்முடைய தவறுகள், முரட்டாட்டமான காரியங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு கர்த்தர் நம்மிடத்தில் தயையுடன் செயல்படுகிறார். நமது பாவங்கள் ஒருபோதும்…

February

பரிந்துரை மன்றாட்டு

2025 பிப்ரவரி 1 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,13 முதல் 14 வரை)  “எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? ”(வசனம் 13). யூதாவின் ராஜா யோசபாத், இஸ்ரவேலின் ராஜா யோராம், ஏதோமின் ராஜா ஆகிய மூவரும் எலிசாவைத் தேடித் சென்றார்கள். இவர்கள் தங்கள் அதிகாரம், பதவி, பெருமை ஆகியவற்றை மறந்து, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த எளிமையான கர்த்தருடைய மனிதனாகிய எலிசாவிடம் சென்றார்கள். இது இவர்களுடைய மனத்தாழ்மையைக் காட்டுகிறது. நமக்கு உதவி…