தேவகோபம் தணிகிற இடம்
(யாத்திராகமம் 25:17-22; 37:6-9) “பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது” (வச. 17). கிருபாசனம் எவ்விதக் கலப்படமும் இல்லாமல் சுத்தமான பசும்பொன்னினால் ஆனது. உடன்படிக்கைப் பெட்டியைப் போல இதில் சீத்திம் மரம் கலக்கப்படவில்லை. ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்களிலேயே இது ஒன்றுதான் மிகவும் மதிப்புள்ள பரிசுத்த பொருள். இதன்மீது எதிர் எதிராக கீழ்நோக்கிப் பார்த்தவண்ணம் இரு கேருபீன்கள் இருந்தன. இவை வைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலம் பயபக்திக்குரிய இடமாக இருந்தது.…