வசனத்தில் உறுதியுடனிருத்தல்
2025 ஜனவரி 13 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,15) “அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்”(வசனம் 15). “அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே” (வசனம் 15) என்னும் கர்த்தருடைய வார்த்தையின்பேரில் எலியா தன்னை அழைக்கும்படி வந்த அந்த ஐம்பது பேருக்குத் தலைவனுடன் மலையிலிருந்து இறங்கிச் சென்றான். எலியா மிகப் பெரிய வல்லமையும் விசுவாசமுமிக்க தீர்க்கதரிசியாக இருந்தாலும், நம்மைப் போல பாடுள்ள மனிதன் என்ற முறையில் ராஜாவாகிய அகசியாவைச் சந்திக்க…