தாக்கத்தை விட்டுச் செல்லுதல்
2025 ஜனவரி 23 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,12) “அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்”(வசனம் 12). எலியா, உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் என்னுடைய ஆவியின் வரம் உனக்கு இரட்டிப்பாய் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்று எலிசாவிடம் கூறியிருந்தான். எலிசாவின் விடாமுயற்சியின் விளைவாக எலியா பரலோகத்திற்கு ஏறிச் சென்றதை அவன் கண்களால் கண்டான். “அதை எலிசா கண்டு” (வசனம் 12)…