2022 ஜனவரி 15
(வேதபகுதி: யாத்திராகமம் 3:13-15) “அதற்குத் தேவன்: இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார் ” (வச. 14). மோசே இன்னும் தேவனுடைய பணிக்குத் தன்னைத் தகுதியற்றவனாகவே கருதுகிறான். ஆகவே தன்னுடைய அடுத்த மறுப்பை “இஸ்ரவேல் மக்கள் உம்முடைய பெயர் என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன்” என்று கூறுகிறான். “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் எற்படுத்தினவன் யார்” (2:14) என்ற கேள்வியை நாற்பது…