நம்முடைய அன்றாடச் சுத்திகரிப்பு
(வேதபகுதி: யாத்திராகமம் 30:17-21; 38:8) “கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக” (வச. 18). ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்களில், ஆசாரிய ஊழியத்தின் தொடர்பில் மிக முக்கியமானவைகளில் இந்த வெண்கலத் தொட்டியும் ஒன்றாகும். இது பொன் தூபபீடம் வைக்கப்பட்டிருந்த பரிசுத்த ஸ்தலத்துக்கும் வெண்கலப் பலிபீடத்துக்கும் நடுவே வைக்கப்பட்டிருந்தது. பலியின் மூலமாகத் தகுதியாக்கப்படுகிற ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குச் சென்று தூபங்காட்டுவதற்கு முன் (ஆராதிப்பதற்கு முன்)…