என்றென்றும் வழிநடத்தும் கர்த்தர்
(வேதபகுதி: யாத்திராகமம் 13:17-22) “அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன்சென்றார்” (வச. 21). கர்த்தர் பாவிகளுக்கு ஓர் இரட்சகராகவும், அடிமைகளுக்கு ஒரு விடுதலையாளராகவும், பயணிகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறார். தம் மக்கள்மேல் இளகிய மனதுடையவர். தகுதிக்கு மிஞ்சி பாரத்தைச் சுமத்தாதவர். கழுகு தன் குஞ்சுகளை செட்டைகளில் சுமந்து செல்வது போல் சுமந்து செல்கிறவர். போர் நமக்கு மனச்சோர்வை உண்டாக்கும் என்று அறிந்து அதை…