January

வார்த்தையில் உண்மையுள்ள தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 6:1-8) “மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யெகோவா” (வச. 2). சோர்ந்து போயிருந்த மோசேக்கு தொடர்ந்து ஊழியத்தில் பயணிப்பதற்கு ஒரு உறுதியளிப்பும், உற்சாகமூட்டுதலும் தேவைப்பட்டது. தேவன் ஒவ்வொரு பிரச்சினைகளையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை, மேலும் நாம் வைத்திருக்கிற கால அட்டவணையையும் அவர் பின்பற்றுகிறதில்லை. ஆனால் நமக்காக அவர் வைத்திருக்கும் திட்டங்களை அவர் அறிவார் (எரே. 29:11). மோசேயின் கரத்திலிருந்த கோல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துமானால் தேவனுடைய பலத்த கரம் செய்வதை யார் அறிவார். அவை…

January

இக்கட்டில் உதவிசெய்யும் தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 5:15-23) “நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள் ” (வச. 19). இஸ்ரயேலின் மூப்பர்கள் தேவனிடம் வந்து அழுவதற்குப் பதில் நிவாரணம் தேடி பார்வோனிடத்துக்கு ஓடினார்கள் (வச. 15). தூர தேசத்தில் இளைய குமாரன் குறைவுபட்டபோது, உடனடியாகத் தந்தையைத் தேடி வராமல், அங்கேயே பிழைப்பைத் தேடி அழைந்தான் (லூக். 15:15). உண்பதற்குத் பன்றித் தீவனமும் கிடைக்காத…

January

2022 ஜனவரி 23

(வேதபகுதி: யாத்திராகமம் 5:4-14) “அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பாலாயிருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள் ” (வச. 8). “தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும்” (வச. 8) என்பதை கூக்குரலாகவும், வீண் வார்த்தைகளாகவுமே (வச. 9) இந்த உலகம் கருதுகிறது. தன்னுடைய ஆன்மாவின் நிலையை உணர முடியாத ஒருவரால் பிறருடைய ஆவிக்குரிய தேவையையும் உணர முடியாது என்பதே…

January

2022 ஜனவரி 22

(வேதபகுதி: யாத்திராகமம் 5:1-3) “பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிட வேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்” (வச. 1). சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது, பிரச்சினையை விலைகொடுத்து வாங்குவது மட்டுமல்ல, தங்கள் உயிருக்கே உலைவைக்கும் செயலும் ஆகும். ஆயினும், மோசேயும் ஆரோனும் தங்கள் சொந்த மாம்ச பெலத்தை முறியடித்து, தேவனின் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டும், பயந்த இருதயத்தைப் பெலப்படுத்தும் கிருபையைப் பெற்றுக்கொண்டும் பார்வோனுக்கு…

January

2022 ஜனவரி 21

(வேதபகுதி: யாத்திராகமம் 4:27-31) “கர்த்தர் ஆரோனை நோக்கி, நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவ பர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்” (வச. 27). தேவன் நம் வாழ்க்கையை வடிவமைக்கும்போதே, நம்முடைய பயணத்தில் ஏராளமான மனிதர்களைச் சந்திக்கும்படியே திட்டமிட்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், மோசே ஆரோன் சந்திப்பு நடைபெற்றது. மோசேயை ஆயத்தப்படுத்தியதுபோல ஆரோனையும் புறப்பட்டு வர ஆயத்தப்படுத்தினார். அங்கே இருதயங்கள் மகிழ்ந்தன, பாசமழை பொழிந்தது, ஆனந்தக் கண்ணீரில் குளித்தார்கள். சுவிசேஷகனாகிய பிலிப்பு-எத்தியோப்பிய மந்திரி…

January

2022 ஜனவரி 20

(வேதபகுதி: யாத்திராகமம் 4:18-26) “அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டு போனான்” (வச. 20). மோசே என்னும் தனியொருவனை ஆயத்தம் பண்ணிய தேவன் இப்பொழுது அந்தக் கனமான ஊழியத்துக்கு அவனுடைய குடும்பத்தை ஆயத்தம் செய்கிறார். தேவனுடைய மனிதன் என்ற முறையில் உலக மக்களைச் சந்திக்கும் முன் தன் சொந்தக் குடும்பத்தாரை ஆதாயம் செய்ய வேண்டியது மிக அவசியம். தன்…

January

2022 ஜனவரி 19

(வேதபகுதி: யாத்திராகமம் 4:10-17) “அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்கு வல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்” (வச. 10). தேவனையும் தேவனுடைய வல்லமையும் பார்ப்பதற்குப் பதிலாக தன்னையும், தன்னுடைய குறைவுகளையுமே மோசே இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார்; அவனோ என்னிடத்தில் திறமையில்லை என்கிறான். சாக்குப்போக்குகள் தேவையில்லை, என்னைப் பெலப்படுத்தும் என்ற மன்றாட்டே தேவையானது. தேவனுக்குச்…

January

2022 ஜனவரி 18

(வேதபகுதி: யாத்திராகமம் 4:6-9) “மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது” (வச. 6). பாலைவனமும் ஓரேப் மலையும் சந்திக்கிற அடிவாரத்தில் தேவனுடைய அளவற்ற கிருபையும் மனிதனின் அவிசுவாசமும் வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மோசேயின் அவநம்பிக்கையின் இருளைப் போக்க தேவன் மற்றுமொரு கிருபையின் ஒளிக்கீற்றை வீசச் செய்கிறார்.…

January

2022 ஜனவரி 17

(வேதபகுதி: யாத்திராகமம் 4:1-5) “கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்” (வச. 2). தேவனுடைய அழைப்பும் அவரது வாக்குறுதிகளும் மாறாதவை. “அவர்கள் என்னை நம்பார்கள்” (வச. 1) என்பது மோசேயின் நம்பிக்கையின்மையே அன்றி வேறன்று. நல்ல மேய்ப்பன் ஆடுகளின் மேய்ப்பனுடன் பொறுமையுடன் உரையாடுகிறார். விசுவாசத்தில் பின்தங்கியிருக்கிற வேளைகளில் நம்மோடும் இவ்விதமாகவே தேவன் இடைபடுகிறார். ஆடுகளின் பாதுகாவலனாகிய ஒரு மேய்ப்பனிடம் என்ன இருக்கும்? ஒரு கோல். மோசேயிடம் இருந்தவரைக்கும் இது கோல்,…

January

2022 ஜனவரி 16

(வேதபகுதி: யாத்திராகமம் 3:16-22) “அவர்கள் உன் வாக்குக்குச் செவிகொடுப்பார்கள்” (வச. 18). தேவனுடைய கடிகாரம் பூரணமானது, அதன் முட்கள் ஒருபோதும் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ ஓடாது. தேவன் ஏற்ற நேரத்தில் இருதயங்களை ஆயத்தம் செய்கிறார். எபிரெயர்களின் விடுதலைக்கான நேரம் நெருங்கிவிட்டது. என்னுடைய திட்டத்தை மூப்பர்களிடம் அறிவி, அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்கள் என்று தேவனாகிய கர்த்தர் மேசேயிடம் கூறுகிறார். நம்முடைய தேவபணியில் நாம் சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் பொறுமையாய்க் காத்திருந்து ஜெபத்தில் தேவ ஒத்தாசையை நாடும்போது ஏற்ற வேளையில்…