இழப்பைச் சரிசெய்தல் என்னும் நற்குணம்
(வேதபகுதி: யாத்திராகமம் 22:1-15) “ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும் அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்” (வச. 14). இஸ்ரயேலருடைய வாழ்க்கை முறை கிராமத்துடனும், விவசாயத்துடனும், கால்நடைகளுடனும் பின்னிப்பிணைந்தது. கர்த்தர் இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கையில் நேர்மையும் நீதியும் ஒப்புவித்தலும் காணப்படும்படியான சட்டங்களை வரையறுக்கிறார். இவர்களுடைய சொத்துகள், ஆடு மாடுகள், உணவு தானியங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதைக் குறித்து தனிமனிதப் பொறுப்பையும், சமுதாயக் கடமையையும் இது…