தொடர்ந்து வாய்ப்புக்கொடுக்கிற தேவன்
(வேதபகுதி: யாத்திராகமம் 9:13-35) “அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று”(வச. 23). இந்த முறை பார்வோனுக்கு இழப்பு மிக அதிகம். வானத்திலிருந்து தேவ கோபம் கல்மழையாகவும், நெருப்பாகவும் (வச. 23) நேரடியாக இறங்கியது; வேறு வழியின்றி பார்வோனும் இறங்கி வந்தான். “நான் பாவஞ்செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்” என்றான் (வச. 27). இது ஒரு நேர்மையான மன்னிப்புக்கோரலாக…