ஆசாரியத்துவத்தின் சிறப்பு
வேத பகுதி: யாத்திராகமம் 28:2-3 “உன் சகோதரனாகிய ஆரோனுக்கு மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக” (வச. 2). தேவ ஆலோசனையின்படி, மோசேயால் ஆசாரியர்கள் ஒரு சிறப்பு வகுப்பாராக, மக்களுக்காக தேவனிடத்தில் ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்டார்கள். பிற இஸ்ரயேல் மக்கள் அனுபவிக்காத பலவிதமான சிலாக்கியங்களையும் சலுகைகளையும் இவர்கள் அனுபவித்தார்கள். தேவனோடு நெருக்கமான வகையில் உறவாடும் ஆசீர்வாதத்தை இவர்கள் பெற்றார்கள். மக்களின் பிரதிநிதிகளாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் விளங்கினார்கள். புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் ஆசாரியர்கள் என்ற சிறப்பான அந்தஸ்தைப்…