நமது குடும்பங்களை நேசிக்கிற கர்த்தர்
(வேதபகுதி: யாத்திராகமம் 18:1-12) “எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்” (வச. 6). நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் இங்கே மோசேயின் குடும்பத்தாரை மீண்டும் சந்திக்கிறோம் (4:24-26). மோசே அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டிருந்தான் (வச. 2). இப்பொழுது கர்த்தரை முன்னிட்டு மனைவியும் பிள்ளைகளும் மோசேயைத் தேடிவருகிறார்கள். இந்த உலகத்தில், பல நிகழ்வுகளை முன்னிட்டு பல வேளைகளில் நாம் ஒன்று கூடுகிறோம். இவை…