February

ஆரோக்கியமானதைப் போதித்தல்

2025 பிப்ரவரி 19 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,38 முதல் 41 வரை)  “அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று”(வசனம் 41). இன்றைய நாளிலும் நேற்றைய பகுதியிலிருந்தே சில காரியங்களைச் சிந்திப்போம். கர்த்தர் பஞ்சத்தை அனுமதித்தது ஏன்? சகலமும் நமக்குச் சம்பூர்ணமாய்க் கிடைத்துக் கொண்டிருந்தால், நமக்கு எவ்விதக் குறைவும் இல்லாமல் எல்லாம் போதுமானதாயிருந்தால் நம்முடைய ஜெபத்திற்கும் விசுவாசத்திற்கும் என்ன வேலையிருக்கிறது?…

February

பாவத்தின் விளைவுகளை வெல்லுதல்

2025 பிப்ரவரி 18 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,38 முதல் 44 வரை)  “எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று”(வசனம் 38). சூனேமியாளின் குமாரனை உயிரோடு எழுப்பிய பிறகு எலிசா அங்கிருந்து நேராகக் கில்காலுக்குச் சென்றான். அங்கே அவனுக்கான பணி காத்திருந்தது. எலிசா பல தடவைகள் சூனேமியாளின் வீட்டுக்கு வந்து, தங்கிச் சென்றிருக்கிறான். ஆயினும் அவளுடைய மகனை உயிரோடு எழுப்பியபின் அங்கு தங்கியிருக்கவில்லை. மேலும் அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயும் திரும்பிச் செல்லவில்லை,…

February

ஊக்கமான ஜெபம்

2025 பிப்ரவரி 17 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,32 முதல் 37 வரை)  “உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து”(வசனம் 33). எலிசா வந்து பார்த்தபோது பிள்ளை இறந்திருந்தது. பிள்ளையை உயிரோடு எழுப்புவதைக் காட்டிலும் எலிசாவுக்கு வேறு வாய்ப்புகள் இருக்கவில்லை. நமது வாழ்க்கையிலும் பலவிதமான வாய்ப்புகளை முயற்சித்தும், இறுதியாக ஒரேயொரு வாய்ப்புக்கு நேராகக் கர்த்தர் நம்மைக் கொண்டுவந்து நிறுத்தின அனுபவத்தைச் சந்தித்திருப்போம். நம்மை முழுவதும் ஆண்டவருக்கு…

February

ஜெபமும் விசுவாசமும்

2025 பிப்ரவரி 16 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,31)  “கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை”(வசனம் 33). எலிசா தன் உதவியாளனாகிய கேயாசியிடம் தன் கோலை கொடுத்து அனுப்பி, குழந்தையின் மேல் வைக்கும்படி சொன்னான். ஒருவேளை எலிசாவைக் காட்டிலும் கேயாசி விரைவாக நடக்கக் கூடியவனாகவோ அல்லது ஓடக்கூடியவனாகவோ இருந்திருக்கலாம். மேலும் பயணம் தாமதமாகிவிடக் கூடாது என்பதற்காக, செல்லும் வழியில் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது…

February

ஊழியரின் தாழ்மை

2025 பிப்ரவரி 15 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,27 முதல் 30 வரை)  “அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான்” (வசனம் 27). சூனேமியாளின் ஆத்துமா இறந்துபோன தன் மகனின் நிமித்தம் மிகவும் துக்கமாயிருந்தது. ஆனால் இது எலிசாவுக்கு தெரியாமல் இருந்துவிட்டது. எலிசா இந்தக் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தவன், அவர்களுக்காக ஜெபித்து வந்தவன். எனினும் அந்தக் குடும்பத்தில் நேரிட்ட துக்கம் இவனுக்குத் தெரியவில்லை. கர்த்தரே இதை அவனுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டார்.…

February

விடாப்பிடியான விசுவாசம்

2025 பிப்ரவரி 14 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,24 முதல் 30 வரை)  “(சூனேமியாள்) கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப்போனாள்” (வசனம் 25). சூனேமியாள் தன் கணவனுக்குத் தகவல் சொல்லியனுப்பிவிட்டு, தன் வேலைக்காரனுடன் எலிசா இருக்குமிடம் நோக்கி விரைந்தாள். எலிசா கர்மேல் மலையில் தங்கியிருந்தான். சூனேம் ஊரிலிருந்து ஏறத்தாழ பதினாறு மைல் என்று சொல்லப்படுகிறது. ஒரு பாசமுள்ள தாயாக தன் மகனைக் காப்பாற்ற இந்தப் பயணத்தை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அவளுடைய மனதில் ஒரேயொரு குறிக்கோள்…

February

விசுவாசத்தைப் பயிற்சித்தல்

2025 பிப்ரவரி 13 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,22 முதல் 23 வரை)  “அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி(னாள்)”(வசனம் 23). சூனேமியாள் தன் கணவனிடம் குழந்தை இறந்துபோனதைச் சொல்லவில்லை, மாறாக, எலிசாவிடம் செல்ல வேண்டும் என்பதை மட்டும் சொல்லியனுப்பினாள். ஒருவேளை இவள் தன் கணவனை ஏமாற்றுகிறாள் என்றோ, கணவனின் ஆலோசனையைக் கேட்காமல் சுயமாய் செயல்படுகிறாளோ என்று தோன்றலாம். அப்படியல்ல, அவள் விசுவாசத்துடன் செயல்பட்டாள், இந்த விசுவாசத்துக்கு பிறருடைய இடையூறு…

February

விசுவாச மங்கை

2025 பிப்ரவரி 12 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,18 முதல் 21 வரை)  “அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்”(வசனம் 20). தேவனுடைய வல்லமையின் செயலால் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூனேமியாள் பெற்றெடுத்த குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது. விசுவாசக் குடும்பங்களில் மிகுந்த சந்தோஷங்களுக்கு நடுவில் இத்தகைய துயரச் சம்பவங்களும் நேரிடும்படி தேவன் அனுமதிக்கிறார். பாவ உலகின் பாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் விசுவாசிகள் விதிவிலக்கானவர்கள் அல்ல. ஆயினும் இத்தகைய தருணங்களை…

February

வாக்குமாறாத தேவன்

2025 பிப்ரவரி 11 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,14 முதல் 17 வரை) “அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான்”(வசனம் 16). தேவனுடைய தீர்க்கதரிசிக்குச் செய்த நன்மைக்குப் பிரதிபலனாக தீர்க்கதரிசியின் தேவனிடமிருந்து குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டாள். இவள் தனக்குப் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் செய்யவில்லை, ஆயினும் அன்பினிமித்தமாகச் செய்கிற கிரியைகளுக்குப் பலன் அளிக்கிற ஆண்டவர் இந்தப் பெண்மணிக்கு இரக்கம் பாராட்டினார். அடுத்த பத்து மாதத்தில் நீ ஒரு குமாரனைப்…

February

அக்கறையுள்ள வாழ்க்கை

2025 பிப்ரவரி 10 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,11முதல் 13 வரை)  “ அதற்கு அவள் (சூனேமியாள்) : என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்”(வசனம் 13). மீண்டும் ஒருநாள்  எலிசா சூனேமியாளின் வீட்டுக்கு வந்து, அந்த மேல் அறைவீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான். இந்த நேரத்தில் தீர்க்கதரிசி எலிசாவுக்கு இந்த வீட்டாரைக் குறித்து கரிசனை உண்டானது. உண்ண உணவு கிடைத்தது, படுக்க இடம் கிடைத்தது என்று எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டுக் கடந்து செல்கிற…