பண ஆசைக்கு விலகியிருத்தல்
2025 பிப்ரவரி 29 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,16) “அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்”(வசனம் 16). தனக்குச் சுகங்கொடுத்த கர்த்தருடைய ஊழியக்காரனை பொருளாதார உதவியினால் தாங்க வேண்டும் என்று நாகமான் தீர்மானித்தது நல்லதொரு செயல்தான். ஆயினும் எலிசாவோ அதற்குச் சிறிதளவேனும் இடங்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய தொகையேனும் அவன் வாங்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான்.…